உள்ளடக்கத்துக்குச் செல்

சௌகத் உஸ்மானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌகத் உஸ்மானி , (1901-1978) , இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் , ஒரு இயக்கமாக உருவாவதற்கு முன்பே தனித் தனியாக இயங்கி வந்த இளம் பொதுவுடைமைவாதிகளில் ஒருவர் .1920 இல் தாஷ்கந்தில் இந்திய பொதுவுடைமை இயக்கதின் கிளை உருவாக்கப்பட்டபோதும் , 1925 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஐ) உருவான போதும் அதனுடன் தொடர்பில் இருந்தார் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பிராகவும் இருந்தார் .ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திற்க்கு இந்தியாவில் இருந்தபடியே போட்டியிட்ட ஒரே நாபர் ஆவர் . அவர் அந்த தேர்தலை சிறையில் இருந்தவாரே சந்தித்தார் .1923 கான்பூர் சதி வழக்கு , 1929 மீரட் சதி வழக்கு ஆகிய வழக்குகளில் மொத்தம் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார் .

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சௌகத் உஸ்மானி ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் 1901இல் பிறந்தார். அவரது இயற்பெயர் மௌலா பக்ஷ் . அவர் மௌலானா சௌகத் அலி அவர்களின் தீவிர அபிமானியாக மாறியதால் தன் பெயரை சௌகத் உஸ்மானி என மாற்றிக்கொண்டார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • ஒரு புரட்சியாளனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணங்கள் (சோவியத் யூனியனில் சிறிது காலம் தங்கியிருத்தல்)
  • சோவியத் யூனியனில் எனது அனுபவங்கள் (1920-21)
  • ரஷ்யப் புரட்சியின் ஒரு பக்கம்

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் தேர்தல்கள்

[தொகு]

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திற்க்கு இந்தியாவில் இருந்தபடியே போட்டியிட்ட ஒரே நாபர் ஆவர் . கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக இரண்டு முறையும் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டார் .

மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 கைதிகள்.பின் வரிசை (இடமிருந்து வலமாக): கே. என்.சேகல், எஸ். எஸ். ஜோஷ், எச். எல். ஹட்சின்சன், சௌகத் உஸ்மானி, பி. எஃப். பிராட்லி, ஏ. பிரசாத், ஏ. பிரசாத், ஜி. அதிகாரி. நடு வரிசை: ஆர். ஆர். மித்ரா, கோபன் சக்ரவர்த்தி, கிஷோரி லால் கோஷ், எல். ஆர்.கதம், டி. ஆர். தெங்டி, கவ்ரா ஷங்கர், எஸ். பேனர்ஜி, கே. என். ஜோக்லேகர், பி. சி. ஜோஷி, முசாபர் அகமது, டி. கோஸ்வாமி, ஆர்.எஸ். நிம்ப்கர், எஸ்.எஸ். மிராஜ்கர், எஸ். ஏ. டாங்கே, எஸ்.வி. காட்டே, கோபால் பாசக்.

ஸ்பென் பள்ளத்தாக்கு தொகுதி

[தொகு]

1929இல் மீரட் சதி வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த சௌகத் உஸ்மானியை, கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக ஸ்பென் பள்ளத்தாக்கு தொகுதியில் நிறுத்தியது. இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி செய்துவந்த அக்கிரமங்களை ஆங்கில மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி இவரை நிற்க வைத்தது. இவர் எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் - சர் ஜான் சைமன் என்பவர்தான். இவரே 1930இல் இந்தியாவிற்கு வந்தார். அவர் தலைமையில் சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது.எனினும் சௌகத் உஸ்மானி தோல்வியடைந்தார்."[1]

செயின்ட் பாங்க்ராஸ் தென்கிழக்கு தொகுதி

[தொகு]

பின்னர் 1931இல் ஹவுஸ் ஆக் காமன்ஸ்க்கு தேர்தல் நடைபெற்றபோதும் சௌகத் உஸ்மானி கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். லண்டனிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் ஒன்று திரண்டு சௌகத் உஸ்மானிக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போதும் சௌகத் உஸ்மானி சிறையில்தான் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகத்_உஸ்மானி&oldid=2828031" இலிருந்து மீள்விக்கப்பட்டது