தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
![]() | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||
![]() 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (சட்டமன்றத் தொகுதிகளின் படி) | ||||||||||||||||||||||||||||||||||
|
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார்.
தொகுதி சீரமைப்பு[தொகு]
- 1992-2009 ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப்பின் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல். இத்தேர்தலில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் 234 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 188 பொதுத் தொகுதிகள், 46 தனித் தொகுதிகள்.[2]
- பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு தனித் தொகுதிகள்: ஏற்காடு, சேந்தமங்கலம்.
- தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (பட்டியல் சாதியினர்) பின்வரும் 44 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பொன்னேரி, பூந்தமல்லி, திரு. வி. க. நகர், எழும்பூர், திருப்பெரும்புதூர், செய்யாறு, மதுராந்தகம், அரக்கோணம், கிழ்வாய்தின்ன குப்பம், குடியாத்தம், ஊத்தங்கரை, அரூர், செங்கம், வந்தவாசி, திண்டிவனம், வானூர், கள்ளக்குறிச்சி, கங்கவல்லி, ஆத்தூர் (சேலம்), இராசிபுரம், தாராபுரம், பவானி சாகர், கூடலூர் (நீலகிரி), அவினாசி, வால்பாறை, நிலக்கோட்டை, கிருஷ்ணராயபுரம், துறையூர், பெரம்பலூர், திட்டக்குடி, காட்டுமன்னார் கோயில், சீர்காழி, கீழ்வேலூர், திருத்துறைப்பூண்டி, திருவிடைமருதூர், கந்தர்வக்கோட்டை, மானாமதுரை, சோழவந்தான், பெரியகுளம், திருவில்லிப்புத்தூர், பரமக்குடி, ஓட்டப்பிடாரம், சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர்.
தேர்தல் அட்டவணை[தொகு]
தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு
தேதி | நிகழ்வு |
---|---|
மார்ச் 19 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
மார்ச் 26 | மனுத்தாக்கல் முடிவு |
மார்ச் 28 | வேட்புமனு ஆய்வு ஆரம்பம் |
மார்ச் 30 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
ஏப்ரல் 13 | வாக்குப்பதிவு |
மே 13 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
பின்புலம்[தொகு]
தேர்தல் ஆணையம்[தொகு]
இந்தத் தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையராக குரேசியும், தமிழகத் தேர்தல் ஆணையராக பிரவீன்குமாரும் இருந்தனர். தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தத் தேர்தலில் தனது கெடுபிடிகளைக் கடுமையாக்கியது. குறிப்பாக சுவர் விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. கட்அவுட்கள் எங்கும் காணப்படவில்லை. ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வேட்பாளர்களுக்கான 16 இலட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு அதற்கான கணக்குகளையும் முறையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அவ்வாறு கணக்கு காட்டாதவர்கள் வெற்றிபெற்றாலும் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்று எச்சரித்தது. வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது தேர்தல் ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் நிகழ்பட பதிவுக் கருவிகளுடன் சென்று படம்பிடித்தனர். குறிப்பாக வேட்பாளர்கள் பேசுவதையும், செலவுகளையும் கண்காணித்தனர். கட்சிக்காரர்களுக்கு அல்லது பிரச்சாரத்தில் வரும் தொண்டர்களுக்கு சாப்பாடு பரிமாறுவதையும் படம் பிடித்தனர். சிற்றுண்டிகளில் 100 சாப்பாடு பொட்டலங்களுக்கு மேல் கொடுத்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் எங்கும் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத பணம் 54 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டது. வங்கிகளில் ஒருநாளைக்கு ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் விசாரிக்கப்படும் என்று அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். குறிப்பாக வன்முறை இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தேறியது. வாக்களிக்க வாக்காளர் அட்டை அவசியமின்றி தேர்தல் ஆணையம் வழங்கிய சீட்டு மட்டுமே போதும் என்று அறிவித்திருந்ததும் வாக்காளர்களுக்கு வசதியாய் இருந்தது. அதனால் இத்தேர்தலில் வாக்களித்தவர்கள் 78 சதவீதமாக இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை திமுக தலைவர் மு. கருணாநிதி எதிர்த்தார். இந்த கெடுபிடிகள் நெருக்கடி நிலை காலத்தை போல் உள்ளது என்று குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையமும் தனது கூட்டணியில் உள்ள மத்திய காங்கிரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் சாதமாக செயல்பாடுவதாக குற்றம் சாட்டினார்.
