இந்திய அரசியல் கட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. 2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]

கட்சிகளின் வகைப்பாடு[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிகளை கீழ்க்காணும் வகைகளில் பிரித்துள்ளன. அவை;

  1. தேசியக் கட்சிகள்
  2. மாநிலக் கட்சிகள்
  3. பதிவு செய்யப்பட்ட கட்சிகள்

தேசியக் கட்சிகள்[தொகு]

தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2]

வ.எண். கட்சிப் பெயர் சுருக்கப் பெயர் கொடி சின்னம் ஆண்டு தலைவர்
1 பகுஜன் சமாஜ் கட்சி பி.எஸ்.பி Elephant Bahujan Samaj Party.svg 1984 மாயாவதி
2 பாரதீய ஜனதா கட்சி பா.ஜ.க Flag of the Bharatiya Janata Party.png 1980 ஜே பி நட்டடா
3 இந்தியப் பொதுவுடமைக் கட்சி சி.பி.ஐ CPI-banner.svg 1925 சுராவரம் சுதாகர் ரெட்டி
4 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ (எம்) CPI (M).png 1964 சீத்தாராம் யெச்சூரி
5 இந்திய தேசிய காங்கிரஸ் ஐ.என்.சி 1885 சோனியா காந்தி
6 ஐக்கிய ஜனதா தளம் ஜே.டி.யு Janata Dal (United) Flag.svg 1999 நிதிஷ் குமார்
7 சமாஜ்வாதி கட்சி எஸ்.பி 1992 முலாயம் சிங் யாதவ்

மாநிலக் கட்சிகள்[தொகு]

மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற, சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியிலோ, 2 சட்டப்பேரவை தொகுதிகளிலோ வெல்ல வேண்டும். அல்லது, 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2][3]

