போடோலாந்து மக்கள் முன்னணி
போடோலாந்து மக்கள் முன்னணி BPF | |
---|---|
தலைவர் | ஹாக்ராம் மோகிலரி |
மாநிலங்களவைத் தலைவர் | பிஸாவாஜித் டைமரி |
தலைமையகம் | கோக்ராஜ்கர், அசாம் |
கொள்கை | மதசார்பின்மை |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[1] |
கூட்டணி | வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (அசாம் சட்டமன்றம்) | 3 / 126 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
போடோலாந்து மக்கள் முன்னணி இந்தியாவின், அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். இதன் தலைமையிடம் கோக்ராஜ்கர் நகரம் ஆகும் மேலும் போடோலாந்து தன்னாட்சி பகுதியை ஆளுகிறது. போடோலாந்து மக்கள் முன்னனி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் ஆகும். அசாம் ஆட்சியை இவ்விரு கட்சிகள் கூட்டணி அமைத்து 2016 ஆம் ஆண்டு கைப்பற்றியது.[2] 2011 ஆம் ஆண்டு நடந்த அசாம் சட்டமன்ற தேர்தலில் 12 இடங்களைப் பெற்றது. ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது பின் தன் நிலைப்பாட்டை மாற்றி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோதி போடோலாந்து தன்னாட்சி பகுதியை பார்வையிட்டு தலைமை இடம் கோக்ராஜ்கர் நகர் அலுவலகத்தில் 1000 கோடி நிதியுதவி போடோலாந்து தன்னாட்சி பகுதிக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.[3] பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ Karmakar, Rahul (4 February 2011). "Assam polls: Cong sure, test for minority party". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 11 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110711172525/http://www.hindustantimes.com/Assam-polls-Cong-sure-test-for-minority-party/Article1-658650.aspx. பார்த்த நாள்: 20 February 2011.
- ↑ BJP forms alliance with Bodoland Peoples’ Front for Assam elections
- ↑ http://www.hindustantimes.com/india/amit-shah-holds-meeting-with-northeast-cms-forms-alliance/story-YDYLQ6YsImuzZOQ6Zev5MO.html