இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ)
தொடக்கம்21 சூன் 2009
தலைமையகம்புது டெல்லி, இந்தியா
செய்தி ஏடுபுதிய பாதை
தொழிலாளர் அமைப்புSDTU‬ தொழிற்சங்கம்
கொள்கைசமூக சனநாயகம்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
இணையதளம்
http://www.sdpitamilnadu.in
http://www.sdpi.in

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது இசுலாமியர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியானது 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 அன்று தொடங்கப்பட்டது.[1][2]

தேர்தல் பங்களிப்பு[தொகு]

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011[தொகு]

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஐந்து தொகுதியில் போடியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
5 0 19,034 2.68 %[3]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) இணைந்து போட்டியிடும் என்று அறிவித்தது.[4].பின்னர் ஏப்ரல் 7 அன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் கூட்டணியில் இருந்து விலகியது.[5] எஸ்.டி.பி.ஐ கட்சியானது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அப்போதைய தமிழ் மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.[6] 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி போட்டியிட்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
30 0 65985 1.33 % .[7]

புதுச்சேரி[தொகு]

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2016[தொகு]

புதுச்சேரி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
4 0 846 0.82 %[8] .

கேரளா[தொகு]

கேரளா உள்ளாட்சி மன்ற தேர்தல்கள்[தொகு]

2015 ஆன்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி 32 கிராம ஊராட்சி வார்டுகள், 7 நகராட்சி வார்டுகள், ஒரு நகராட்சி வார்டு என 40 இடங்களில் வென்றது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இக்கட்சி 75 கிராம ஊராட்சி வார்டுகள், 1 ஒன்றிய கிராம ஊராட்சி வார்டு, 18 நகராட்சி வார்டுகள், 1 மாநகராட்சி வார்டு என 95 இடங்களில் வென்றது.[9]

கேரளா சட்டமன்றத் தேர்தல், 2011[தொகு]

2011 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 80 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
80 0 158885 1.61 % .[10]

கேரளா சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]

2016 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 82 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
88 0 123241 1.0 % .[11]

பிகார்[தொகு]

பிகார் சட்டமன்றத் தேர்தல், 2020[தொகு]

பிகார் மாநில சட்டமன்றதேர்தலில் எஸ்.டி.பி.ஐ.கட்சி பப்பு யாதவின் ஜான் அதிகார் கட்சி தலைமையிலான முற்போக்கு ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்த கூட்டணியில் சந்திரசேகர ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி, பகுஜன் முக்தி கட்சி,முசுலிம் அரக்ஷ்ன் மோர்ச்சா கட்சியும் அங்கம் வகித்தன. இந்த கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி 14 தொகுதியில் போட்டியிட்டது. [12]

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
14 0 27871 1.12 %.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "SDPI Formed".
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-11 அன்று பரணிடப்பட்டது.
 3. "Tamil Nadu General Election 2011- Report".
 4. "திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும்:அக்கட்சியின் தலைவர் தெஹக்லான் பாகவி". தினமணி (20 மார்ச் 2016). பார்த்த நாள் 20மார்ச் 2016.
 5. "தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. திமுக கூட்டணியில் இருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ கட்சி!". தட்சு தமிழ். பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
 6. "25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ". தட்சு தமிழ். பார்த்த நாள் 13 ஏப்ரல் 2016.
 7. "Puducherry General Legislative Election 2016 - Report". ELECTION COMMISSION OF INDIA.
 8. "Puducherry General Election 2016 - Report".
 9. "Kerala local body elections: SDPI increases its seats by more than 100 per cent".
 10. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2011". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 13 பிப்ரவரி 2021.
 11. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016".
 12. "Bihar Assembly election 2020: Pappu Yadav forms poll alliance with Chandrasekhar Azad to take on ruling NDA" (en) (2020-09-28).
 13. "GENERAL ELECTION RESULT 2020 - BIHAR".