வ.எண். கட்சிப் பெயர் சுருக்கப் பெயர் கொடி சின்னம் ஆண்டு தலைவர் மாநிலம்
1 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.அ.தி.மு.க AIADMKflag.jpg AIADMK Two Leaves.png 1972 எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாடு, புதுச்சேரி
2 திராவிட முன்னேற்றக் கழகம் தி.மு.க Flag DMK.svg உதயசூரியன் 1949 மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு
3 பாட்டாளி மக்கள் கட்சி பா.ம.க Pmk flag.jpg மாம்பழம் 1989 கோ. க. மணி தமிழ்நாடு, புதுச்சேரி
4 தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தே.மு.தி.க DMDK flag.PNG முரசு 2005 விஜயகாந்த் தமிழ்நாடு
5 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ஏ.ஐ.டி.சி All India Trinamool Congress flag.svg 1998 மம்தா பானர்ஜி மேற்கு வங்காளம்
அருணாச்சலப் பிரதேசம்,
மணிப்பூர்
6 அனைத்திந்திய ஜனநாயக முன்னணி ஏ.யு.டி.எப் 1885 பத்ருதீன் அஜ்மல் அசாம்
7 அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் ஏ.ஜே.எஸ்.யு. Indian Election Symbol Banana.svg 1986 சுதேசு மெகடோ ஜார்க்கண்ட்
8 அசாம் கன பரிசத் ஏ.ஜி.பி 1985 பிரபுல்ல குமார் மகந்தா அசாம்
9 பிஜு ஜனதா தளம் பி.ஜே.டி Biju Janata Dal.jpg வெண் சங்கு 1997 நவீன் பட்நாய்க் ஒடிசா
10 போடோலாந்து மக்கள் முன்னணி பி.பி.எப் BPF-Flag.svg அசாம்
11 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு ஏ.ஐ.எப்.பி 1939 தேபபிரதா பிஸ்வாஸ் மேற்கு வங்காளம்
12 நாம் தமிழர் கட்சி
Naam tamilar katchi flag.jpg
கரும்பு விவசாயி சீமான்| தமிழ்நாடு, புதுச்சேரி
13 அரியானா ஜாங்கிட் காங்கிரஸ் (பிஎல்) எச்.ஜெ.சி (பிஎல்) 2007 அரியானா
14 மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி எச்.ஜெ.சி (பிஎல்) மேகாலயா
15 இந்திய தேசிய லோக்தளம் ஐ.என்.எல்.டி 1996 ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா
16 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஐ.யூ.எம்.எல் Flag of the Indian Union Muslim League.svg 1948 கே. எம். காதர் மொகிதீன் கேரளா
17 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ஜே.கே.என்.சி 1932 உமர் அப்துல்லா சம்மு காசுமீர்
18 ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஜே.கே.என்.பி.பி பீம்சிங் சம்மு காசுமீர்
19 சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி பி.டி.பி 1998 முப்தி முகமது சயீத் சம்மு காசுமீர்
20 ஜனதா தளம் (ஐக்கியம்) ஜே.டி.யு Janata Dal (United) Flag.svg 1999 நிதிஷ் குமார் பீகார், தமிழ்நாடு
21 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஜே.எம்.எம் Indian Election Symbol Bow And Arrow.png 1972 சிபு சோரன் சார்க்கண்ட்
22 சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) ஜே.வி.எம் Indian Election Symbol Comb.png சீப்பு 2006 பாபுலால் மராண்டி சார்க்கண்ட்
23 ஜனதா தளம் (மதச் சார்பற்ற) ஜே.டி.எஸ் ஜனதா தளம்.jpg 1999 எச். டி. தேவகவுடா கர்நாடகம், கேரளா
24 கருநாடக சனதா கட்சி கே.ஜே.பி 2011 எடியூரப்பா கர்நாடகம்
25 கேரள காங்கிரஸ் (எம்) கே.ஈ.சி (எம்) 1979 சி. எஸ். தாமஸ் கேரளா
26 லோக் ஜனசக்தி கட்சி எல்.ஜே.எஸ்.பி 2000 இராம் விலாசு பாசுவான் பீகார்
27 மகாராட்டிரா நவநிர்மாண் சேனா எம்.என்.எஸ் Flag of Maharashtra Navnirman Sena.svg 2006 ராஜ் தாக்ரே மகாராட்டிரம்
28 மகாராட்டிரவாதி கோமந்த கட்சி எம்.ஏ.ஜி 2006 சசிகலா ககோத்கர் மகாராட்டிரம்
29 மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி மணிப்பூர்
30 மிசோ தேசிய முன்னணி எம்.என்.எப் 1959 பு ஜோரம்தங்கா மிசோரம்
31 மிசோரம் மக்கள் மாநாடு எம்.பி.சி 1972 பு லால்மிங்தங்கா மிசோரம்
32 நாகாலாந்து மக்கள் முன்னணி என்.பி.எப் Flag of the Naga People's Front.png 2002 நைபியு ரியோ மணிப்பூர், நாகலாந்து
33 அனைத்திந்திய என். ஆர். காங்கிரஸ் ஏ.ஐ.என்.ஆர்.சி. 2011 ந. ரங்கசாமி புதுச்சேரி
34 மக்கள் ஜனநாயகக் கூட்டணி மணிப்பூர்
35 அருணாச்சல மக்கள் கட்சி பி.பி.ஏ Indian Election Symbol Maize.svg 1987 அருணாசலப் பிரதேசம்
36 இராச்டிரிய ஜனதா தளம் ஆர்.ஜே.டி RJD Flag.svg 1997 லாலு பிரசாத் யாதவ் பீகார், ஜார்கண்ட்
37 ராஜ்டீரிய லோக் தளம் ஆர்.எல்.டி Indian Election Symbol Hand Pump.png 1996 சவுத்ரி அஜீத் சிங் உத்திரப் பிரதேசம்
38 புரட்சியாளர் சமத்துவக் கட்சி ஆர்.எஸ்.பி 1940 டி. ஜே. சந்திரசூடன் மேற்கு வங்காளம்
39 சமாஜ்வாதி கட்சி எஸ்.பி 1992 முலாயம் சிங் யாதவ் உத்திரப் பிரதேசம்
40 சிரோமணி அகாலி தளம் எஸ்.ஏ.டி Akali dal logo.png 1920 பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப்
41 சிவ சேனா எஸ்.எச்.எஸ் Indian Election Symbol Bow And Arrow.png 1966 பால் தாக்கரே மகாராஷ்டிரா
42 சிக்கிம் ஜனநாயக முன்னணி எஸ்.டி.எப் 1993 பவன்குமார் சாம்லிங் சிக்கிம்
43 தெலுங்கானா இராட்டிர சமிதி டி. ஆர்.எஸ் TRS Flag.svg 2001 கே. சந்திரசேகரராவ் ஆந்திரப் பிரதேசம்
44 தெலுங்கு தேசம் கட்சி டி.டி.எப்
TDPFlag.PNG
1982 நா. சந்திரபாபு ஆந்திரப் பிரதேசம்
45 ஐக்கிய ஜனநாயகக் கட்சி யு.டி.பி Indian Election Symbol Drums.png டோங்பூர் ராய் மேகாலயா
46 சோரம் தேசியக் கட்சி இசட்.என்.பி 1997 லால்டுகோமா மிசோரம்
47 தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் த.ம.க 2010 சுப.கார்த்திகேயன் தமிழ்நாடு
48 மனிதநேய மக்கள் கட்சி ம.ம.க 2009 ஜவாஹிருல்லா தமிழ்நாடு
49 மனிதநேய ஜனநாயக கட்சி ம.ஜ.க 2015 தமீமுன் அன்சாரி தமிழ்நாடு

பதிவு செய்த கட்சிகள்[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.அவை

1. அனைத்து மக்கள் அரசியல் கட்சி

மேற்கோள்கள்[தொகு]