உத்தவ் தாக்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தவ் தாக்கரே
18வது மகாராட்டிர முதலமைச்சர்
பதவியில்
28 நவம்பர் 2019 – 29 சூன் 2022
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
முன்னையவர்தேவேந்திர பத்னாவிசு
பின்னவர்ஏக்நாத் சிண்டே
சிவசேனா தலைவர் மற்றும் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 சனவரி 2013 - 10 அக்டோபர் 2022 மற்றும் 10 அக்டோபர் 2023 முதல்
முன்னையவர்பால் தாக்கரே மற்றும் பதவி நிறுவப்பட்டது
சாமனா பத்திரிகை ஆசிரியர்
பதவியில்
சூன் 2006 மற்றும் 2022 முதல் – 28 நவம்பர் 2019 மற்றும் பதவியில்
முன்னையவர்பால் தாக்கரே
பின்னவர்சஞ்சய் ராவத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூலை 1960 (1960-07-27) (அகவை 63)
பம்பாய், மஹாராஷ்டிரா, இந்தியா (தற்போது மும்பை)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிவ சேனா மற்றும் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
துணைவர்ராஷ்மி தாக்கரே
பிள்ளைகள்2 (ஆதித்யா தாக்கரே உட்பட)
பெற்றோர்(s)பால் தாக்கரே
மீனா தாக்ரே
வாழிடம்(s)மும்பை , மகாராட்டிரம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

உத்தவ் பால் தாக்ரே (பிறப்பு: சூலை 27, 1960) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் மகாராட்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார்.[1][2]. இவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் ஆவார். [3] மேலும் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்ரே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

2002ஆம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், மராத்தி தினசரி செய்தித்தாளான சாமனாவை நிர்வகித்து வருகிறார். இவரது கட்சி 2002இல் பெருநகர மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, சனவரி 2003இல் கட்சியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் ராஷ்மி தாக்கரே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதித்யா, தேஜாஸ் எனும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஆதித்யா, யுவசேனாவின் தலைவராக இருக்கிறார். ​​இளைய மகன் தேஜாஸ் நியூயார்க் மாநிலத்திலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர், மகாராட்டிராவின் பல்வேறு கோட்டைகள் மற்றும் வான்வழி காட்சிகளின் புகைப்படங்களை ஜஹாங்கிர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uddhav Thackeray, first of his clan, takes oath as chief minister of Maharashtra" (in en). India Today. 28 November 2019. https://www.indiatoday.in/india/story/uddhav-thackeray-maharashtra-chief-minister-1623468-2019-11-28. பார்த்த நாள்: 17 December 2019. 
  2. "Maharashtra: NCP gets Home, Finance as Uddhav allocates portfolios". The New Indian Express. 5 January 2020. https://www.newindianexpress.com/nation/2020/jan/05/maharashtra-uddhav-thackeray-allocates-portfolios-to-ministers-six-days-after-cabinet-expansion-2085386.html. பார்த்த நாள்: 7 June 2020. 
  3. "Up close and personal with Uddhav Thackeray". Rediff.com. 22 April 2004. பார்க்கப்பட்ட நாள் 25 April 2014.
  4. "Thackeray's new conquest". India Today. Mumbai. 26 January 2004. பார்க்கப்பட்ட நாள் 25 April 2014.
  5. Vijapurkar, Mahesh (14 January 2004). "Uddhav Thackeray and those scenic forts". The Hindu இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040918225718/http://www.hindu.com/2004/01/14/stories/2004011401302200.htm. பார்த்த நாள்: 25 April 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தவ்_தாக்கரே&oldid=3878448" இலிருந்து மீள்விக்கப்பட்டது