சரத் பவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sharad Pawar
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2014 (2014-04-03)
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
தொகுதி மகாராஷ்டிரா
தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 June 1999 (10 June 1999)
முன்னவர் நிலை நிறுவப்பட்டது
தேசியவாத காங்கிரசு கட்சி ராஜ்யசபா தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2014 (2014-04-03)
தேசியவாத காங்கிரசு கட்சி லோக்சபா தலைவர்
பதவியில்
1999 (1999) – 2014 (2014)
முன்னவர் நிலை நிறுவப்பட்டது
பின்வந்தவர் சுப்ரியா சுலே
மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
18 சூலை 1978 (1978-07-18) – 17 பெப்ரவரி 1980 (1980-02-17)
முன்னவர் வசந்ததாதா பாட்டீல்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
26 சூன் 1988 (1988-06-26) – 25 சூன் 1991 (1991-06-25)
முன்னவர் எசு. பி. சவாண்
பின்வந்தவர் சுதாகர்ராவ் நாயக்
பதவியில்
6 மார்ச்சு 1993 (1993-03-06) – 14 மார்ச்சு 1995 (1995-03-14)
முன்னவர் சுதாகர்ராவ் நாயக்
பின்வந்தவர் மனோகர் ஜோஷி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
19 மார்ச்சு 1998 (1998-03-19) – 26 ஏப்ரல் 1999 (1999-04-26)
முன்னவர் அடல் பிகாரி வாச்பாய்
பின்வந்தவர் சோனியா காந்தி
இந்திய சாரணர் சங்கம் ஜனாதிபதி
பதவியில்
2001 (2001) – 2004 (2004)
முன்னவர் இராமேசுவர் தாக்கூர்
பின்வந்தவர் இராமேசுவர் தாக்கூர்
விவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
23 மே 2004 (2004-05-23) – 26 மே 2014 (2014-05-26)
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் ராஜ்நாத் சிங்
பின்வந்தவர் இராதா மோகன் சிங்
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா) அமைச்சர்
பதவியில்
23 மே 2004 (2004-05-23) – 26 மே 2014 (2014-05-26)
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் சரத் யாதவ்
பின்வந்தவர் இராம் விலாசு பாசுவான்
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தலைவர்
பதவியில்
2010 (2010) – 2012 (2012)
முன்னவர் டேவிட் மோர்கன
பின்வந்தவர் ஆலன் ஐசக்
பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)
பதவியில்
26 சூன் 1991 (1991-06-26) – 6 மார்ச்சு 1993 (1993-03-06)
பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்
முன்னவர் சந்திரசேகர்
பின்வந்தவர் பி. வி. நரசிம்ம ராவ்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
20 சூன் 1991 (1991-06-20) – 16 மே 2009 (2009-05-16)
முன்னவர் அஜித் பவார்
பின்வந்தவர் சுப்ரியா சுலே
தொகுதி பாராமதி மக்களவைத் தொகுதி
பதவியில்
16 மே 2009 (2009-05-16) – 16 மே 2014 (2014-05-16)
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் விஜய் பாட்டீல்
தொகுதி மாடா மக்களவைத் தொகுதி
மகா விகாஸ் அகாதி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 நவம்பர் 2019
தலைவர் உத்தவ் தாக்கரே
செயலாளர் பாலாசாகேப் தோரட்
முன்னவர் நிலை நிறுவப்பட்டது
இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
பதவியில்
2005–2008
முன்னவர் ரன்பீர் சிங் மகேந்திரா
பின்வந்தவர் ஷஷாங்க் மனோகர்
தனிநபர் தகவல்
பிறப்பு 12 திசம்பர் 1940 (1940-12-12) (அகவை 82)[1]
பாராமதி, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்[1]
(present-day மகாராட்டிரம், India)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி தேசியவாத காங்கிரசு கட்சி (1999–தற்போது)
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு {{{1}}} இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) (1981-1986) இந்தியத் தேசிய காங்கிரசு (அ) (1978-1981)
வாழ்க்கை துணைவர்(கள்)
பிரதிபா பவார் (தி. 1967)
பிள்ளைகள் 1 daughter – சுப்ரியா சுலே
இருப்பிடம் பாராமதி
கல்வி இளங்கலை வணிகவியல்
படித்த கல்வி நிறுவனங்கள் Brihan Maharshtra College of Commerce, Pune[1]
தொழில் அரசியல்வாதி
இணையம் sharadpawar.com
பட்டப்பெயர்(கள்) பீஷ்மபிதாமஹா[2]
As of 29 October, 2010
Source: [1]

