விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைவர் தொல். திருமாவளவன்
தொடக்கம் 1982 - மாவீரன் மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் தமிழக கிளையாக தொடங்கப்பட்டது.
கொள்கை சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
இணையதளம்
http://www.vck.in/

விடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal) தமிழ் நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். 58 இலட்சம் உறுப்பினர்களை கொண்ட குறிப்பிடத்தகுந்த அரசியல் கட்சி ஆகும்.[சான்று தேவை] இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மாவீரன் மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மாவீரன் மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.[1] இக்கட்சி அடித்தட்டு மக்களின் பிரச்சினைக்ளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மாவீரன் மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல்.திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல்.திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் மதுரையில் ஏற்றினார்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் தொல்.திருமாவளவன் அரசு வேலையை துறந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த முப்பது ஆண்டுகளாக சிறந்த தலித் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. அரசியல் அரங்கில் தவிர்க்க இயலாத கட்சியாக உள்ளது. இந்த இயக்கம் தலித் அரசியலை மட்டும் முன்வைக்காமல் பெரும்பாலும் பொது அரசியல் போராட்டங்களில் களம் கண்டு வருகிறது.குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சிணையில் தலைசிறந்த முறையில் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் திராவிட கட்சிகளின் அக்கறையின்மை காரணமாக மாநாடுகளும் போராட்டங்களும் தோல்வியுற்றன.

கொடி[தொகு]

விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும் சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் ஏற்றினார். [2]

தேர்தல் வெற்றிகள்[தொகு]

தமிழகத்தின் 13வது சட்டமன்றத்தில் இக்கட்சி வென்ற 2 தொகுதிகள் வருமாறு;மங்களூரில் செல்வப் பெருந்தகையும் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் டி.இரவிக்குமார் என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6லட்சம் வாக்குகளை பெற்று அபாரமாகவெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false
  2. அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3

வெளி இணைப்புகள்[தொகு]