அரசியல் நிலவரம்[தொகு]
முக்கிய பிரச்சினைகள்
- கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடந்தேறிய பல ஊழல், அராஜக ஆட்சியாகவும், தமிழ்நாட்டில் அக்காலகட்டத்தில் வன்முறை செயல்களிலும் பல ஊழல் முறைகேடுகளிலும் அக்கட்சியினர், அமைச்சர்கள் செய்து வந்தனர். கருணாநிதியின் குடும்ப அரசியல் மத்தியிலும், மாநிலத்திலும் சர்வதிகார போக்குடன் இருந்தனர்.
- அதனால் திமுக முந்தைய தேர்தல் சலுகையாக அறிவித்த இலவச கலைஞர் வண்ண தொலைகாட்சி பெட்டி, எரிவாயு உடனான அடுப்பு போன்ற இலவச சலுகைகள் வெகுசன மக்களிடம் சென்றடையவில்லை.
- திமுக சலுகை திட்டத்தில் மு. கருணாநிதி அவர்கள் மிக்சி, கிரைண்டர், மேசை மின்விசிறி இதில் ஏதோ ஒன்றை மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஆனால் எதிர்கட்சியான அதிமுகவில் செல்வி ஜெயலலிதா தேர்தல் சலுகையாக அறிவித்த மிக்சி, கிரைண்டர், மேசை மின்விசிறி மூன்று பொருட்களும் சேர்ந்தே வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களை கவர்ந்தது.
- கல்வி பயிலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டம் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தினார்.
- கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த மருத்துவம், பொறியல் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் நுழைவு தேர்வை ரத்து செய்த போதிலும் 2010 ஆம் ஆண்டு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வு தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களும் மாநில சுயாட்சி தன்மைக்கும் எதிராக இருந்ததை ஜெயலலிதா அவர்கள் எதிர்த்தார்.
- நலம் - முந்தைய ஆட்சியில் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த ஏழைமக்களுக்கு உதவும் விதமான மருத்துவ காப்பீடு திட்டத்தை இந்த ஆட்சியில் ஜெயலலிதா முழுமையான செயல் வடிவமாக்கினார்.
- கல்வி - முந்தைய ஆட்சியில் கருணாநிதி அவர்கள் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கினார். அந்த திட்டத்தையும் தொடர்ந்து செயல் முறைபடுத்தினார். அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடைப்பிடித்தார்.
- கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்களின் தலைமையில் அக்கட்சியின் அமைச்சர்கள் செய்த அரசாட்சி ஊழல்
- கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் தனது கூட்டணி ஆட்சியில் செய்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு ஊழல் வழக்குகள்.
- இந்த ஊழல் வழக்குகளை பட்டியல் இட்டு தனி நீதிமன்றம் மூலமாக முதல்வர் மு. கருணாநிதி முதல் அனைத்து அமைச்சர்களையும் தனி நீதிமன்றம் மூலமாக விசாரிக்கபடும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதை செயல்படுத்தினார்.
- இலங்கையில் நான்காவது ஈழப்போரில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட 50 ஆயிரம் ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது. அந்த இன அழிப்பிற்க்கு பின்புலத்தில் அன்றைய இந்தியாவின் மத்திய அரசாங்கமான காங்கிரஸ் அதனுடன் தமிழக கூட்டணி கட்சியான திமுகவும் அந்த இனபடுகொலைக்கு உடந்தையாக இருந்தது என காரணம் காட்டபட்டது. இதனால் தமிழக மக்களிடையே திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலமான எதிர்ப்புகள் இருந்ததாலும். அந்த எதிர்ப்புகளை பற்றி திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் சிறிதும் கவலைபடாமல் காங்கிரசுடன் தனது கூட்டணி உறவை தொடர்ந்தார்.
- இந்த ஈழதமிழர் இனப்படுகொலை ஆனது இன்று வரை திமுக ஆட்சியின் மீது தீராத பழியாக இருந்துவருகிறது.
- தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையை கடந்து சென்றதால் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- மேலும் கடந்த திமுக ஆட்சி காலத்தில் மு. கருணாநிதி அவர்கள் மக்களுக்கு தேவையான பயனுள்ள திட்டங்களான அரசு மருத்துவக் காப்பீடு திட்டம், அவசர ஊர்தி 108 சேவை போன்ற மக்களுக்கு தேவையான உடல்நலம் சார்ந்த உயிர்நாடி திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
- தமிழ் மொழிக்கும் தமிழ் வழி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
- தமிழிற்காக செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் நடத்தி தாய்மொழி தமிழின் பெருமையை நாட்டிற்கே பரைசாற்றினார். அதை பாராட்டி மு. கருணாநிதி அவர்களுக்கு தமிழின தலைவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
- இந்த செம்மொழி மாநாடு நினைவு சின்னமாக சென்னையில் செம்மொழி பூங்காவும், கோவையில் இருந்து மன்னார்குடிக்கு செம்மொழி விரைவு இரயில் என்ற புதிய இரயிலையும் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் இயக்கினார்.