சரத் கோவிந்தராவ் பவார் (Sharad Govindrao Pawar மராத்தி [ʃəɾəd̪ pəʋaːɾ],பிறப்பு 12 டிசம்பர் 1940) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். மகாராட்டிர முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். இந்திய அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் . இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து 1999இல் இவர் நிறுவிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவராக உள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் அவையான மாநிலங்களவையில் தேசியவாத கட்சியினை வழிநடத்துகிறார். மகா விகாசு அகாதியின் தலைவராக உள்ளார்.

மகாராஷ்டிராவின் பாராமதியினைச் சேர்ந்த இவர் மகாராட்டிராவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் ஒருவரும் மகாராட்டிரா அரசியலில் ஒரு முக்கிய நபராகவும் உள்ளார். இவரது மகள் சுப்ரியா சுலே, மருமகன் அஜித் பவார், மருமகனின் மகன் ரோஹித் ராஜேந்திர பவார் ஆகியோர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். [3] [4] [5] [6] [7]

பவார் 2005 முதல் 2008 வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும்,[8] 2010 முதல் 2012 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவராகவும் பணியாற்றினார். பல ஆண்டுகள் மும்பை துடுப்பாட்டச்சங்கத்தின் தலைவராக இருந்தார். [9]

2017 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூசண் விருதை வழங்கியது.

சொந்த வாழ்க்கை[தொகு]

கோவிந்தராவ் பவார் மற்றும் சாரதாபாய் பவாருக்குப் பிறந்த பதினொரு குழந்தைகளில் பவாரும் ஒருவர்.[சான்று தேவை] கோவிந்தராவின் மூதாதையர்கள் அருகிலுள்ள சாத்தாராவிலிருந்து பாரமதிக்கு குடிபெயர்ந்தனர். கோவிந்தராவ் பாராமதி விவசாயிகள் கூட்டுறவு சங்கமான சககாரி கரேடி விக்ரி சங்கத்தில் நீண்ட காலம் பணியாற்றினார். 1940களில் மாணவர் விடுதியான ஷாஹு போர்டிங்கை நிர்வகித்தார். [10] 1950 களில் பாராமதி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பவார் 1937 மற்றும் 1952 க்கு இடையில் மூன்று முறை மாவட்ட உள்ளூர் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]

புனேவில் உள்ள பிரிகான் மகாராட்டிரா வணிகவியல் கல்லூரியில் (பிஎம்சிசி) படித்தார். சராசரி மாணவராக இருந்தாலும் மாணவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். உடன்பிறந்தவர்களில் பெரும்பாலோர் நன்கு படித்து அது சார்ந்த தொழில்களில் வெற்றி பெற்றனர். [12]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பள்ளி மாணவனாக இருந்தபோது, 1956 இல் பிரவரநகரில் கோவா விடுதலைக்காக எதிர்ப்பு அணிவகுப்பை ஏற்பாடு செய்தார்.[13] கல்லூரியில் மாணவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். வழக்குரைஞரான இவரது சகோதரர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், பவார் காங்கிரஸ் கட்சியை விரும்பி 1958 இல் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார் [13] . பின்னர் 1962 இல் பூனா மாவட்ட (இப்போது புனே மாவட்டம்) இளைஞர் காங்கிரஸின் தலைவரானார். 1964இல், மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸின் இரண்டு செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.

