உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விடுதலைச் சிறுத்தைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சுருக்கக்குறிவிசிக
தலைவர்முனைவர் தொல். திருமாவளவன்
பொதுச் செயலாளர்து. இரவிக்குமார், சிந்தனை செல்வன்
நிறுவனர்எம். மலைச்சாமி, டி. அமுகுராஜா
தொடக்கம்1982 - மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் தமிழக கிளையாக தொடங்கப்பட்டது.
பிரிவுதலித் சிறுத்தைகள்[1]
கொள்கைசமூக நீதி
அம்பேத்கரிசம்[2]
மார்க்சியம்[2]
சமயச் சார்பின்மை
தமிழ்த் தேசியம்
திராவிடத் தேசியம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்[3]
நிறங்கள்  நீலம்
  சிகப்பு
ECI statusமாநிலக் கட்சிகள்
Alliance
முந்தைய கூட்டணிகள்
1) தமாகா - (விசிக சந்தித்த முதல் தேர்தல் 1999-2001)
2) திமுக-பாஜக (தேஜகூ) (2001-2004)
3) விசிக - ஐஜத மக்கள் கூட்டணி (2004-2006)
4) அதிமுக-(ஜனநாயக மக்கள் கூட்டணி) : (2006-2006)
5) திமுக-காங்கிரஸ் (ஐமுகூ) (2009-2014) & (2019-2021 வரை)
6) திமுக-(ஜமுகூ) : (2014-2015) (மமுகூ) (2021-2026)
7) மக்கள் நலக் கூட்டணி (2015-2016)
8) தவெக கூட்டணி (2026–தற்போது வரை)
Seats in Rajya Sabha
0 / 245
Seats in Lok Sabha
2 / 543
Seats in தமிழ்நாடு சட்டப் பேரவை
2 / 234
Number of states and union territories in government
1 / 31
தேர்தல் சின்னம்

மண் பானை
கட்சிக்கொடி
Election symbol of VCK

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers அல்லது Viduthalai Siruthikal katchi) தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1972 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இயக்கமான, அன்றைய தமிழக தலைவராக இருந்த மதுரையை சார்ந்த மலைச்சாமி அவர்களை படுகொலை செய்யப்பட்ட பிறகு, அப்போது மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமாவளவன் மதுரையில் நடந்த மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தின் முடிவில் ஒருமித்த தலைவராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சாதி ஒழிப்பு,மக்கள் எழுச்சி, தமிழ் தேசியம், மக்கள் விடுதலைக்கு திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று தமிழ் வழி பெயராக மாற்றம் செய்தார்.[4][5] 2024 மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், இக்கட்சி ஐந்தாவது மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.[6]

அரசியல் கட்சி வரலாறு

[தொகு]
  • இக்கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது.
  • ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு, விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல். திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.

கொடி

[தொகு]

விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் ஏற்றினார்.[7]

தேர்தல் நிலைப்பாடு

[தொகு]

தேர்தல் வரலாறு

[தொகு]

மக்களவைத் தேர்தல்கள்

[தொகு]
ஆண்டு வென்ற தொகுதிகள் வாக்கு சதவீதம் குறிப்புகள்
1999 - தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களாக
2004 - ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களாக
2009 0.18%
2014 0.11%
2019 0.8% து. இரவிக்குமார், திராவிட முன்னேற்றக் கழகம் சின்னத்தில் போட்டியிட்டார்
2024 2.25%
இதுவரை விசிக வென்றுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்

[தொகு]
ஆண்டு தேர்தல் பதிவான வாக்குகள் வென்ற தொகுதிகள் மாற்றம் கூட்டணி முடிவு
2001 12வது
1 / 8
Increase 1 திமுக+ வெற்றி
2006 13வது 426,321
2 / 9
Increase 2 அதிமுக+ வெற்றி
2011 14வது 555,965
0 / 10
2 திமுக+ தோல்வி
2016 15வது 331,849
0 / 25
தேமுதிக+ தோல்வி
2021 16வது 457,763
4 / 6
Increase 4 திமுக+ வெற்றி
2026 17வது 540,056
2 / 8
2 திமுக+ வெற்றி
இதுவரை விசிக வென்றுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை (தமிழ்நாடு)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How the VCK Emerged as More Than 'Just a Dalit Party' in the Tamil Nadu Elections". The Wire.
  2. 1 2 Naig, Udhav (2024-09-10). "VCK invites AIADMK for ‘prohibition of liquor’ rally, but says no to PMK and BJP" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/vck-invites-aiadmk-for-prohibition-of-liquor-rally-but-says-no-to-pmk-and-bjp/article68626359.ece. "Agreed that they have taken progressive stand on many issues and have spoken in support of Ambedkarism, Marxism, and in support of Eelam Tamils, which are agreeable to us."
  3. "Rift between MK Stalin's party and ally VCK in Tamil Nadu?". India Today (in ஆங்கிலம்). 2024-09-26. Retrieved 2024-10-30. He said that Thirumavalavan, who strongly adheres to leftist ideologies rooted in Tamil history
  4. ஆர். முத்துக்குமார், ed. (2010). தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 2. கிழக்கு பதிப்பகம். {{cite book}}: Text "ISBN 9788184937893" ignored (help)
  5. Andrew Wyatt, ed. (2010). Party System Change in South India: Political Entrepreneurs, Patterns and Processes. Routledge.
  6. Kumaresan, S. (2024-06-05). "With 2 wins, VCK to become fifth political party in TN to get 'state party' tag". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
  7. அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3
  8. வி.சி.க.விற்கு 6 தொகுதிகள்: தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு - தினமணி நாளிதழ் செய்தி (04-3-2021)
  9. Udhav Naig (May 4, 2026). "Congress, PMK, and VCK fail to deliver". The Hindu.
  10. "அமைச்சர்களாக வன்னியரசு, ஷாஜஹான் பதவியேற்பு: நனவானது விசிகவின் 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' கனவு". தமிழ் இந்து. Retrieved May 23, 2026.

வெளி இணைப்புகள்

[தொகு]