- சமச்சீர் கல்வி முறையால் தமிழக மாணவர்களின் பாடசுமைகளை குறைத்தார்.
- அனைவருக்கும் கல்வி என்ற முறையை செயல்படுத்தினார்.
- ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கட்டபட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்து வந்த தமிழக சட்டமன்றத்தை மாற்றி புதிதாக கட்டிய ஓமாந்துரார் மன்றத்தில் சட்டசபையை நடத்தினார்.
- மேலும் கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதியின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலும் மக்களிடையே அத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் போனதற்கு அக்கட்சி அமைச்சர்கள் செய்த அதிகார முறைகேடுகள் ஆகும்.
- திமுக தலைமையில் கருணாநிதி அவர்களின் வையோதிகத்தை பயன்படுத்தி கொண்டு அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் கலைஞரின் குடும்ப உறுப்பினர்களும் பல ஊழல் முறைகேடுகளை நடத்திவந்தனர். அதைவிட கருணாநிதிக்கு பிறகு திமுகவின் அடுத்த முதலமைச்சர் யார் என்று நடந்த வாரிசு பதவி போராட்டம் குடும்ப அரசியல்கள் கலைஞர் கருணாநிதி அவர்கள் கோவையில் நடத்திய செம்மொழி மாநாடு மிகவும் அதிக பொருளாதார செலவுடன் ஆடம்பரமாக நடத்திய நிகழ்வுகளை எதிர்கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
- கடந்த ஆட்சி காலத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வந்த அதிமுக கட்சியில் ஜெயலலிதா அவர்கள் 2007 ஆம் ஆண்டு பிறப்பித்த அனைத்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக தலைகவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தின் மூலம் சாலை உயிர்காக்கும் திட்டமாக உருவானது. அவ்வாறு அணியாமல் செல்வோர்க்கு சாலை பாதுகாப்பு விதியின் படி அபராதம் விதிக்கப்படும் என்ற திட்டத்தை ஆளும் கட்சியில் மு. கருணாநிதி அவர்கள் நடைமுறைபடுத்தினார்.
- அதே போல் 2009 ஆம் ஆண்டு முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் நகர் புறங்களில் உள்ள பெரிய கட்டிடங்கள் மீது கனரக (ஃப்ளெக்ஸ்) எனப்படும். பெரிய விளம்பர பதாகைகள் வைப்பதற்கு தடை விதித்தார்.
- திமுக-காங்கிரஸ் கூட்டணியை பயன்படுத்தி கொண்டு ஈத்தேன், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ ஓ.என்.ஜி.சி போன்ற தமிழ்நாட்டின் விவசாய வளத்திற்கும், இயற்கை கனிமங்களை மாசுபடுத்தும் உயிர் கொள்ளி திட்டங்களை நீதிமன்ற தீர்ப்பால் செயல்படுத்த கூடாது என்று ஜெயலலிதா தடை விதித்தார்.
- திமுக துணை முதல்வர் அதிகாரத்தில் மு. க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த நில அபகரிப்பு தொழில் ஆன ரியல் எஸ்டேட் என்ற நில முறைகேடு விவகாரத்தில் பல நில உரிமையாளர்கள் சாதிக் பாட்ஷா கொலை வழக்குகள் திமுக ஆட்சியில் பெரும் குற்றமாக விளங்கியது.
- கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கட்சிகளுக்கு அளவுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்ததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியும் குறிப்பாக காங்கிரஸ் உடனான ஆதரவுடன் இருந்ததாலும். திமுகவின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு இலங்கையில் வன்முறை செயல்களான ஈழத்தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டது. இந்த அதிகார மீறல் செயல்களால் தனது கூட்டணியின் தலைமையிலான திமுகவை மைனாரட்டி அரசு என்று மிரட்டி அடிமை போல் நடத்தி வந்தது. மேலும் அந்த தவறுகளை கருணாநிதி தட்டிக்கேட்டு தலையிடாத அளவிற்கும் அவர் சுயமான முடிவுகளை சுதந்திரமாக செயல்படுத்தவிடாமல் தடுத்தது. அதை பயன்படுத்தி கொண்டு தற்போது நடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ்க்கு 90 தொகுதிகளை கேட்டார் தலைவி சோனியா காந்தி. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் 50 தொகுதிகள் தான் தரமுடியும் என்றார். அப்படி இல்லாவிட்டால் திமுக தனித்தே போட்டியிடும் என்றவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் 63 தொகுதிகளை கட்டாயம் செய்து வாங்கினார்கள்.
