உள்ளடக்கத்துக்குச் செல்

திரிபுரா தேசிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபுரா தேசிய விடுதலை முன்னணி
National Liberation Front of Tripura
வடகிழக்கு இந்திய கிளர்ச்சிகள்

திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் கொடி
இயங்கிய காலம் 1989 – தற்போதுவரை
கொள்கை திரிபுரி தேசியம்
பிரிவினை
கிறித்தவ தீவிரவாதம்
தலைவர்கள் பிஸ்வாமோகன் டெபர்பர்மா
உத்திரா திரிபுரா 
முகூல் தேபர்பர்மா 
செயற்பாட்டுப்
பகுதி
இந்தியா, திரிபுரா
Strength 550 (பிஸ்வாமோகன் பிரிவு)
250 (நயான்பாசி பிரிவு)
எதிராளிகள் திரிபுரா அரசு

திரிபுரா தேசிய விடுதலை முன்னணி National Liberation Front of Tripura (சுருக்கமாக NLFT) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திரிபுரி தேசிய அமைப்பு ஆகும். இதில் 550 முதல் 850 வரையிலான உறுப்பினர்கள் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் இருந்து திரிபுராவை விடுவித்து அதை சுதந்திர நாடாக்குவதை தனது நோக்கமாக கொண்டதே திதேவிமு. அதற்கான கிளர்ச்சியில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் ஈடுபட்டு வருகிறது. திரிபுராவை இயேசு விவரிக்கின்ற இறையரசாக ஆக்க விரும்புவதாக திதேவிமு விளக்குகிறது.[1]

திதேவிமு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியாவில் குறிப்பிடப்படுகிறது.[2][3]

வரலாறு

[தொகு]

திரிபுரா பாப்டிஸ்ட் திருச்சபை 1940களில் நியூசிலாந்து சமயப்பரப்பு குழுவினரால் முதலில் அமைக்கப்பட்டது. அவர்கள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட இருந்தபோதிலும், 1980 கள் வரை, திரிபுராவில் சில ஆயிரம் பேரே கிறித்துவத்திற்கு மாறியிருந்தார்கள். மிக மோசமான இனக்கலவரத்துக்குப் பின்னர், திரிபுரா பாப்டிஸ்ட் திருச்சபையின் ஆதரவுடன் 1989 ஆம் ஆண்டில் திதேவிமு தோன்றியது. அப்போதிருந்து, தங்கள் தீர்வுக்காக திதேவிமு ஆயுதமேந்திய கிளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது. அந்த அமைப்பின் கொள்கை பிரகடனத்தில், "ஏகாதிபத்திய இந்துஸ்தானியின் (இந்தியா) அடிமைப்படுத்தும் கொள்கையை" எதிர்த்து பூர்வகுடி மக்களின் பிரதிநிதித்துயாக போராடுவதாக கூறுகிறது; மேலும் அதன் பிரகடனத்தில் எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தைப் பற்றியும், "சாதி, பாலினம் அல்லது சமயம் சார்ந்த எந்தவொரு நபரும்" குறிப்பிடப்படவில்லை.[4]

திதேவிமு அவர்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளால் உந்தப்பட்டு பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடுவதாக விவரிக்கப்படுகிறது.[5] 2002 ஆண்டு பொடா சட்டத்தின்படி பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் திதேவிமுவை இந்திய அரசு சேர்த்துள்ளது. திரிபுராவின் பாப்டிஸ்ட் திருச்சபை திதேவிமுக்கு ஆயுதங்களையும், நிதியுதவியையும் அளிப்பதாக மாநில அரசு குற்றம் சாட்டுகிறது. 2000 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மாநில அரசானது நொபரா பாப்டிஸ்ட் திருச்சபையின் செயலாளரை, வெடிபொருட்களுடன் கைது செய்தது. இரண்டு ஆண்டுகளாக அவர் திதேவிமுக்கு வெடிபொருட்களை வாங்குவதாக ஒப்புக் கொண்டார். 2000 ஆம் ஆண்டு, துர்கா பூஜை பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்களை கொல்வதாக திதேவிமு அச்சுறுத்தியது.[6] அதன்பிறகு திரிபுராவில் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றுவதை எதிர்த்த இந்துக்களில் குறைந்தது 20 பேர் திதேவிமு யினால் கொல்லப்பட்டனர். ஜம்மியா பழங்குடியினத் தலைவரான, ரம்பதா ஜம்மியா என்பவர் திதேவிமுயின் போராளிகள் ஆயுதங்களைக் கொண்டு கிராமவாசிகளை கிறித்துவத்திற்கு மாற்றுவதாகவும், இது இந்து சமயத்துக்கு தீவிரமான ஒரு அச்சுறுத்தல் என்று கூறினார். 1999 ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் 5000 பழங்குடி மக்கள் பலவந்தமாக கிருத்துவத்துக்கு மாற்றப்பட்டனர் என்று நம்பப்படுகிறது.[7]

