மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல் அமைப்பு/கட்சி. திரைப்பட நடிகர் விஜயால் தொடங்கப்பட்டது. ஜூலை 2009இல் தனது நற்பணி/ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக விஜய் மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். விஜயின் தந்தை தமிழ்த் திரைப்பட இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இக்கட்சியின் முக்கிய நிருவாகிகளுள் ஒருவராக உள்ளார். 2010ம் ஆண்டில் விஜயின் காவலன் திரைப்படம் வெளிவர திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தடை செய்வதாகக் குற்றம் சாட்டி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒருங்கிணைந்து திமுக அரசை தாக்கி வந்தது மக்கள் இயக்கம். பெப்ரவரி 2011இல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் தனது முதல் அரசியல் கூட்டத்தை நடத்தியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]