- மேலும் திமுக ஆட்சியில் குடும்ப அரசியல், ஊழல் மிக்க ஆட்சி என்று எதிர்கட்சியால் குற்றம் சாற்றபட்ட அழுத்தத்தால் மத்தியில் சோனியா காந்தியின் தலையீட்டால் தனது கூட்டணி கட்சி என்று கூட பாராமல் திமுகவிற்க்கு சொந்தமான தொலைக்காட்சி/தொலைத்தொடர்பு சார்ந்த நிறுவனங்களில் அமலாக்க துறை வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
- அளவுக்கு அதிகமான தொகுதிகளை இம்முறையும் திமுக தனது தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு அளித்ததாலும் காங்கிரஸ்க்கு அதிக இடங்கள் கொடுத்ததாலும் தமிழக மக்கள் திமுகவை புறம் தள்ளி அதிமுகவை ஆதரித்து விட்டனர்.
- மேலும் திமுக ஆட்சியில் செய்த ஈழ தமிழர் இனப்படுகொலை, 2ஜி ஸ்பெக்ட்ரம், அமைச்சர்கள் செய்த பல ஊழல், கொலைகள் மற்றும் அதிகார மீறல் செயல்களால் திமுக படும் தொல்வியை சந்தித்தது.
- அறிவிக்கப்பட்ட 8 மணிநேரம் மின்வெட்டு போன்றவை மக்களுக்கு எதிராக அமைந்தன
- இம்முறை திமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தனது கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தான் என்று மக்களிடையே நிலவியது. அதனால் கருணாநிதி தனது முரசொலி பத்திரிகையில் காங்கிரசை விமர்சித்து கூடார் நட்பு கேடால் முடியும் என்று தலையங்கம் வெளியிட்டார்.
தேர்தல் வன்முறை :-
- மு. க. அழகிரி தேர்தல் அலுவலர்களைத் தாக்கியது.
- விஜயகாந்த் தனது தொண்டர்களை தாக்கியது.
கூட்டணிகள் மற்றும் கட்சிகள்[தொகு]
- 2011 சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் கூட்டணிகள் களத்தில் இருந்தன.
- காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக-காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முசுலீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
- அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதலில் மதிமுக, பாமக போன்ற பலமான கட்சிகள் கூட்டணியில் இருந்த போதும் தொகுதி உடன்பாடு பிரச்சனையால் ச. இராமதாசு விலகி எதிர் அணியான திமுகவில் இணைந்தார்.
- மதிமுகவிற்கு குறைவான தொகுதி கொடுக்கப்பட்டதால் வைகோ கூட்டணியில் இருந்து விலகி தேர்தல் புறக்கணிப்பு செய்தார்.
- பின்பு அதிமுகவில் ஜெயலலிதா கூட்டணியில் துக்ளக் பத்திரிகை நிருபர் சோ அவர்களின் வேண்டுகோளால் நடிகர் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக-அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது.
- இத்தேர்தலில் எதிரணியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஈழம் அழித்து ஊழல் செய்த ஊழல் கூட்டணி கட்சிகளை தொற்கடிக்க வேண்டும். என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சூறாவளி பிரச்சாரம் செய்து அதிமுக-தேமுதிக பலமான கூட்டணியாக அமைந்தது.
- அக்கூட்டணியில் அதிமுக-தேமுதிக, இந்திய பொதுவுடமைக் கட்சி (சிபிஐ), இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்), மனிதநேய மக்கள் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய குடியரசு கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
- இவ்விரு கூட்டணிகள் தவிர பாஜகவின் தலைமையிலான தேஜகூ கூட்டணியில் ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்த மூன்றாவது கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டது. வேறு சில சிறிய கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.
- முந்தைய ஆட்சிகாலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த வை.கோ அவர்களின் மதிமுக கட்சிக்கு இம்முறை தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலினால் குறைவான தொகுதிகளை கொடுத்ததால் அதற்கு உடன்படாமல் வை.கோ அவர்கள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்.