அமைச்சராக[தொகு]

24 மே 2004 அன்று புதுதில்லியில் வேளாண்மை, உணவு மற்றும் குடிமைப் பொருட்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறைக்கான மத்திய அமைச்சராக பவார் பொறுப்பேற்றார்.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தில் பவார் விவசாய அமைச்சரானார். [14] 2009 இல் யுபிஏ கூட்டணி அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் தனது இலாகாவைத் தக்க வைத்துக் கொண்டார். விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் பல நெருக்கடிகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தார். விவசாய அமைச்சராக இருந்த காலத்தில், அவர் தனது அமைச்சர் பதவிகளை விட பிசிசிஐயின் தலைவராக தனது பங்கில் துடுப்பாட்டத்தில் நேரத்தை செலவிட்டார் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். [15]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Detailed Profile: Shri Sharad Chandra Govindrao Pawar". http://www.archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=327. 
  2. "Shiv Sena backs Sharad Pawar as UPA chief, calls him 'Bhishmapitamaha'" (in en). Hindustan Times. 1 April 2022 இம் மூலத்தில் இருந்து 31 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220331184241/https://www.hindustantimes.com/cities/mumbai-news/shiv-sena-backs-sharad-pawar-as-upa-chief-calls-him-bhishmapitamaha-101648752064703.html. 
  3. Aron, Sunita (1 April 2016). "The pawar power play". The Dynasty: Born to Rule. Hay House, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-85827-10-5. https://books.google.com/books?id=mUywDAAAQBAJ&pg=PT9. 
  4. "ठाकरे आणि पवार यांच्यासह 'या' 11 कुटूंबियांच्या हातात महाराष्ट्राचं 'राजकारण', जाणून घ्या" (in en-US). 2019-09-30. https://policenama.com/maharashtra-assembly-election-dynasty-politics-political-family-thackeray-pawar-rane-shinde-chavan-congress-bjp-ncp/. 
  5. "All in Pawar family: 5 members either in Lok Sabha or state assembly". 28 October 2019. https://indianexpress.com/elections/all-in-pawar-family-5-members-either-in-ls-or-state-assembly-6091430/lite/. 
  6. "Maharashtra: Amid a pandemic, the Pawar family political soap opera takes centre stage". https://m.economictimes.com/news/politics-and-nation/maharashtra-amid-a-pandemic-the-pawar-family-political-soap-opera-takes-centre-stage/amp_articleshow/77552404.cms. 
  7. "Pawar Family Tree | पवार कुटुंबाची वंशावळ | पवार कुटुंब आहे कसं?" (in mr). 2020-08-14. https://marathi.abplive.com/videos/news/politics-family-tree-of-pawar-family-detailed-799061. 
  8. "Pawar takes over as ICC president". 1 July 2010. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/8778604.stm. 
  9. "Sharad Pawar steps down as president of Mumbai Cricket Association". http://www.cricbuzz.com/cricket-news/84795/sharad-pawar-steps-down-as-president-of-mumbai-cricket-association. 
  10. Attwood, Donald W.; D W Attwood (16 September 2019). Raising Cane: The Political Economy Of Sugar In Western India. Taylor & Francis. பக். 325–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-00-030891-4. https://books.google.com/books?id=SFyvDwAAQBAJ&pg=PT325. 
  11. Phadnis; Chatterji; Gadgil (2009). Business Standard Political Profiles of Cabals and Kings. Business Standard Books. பக். 72, 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-905735-4-2. https://books.google.com/books?id=qT7QvviGoJsC&pg=PA23. 
  12. Shiri Ram Bakshi; Sita Ram Sharma; S. Gajrani (1998). Contemporary Political Leadership in India:Sharad Pawar :The Maratha legacy. APH Publishing. பக். 123–130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-007-9. https://books.google.com/books?id=iP433CnEW_gC. 
  13. 13.0 13.1 Shiri Ram Bakshi; Sita Ram Sharma; S. Gajrani (1998). Contemporary Political Leadership in India:Sharad Pawar :The Maratha legacy. APH Publishing. பக். 123–130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-007-9. https://books.google.com/books?id=iP433CnEW_gC. 
  14. The Accidental Prime Minister: The Making and Unmaking of Manmohan Singh. 5 July 2015. https://books.google.com/books?id=Zbs0AwAAQBAJ&pg=PT6. 
  15. Business Standard Political Profiles of Cabals and Kings. https://books.google.com/books?id=qT7QvviGoJsC&pg=PA23. 



"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_பவார்&oldid=3663870" இருந்து மீள்விக்கப்பட்டது