2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கொரங்கடில்லா என்ற பகுதியில் திதேவிமுயினால் 16 வங்காள இந்துக்கள் கொல்லப்பட்டனர். 2000 மே 20 அன்று, பெபர் அகதி முகாமில் 25 வங்காள இந்துக்களை திதேவிமுயினர் கொல்லப்பட்டனர்.[8] 2000 ஆகத்தில், இந்து பழங்குடித் தலைவரான சாந்தி காளி, சுமார் பத்து திதேவிமு கெரில்லாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார், அவர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் கிறித்துவத்திற்கு மாற்றியமைக்க திதேவிமு விரும்புவதாகக் கூறியிருந்தார்.[9] 2000 திசம்பரில், மாநிலத்தின் இரண்டாவது மிகப் பெரிய இந்துக் குழுவின் மதத் தலைவரான லாபு குமார் ஜமியாடியா, திதேவிமுயினால் கடத்தப்பட்டு தெற்கு திரிபுராவில் உள்ள தலாக் கிராமத்தருகே உள்ள ஒரு காட்டில் இறந்து கிடந்தார். திதேவிமுயினர் ஜமத்தியாவை கிருத்துவத்துக்கு மாற்ற விரும்பினார், ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்பது காவல்துறையினரின் கூற்று.[10] உள்ளூர் மார்க்சிய பழங்குடித் தலைவர் கிஷோர் தேபர்பர், திரிபுராவின் சதாரிலேயே பகுதியில் 2005 மே மாதம் திதேவிமுயின் பிஸ்வாமஹான் பிரிவின் போராளிகளால் கொல்லப்பட்டார்.[11]

2001 இல், திரிபுராவில் 826 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் 405 பேர் உயிரிழந்தனர், 481 பேர் கடத்தப்பட்டனர். இவற்றை திதேவிமு மற்றும் அதைப்போன்ற அமைப்புகளான அனைத்து கிருத்துவர் புலிப்படை (ATTP) போன்ற அமைப்புகளால் செய்யப்பட்டன.[12] திரிபுராவின் நொபரா பாப்டிஸ்ட் திருச்சபையின் செயலாளரான நாகமான்லால் ஹலாம், 1998 முதல் 2000 வரை திதேவிமுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி அளித்ததாக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்போது ஒப்புக்கொண்டார்.

சரணடைந்த உறுப்பினர்களின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பிற விசாரணைகளின் வழியாக, தங்கள் நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் நிதியைத் திரட்ட நாதேவிமுயானது ஆபாச படங்களை தயாரித்து விற்பனை செய்வதாக 2005 ஆம் ஆண்டு பிபிசி தெரிவித்தது. இதற்காக பழங்குடி ஆண்கள் மற்றும் பெண்களை சில குழுவினரால் கடத்தப்பட்டு அவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி அதை படமாக்கி ஆபாச படங்களை டிவிடிகள் உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தப் படங்கள் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அப்பகுதி முழுவதும் சட்டவிரோதமாக விற்கப்பட்டு இலாம்ப் ஈட்டப்படுகின்றன. முன்னாள் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி நாதேவிமுயானது பழங்குடி பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக கூற்றுகள் உள்ளன.[13] மோதல் மேலாண்மை நிறுவனத்தின் கூற்றின்படி, நாதேவிமுயின் நிர்வாகத்தில் சுமார் 90% கிறித்தவர்கள் உள்ளனர்.

பிளவு

[தொகு]

பிஸ்வாமோகன் டெபர்பர்மா மற்றும் நயான்பாசி ஜமாடியா ஆகியோர் பிரிவினால் நாதேவிமு 2001 பெப்ரவரியில் இரண்டாக பிளவுற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhaumik, Subir (18 April 2000). "'Church backing Tripura rebels'". BBC News. http://news.bbc.co.uk/2/hi/world/south_asia/717775.stm. 
  2. "The Prevention of Terrorism Act, 2002". Republic of India. South Asia Terrorism Portal. 2002.
  3. "National Liberation Front of Tripura". South Asia Terrorism Portal.
  4. "Constitution of The National Liberation Front Of Tripura". South Asia Terrorism Portal.
  5. Adam, Jeroen; De Cordier, Bruno; Titeca, Kristof; Vlassenroot, Koen (2007). "In the Name of the Father? Christian Terrorism in Tripura, Northern Uganda, and Ambon". Studies in Conflict and Terrorism 30 (11): 963-83. doi:10.1080/10576100701611288. https://archive.org/details/sim_studies-in-conflict-and-terrorism_2007-11_30_11/page/963. 
  6. "Separatist group bans Hindu festivities". BBC News. 2 October 2000. http://news.bbc.co.uk/2/hi/south_asia/953200.stm. 
  7. "Tribals unite against conversions in Tripura". 2 August 2001. http://www.rediff.com/news/2001/aug/02trip.htm. 
  8. "19 killed in Tripura massacre rerun". Telegraph India. 21 May 2000.
  9. "Hindu preacher killed by Tripura rebels". BBC News. 28 August 2000. http://news.bbc.co.uk/2/hi/south_asia/899422.stm. 
  10. "Tripura tribal leader killed". BBC News. 27 December 2000. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1089578.stm. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Rebels kill Tripura CPM leader". Telegraph India. 17 May 2005. http://www.telegraphindia.com/1050517/asp/northeast/story_4747409.asp. 
  12. "Conversions with foreign fund". organiser.in. 10 April 2005. Archived from the original on 3 May 2005.
  13. Bhaumik, Subir (27 August 2005). "India rebels 'making porn films'". BBC News.