- மேலும் மதிமுக தற்போதைய 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என அக்கட்சி தலைவர் வை.கோ அறிவித்தார். மேலும் எதிர்கட்சியான திமுகவில் மு. கருணாநிதி அவர்கள் தனது கூட்டணிக்கு வரும் மாறு தனது முரசொலி பத்திரிகையில் வரிபுலி வரிசையே வருக வருக என தலையங்கம் வெளியிட்ட போதிலும் வை.கோ அவர்கள் மிகவும் ஆதங்கமாக எனக்கு ஆதரவு கொடுத்த அதிமுகவே எனக்கு அங்கிகாரம் தரவில்லை, எனக்கு அங்கிகாரம் கொடுத்த திமுகவின் ஆதரவும் எனக்கு தேவையில்லை என கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்தார்.[3]
வாக்குப்பதிவு[தொகு]
முடிவுகள்[தொகு]
ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 77.8 % வாக்காளர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் இதுவே மிக அதிகமான வாக்குப்பதிவு சதவிகிதம்.[4] வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கூட்டணி | கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் |
வென்ற தொகுதிகள் |
வைப்புத் தொகை இழப்பு |
வைப்புத் தொகை இழக்காத, வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதம் |
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளின் மொத்த வாக்கு சதவீதம் |
அதிமுக கூட்டணி - 203 |
அதிமுக [5][6] | 160 | 146 | 0 | 38.40 | 54.06 |
தேமுதிக | 41 | 29 | 0 | 7.88 | 44.95 | |
சிபிஐ[7] | 10 | 9 | 0 | 1.97 | 48.79 | |
சிபிஎம்[7] | 12 | 10 | 0 | 2.41 | 50.46 | |
மனிதநேய மக்கள் கட்சி | 3 | 2 | 0 | 0.49 | 42.43 | |
புதிய தமிழகம் | 2 | 2 | 0 | 0.40 | 54.42 | |
சமத்துவ மக்கள் கட்சி (சரத்குமார்)[8] | 2 | 2 | ||||
மூவேந்தர் முன்னேற்ற முன்னணி | 1 | 0 | ||||
ஃபார்வார்டு ப்ளாக் | 1 | 1 | ||||
இந்திய குடியரசுக் கட்சி (தமிழரசன்) | 1 | 1 | ||||
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை[9] | 1 | 1 | ||||
மொத்தம் | 234 | 203 | ||||
திமுக கூட்டணி -31[10][11] |
திமுக[12][13][14] | 119 | 23 | 0 | 22.39 | 42.20 |
காங்கிரசு[15] | 63 | 5 | 1 | 9.30 | 35.73 | |
பாமக[16] | 30 | 3 | 0 | 5.23 | 39.72 | |
விடுதலைச் சிறுத்தைகள்[17] | 10 | 0 | 0 | 1.51 | 34.10 | |
கொங்கு முன்னேற்றக் கழகம் [18] | 7 | 0 | ||||
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்[19][20] | 3 | 0 | ||||
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்[19][21] | 1 | 0 | ||||
பெருந்தலைவர் மக்கள் கட்சி[19][22][23] | 1 | 0 | ||||
மொத்தம் | 234 | 31 | ||||
பாஜக கூட்டணி[24] |
பாரதிய ஜனதா கட்சி | 204 | 0 | 198 | 2.22 | 2.55 |
ஜனதா கட்சி (சுப்ரமணியன் சாமி) | 10[25] | 0 | ||||
ஐக்கிய ஜனதா தளம் [26] | 5 | 0 | 5 | 0.01 | 0.33 | |
மொத்தம் | 234 | 0 | ||||
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் |
நாடாளும் மக்கள் கட்சி | |||||
பகுஜன் சமாஜ் கட்சி | 193 | 0 | 193 | 0.54 | 0.65 | |
சுயேச்சைகள் | ||||||
மக்கள் சக்தி கட்சி | 36 [27][28] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Challenge is to conduct peaceful polls in West Bengal: CEC". சிஃபி. 4 பெப்ரவரி 2011 இம் மூலத்தில் இருந்து 2012-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020193706/http://www.sify.com/news/challenge-is-to-conduct-peaceful-polls-in-west-bengal-cec-news-national-lcerknbbchc.html. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2011.
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413233934/http://www.assembly.tn.gov.in/history/history.htm. பார்த்த நாள்: 27 November 2009.
