உள்ளடக்கத்துக்குச் செல்

அப்னா தளம் (சோனேலால்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்னா தளம் (சோனேலால்)
சுருக்கக்குறிஅ. த.(சோ)
தலைவர்அனுப்பிரியா பட்டேல்
நிறுவனர்அனுப்பிரியா பட்டேல்
தொடக்கம்14 திசம்பர் 2016 (8 ஆண்டுகள் முன்னர்) (2016-12-14)
தலைமையகம்1A, சர்வபள்ளி, தி மால் அவென்யூ, லக்னோ, உத்தரப் பிரதேசம்
கொள்கை
தேசியக் கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (2016 – முதல்)
நிறங்கள்ஆரஞ்சு
நீலம்
இந்திய தேர்தல் ஆணைய அங்கீகாரம்மாநில கட்சி[1]
மக்களவை (இந்தியா)
1 / 543
மாநிலங்களவை (இந்தியா)
0 / 245
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
13 / 403
உத்தரப் பிரதேச சட்டமேலவை
1 / 100

அப்னா தளம் (சோனேலால்) (Apna Dal (Sonelal)) என்பது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஓர் அரசியல் கட்சியாகும். உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் குறிப்பாக வாரணாசி, மிர்சாபூர் பகுதியில் இது அதிக செல்வாக்குடன் உள்ளது. இதன் உறுப்பினர் அனுப்பிரியா பட்டேல் இந்திய மக்களவை உறுப்பினராக உள்ளார். மோதி தலைமையிலான பாசக அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சராக உள்ளார்.

இது 1995 ஆம் ஆண்டு உருவான அப்னா தளம் என்ற கட்சியிலிருந்து பிரிந்த கட்சியாகும்.[2] இக்கட்சியை 2016 டிசம்பர் 14 அன்று சவகர் லால் பட்டேல் உருவாக்கினார் [3]. அனுப்பிரியா பட்டேல் மிர்சாபூர் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Recognition of Apna Dal [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Uttar Pradesh: Sparring Apna Dal 'splits'". டெக்கான் குரோனிகல். Retrieved மார்ச் 12, 2017.
  3. "Apna Dal (S) registered, has the backing of Anupriya Patel". டைம்சு ஆப் இந்தியா. Retrieved மார்ச் 12, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்னா_தளம்_(சோனேலால்)&oldid=4250167" இலிருந்து மீள்விக்கப்பட்டது