அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்
அசாமாச கட்சி AJSU Party | |
---|---|
தலைவர் | சுதேசு மெகடோ |
மக்களவைத் தலைவர் | இல்லை |
தலைமையகம் | சாகட் விகார், கரமு, ராஞ்சி-834 002 (சார்க்கண்ட்).[1] |
கொள்கை | சமூக மக்களாட்சி |
அரசியல் நிலைப்பாடு | Centre-left |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[2] |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2004, 2014) ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (1990) லோக் ஜனசக்தி கட்சி (2005) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 545 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 2 / 81 |
தேர்தல் சின்னம் | |
![]() |
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் என்பது சார்க்கண்ட் மாநில அரசியல் கட்சியாகும். . அனைத்து அசாம் மாணவர் சங்கத்தை மாதிரியாக கொண்டு இக்கட்சி 1986, யூன் 22 அன்று தொடங்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளால் வெறுப்புற்றும் போராட்டம் மூலம் மக்களுக்கு நல்லது கிடைக்கச்செய்யவேண்டும் என்ற நோக்கில் இக்கட்சி அமைக்கப்பட்டது. சார்க்கண்டின் சந்தாலிகள் அதிகமுள்ள பகுதிகளில் (தும்கா, கோட்டா, திவ்கர் மாவட்டங்கள்) இக்கட்சியின் செயற்பாடுகள் அதிகம் இருந்தன.
இக்கட்சி பல பொது மறியல்களில் ஈடுபட்டதுடன் 1989ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலை புறக்கணிக்கவும் பரப்புரை செய்தது. தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையில் இருந்து விலகி 1990ஆம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து சந்தித்தது. அத்தேர்தலில் இக்கட்சியின் வேட்பாளர்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சின்னத்தில் போட்டியிட்டனர். இப்போது இவர்கள் தங்களுக்கான வாழைப்பழ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 2004ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலை பாசகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தது. 2005ஆம் ஆண்டு சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் போது பாசக கூட்டணியில் இருந்து விலகி லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி வைத்து சந்தித்தது.
2014 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பாசகவுடன் கூட்டணி வைத்தது[3]. இத்தேர்தலில் ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது, பாசக 37 இடங்களில் வென்றது. இவை இரண்டும் இணைந்து பெரும்பான்மை பெற்றுள்ளன.
பதினைந்து ஆண்டுகளாக சில்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த இக்கட்சியின் தலைவர் சுதேசு மெகடோ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/Symbols_Notification17.09.2010.pdf
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. 24 அக்டோபர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.dailymail.co.uk/news/article-2807910/Confident-BJP-set-fight-coalition-led-Jharkhand-Amit-Shah-puts-CM-question-burner.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-12-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-11 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)