- ↑ மதிமுக அதிமுக உறவு இல்லை, 2011 தேர்தலில் மதிமுக போட்டியில்லை[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ polling in Tamil Nadu [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "அதிமுக 160 வேட்பாளர்கள் அறிவிப்பு தட்ஸ்தமிழ் செய்தி" இம் மூலத்தில் இருந்து 2011-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110318005221/http://thatstamil.oneindia.in/news/2011/03/16/jaya-contest-sri-rangam-admk-candidates-list-aid0091.html.
- ↑ 7.0 7.1 பொதுவுடமை கட்சிகளுடன் உடன்பாடு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகள் - தட்ஸ்தமிழ்" இம் மூலத்தில் இருந்து 2011-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110313025745/http://thatstamil.oneindia.in/news/2011/03/10/sarath-kunar-meet-jayalalitha-soon-aid0091.html.
- ↑ "தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 தொகுதி - தட்ஸ்தமிழ்" இம் மூலத்தில் இருந்து 2011-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110312163419/http://thatstamil.oneindia.in/news/2011/03/11/kongu-youth-forum-gets-one-seat-admk-aid0091.html.
- ↑ திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காங்கிரசுக்கு 63 தொகுதிகள்-பாமகவுக்கு 1 இடம் குறைப்பு" இம் மூலத்தில் இருந்து 2011-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110311011455/http://thatstamil.oneindia.in/news/2011/03/08/azhagiri-meets-sonia-gandhi-aid0091.html.
- ↑ திமுக போட்டியிடும் தொகுதிகள் தினமலர்
- ↑ "திமுக போட்டியிடும் தொகுதிகள் நக்கீரன்" இம் மூலத்தில் இருந்து 2011-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317233243/http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50437.
- ↑ "திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு" இம் மூலத்தில் இருந்து 2011-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110408175605/http://thatstamil.oneindia.in/news/2011/03/17/dmk-release-its-candidates-list-today-aid0091.html.
- ↑ "காங்கிரசுக்கான தொகுதிகள் அறிவிப்பு" இம் மூலத்தில் இருந்து 2011-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317040550/http://thatstamil.oneindia.in/news/2011/03/15/congress-constituencies-list-released-aid0091.html.
- ↑ "பாமகவுக்கான தொகுதிகள் அறிவிப்பு" இம் மூலத்தில் இருந்து 2011-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317031643/http://thatstamil.oneindia.in/news/2011/03/16/pmk-contest-dindigul-sholavandhan-aid0091.html.
- ↑ "விசி க்கான தொகுதிகள் அறிவிப்பு" இம் மூலத்தில் இருந்து 2011-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317032718/http://thatstamil.oneindia.in/news/2011/03/16/vck-constituencies-announced-aid0091.html.
- ↑ "கொமுக போட்டியிடும் தொகுதிகள்" இம் மூலத்தில் இருந்து 2011-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110318014453/http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50431.
- ↑ 19.0 19.1 19.2 திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்The three-day battle of nerves ends
- ↑ "முலீக்குக்கான தொகுதிகள் அறிவிப்பு 3 தொகுதிகளில் போட்டி - கருணாநிதி தாராளம்" இம் மூலத்தில் இருந்து 2011-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317032927/http://thatstamil.oneindia.in/news/2011/03/16/iuml-gets-3-seats-from-dmk-aid0091.html.
- ↑ "மூமுக போட்டியிடும் தொகுதி" இம் மூலத்தில் இருந்து 2011-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317233216/http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50433.
- ↑ "திமுகவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி-ஒரு சீட் ஒதுக்கீடு" இம் மூலத்தில் இருந்து 2011-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110315202623/http://thatstamil.oneindia.in/news/2011/03/13/dmk-perunthalaivar-makkal-katchi-one-seat-aid0091.html.
- ↑ "பெமக போட்டியிடும் தொகுதி" இம் மூலத்தில் இருந்து 2011-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317233209/http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50432.
- ↑ BJP in poll pact with Janata Party [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "'சசிகலா குடும்பத்தினரின் பிடியில் ஜெயலலிதா': சுப்பிரமணிய சாமி" இம் மூலத்தில் இருந்து 2011-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110325034949/http://thatstamil.oneindia.in/news/2011/03/22/dmk-admk-alliances-exist-after-polls-swamy-aid0128.html.
- ↑ ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் ஐந்து தொகுதிகள்
- ↑ "மக்கள் சக்கி கட்சி போட்டியிடும் தொகுதிகள்" இம் மூலத்தில் இருந்து 2011-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110401035649/http://www.loksatta.org/tn/index.php?option=com_content&view=article&id=438&Itemid=150.
- ↑ மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பெயர் & தொகுதி