தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2006-11
Appearance
(தமிழ்நாடு இடைத்தேர்தல்கள், 2006-11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| |||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 10 இடங்கள் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தமிழ்நாட்டின் பதின்மூன்றாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் (2006-11) போது பதினொன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 2006ல் ஒன்று, 2007ல் ஒன்று, 2009ல் எட்டு மற்றும் 2010ல் ஒரு தொகுதி வீதம் மொத்தம் பதினோன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இவை அனைத்திலும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது.
முடிவுகள்
[தொகு]எண் | தேர்தல் தேதி | தொகுதி | முந்தைய உறுப்பினர் | கட்சி | காரணம் | வெற்றி பெற்றவர் | கட்சி |
1 | அக்டோபர் 11, 2006 | மதுரை மத்தி | பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் | திமுக | உறுப்பினர் மரணம் | சையத் கவுசு பாசா | திமுக |
2 | ஜூன் 26, 2007 | மதுரை மேற்கு | எஸ். வி. சண்முகம் | அதிமுக | உறுப்பினர் மரணம் | கே. எஸ். கே. ராஜேந்திரன் | காங்கிரசு |
3 | ஜனவரி 9, 2009 | திருமங்கலம் | வீர இளவரசன் | மதிமுக | உறுப்பினர் மரணம் | லதா அதியமான் | திமுக |
4 | ஆகஸ்ட் 18, 2009 | பர்கூர் | தம்பித்துரை | அதிமுக | உறுப்பினர் பதவி விலகல் | கே. ஆர். கே. நரசிம்மன் | திமுக |
5 | ஆகஸ்ட் 18, 2009 | தொண்டாமுத்தூர் | மு.கண்ணப்பன் | மதிமுக | உறுப்பினர் பதவி விலகல் | எம். என். கந்தசாமி | காங்கிரசு |
6 | ஆகஸ்ட் 18, 2009 | இளையான்குடி | ராஜ கண்ணப்பன் | திமுக | உறுப்பினர் பதவி விலகல் | சுப. மதியரசன் | திமுக |
7 | ஆகஸ்ட் 18, 2009 | ஸ்ரீவைகுண்டம் | எம். செல்வராஜ் | காங்கிரசு | உறுப்பினர் மரணம் | எம். பி. சுடலையாண்டி | காங்கிரசு |
8 | ஆகஸ்ட் 18, 2009 | கம்பம் | என். ராமகிருஷ்ணன் | மதிமுக | உறுப்பினர் பதவி விலகல் | என். ராமகிருஷ்ணன் | திமுக |
9 | டிசம்பர் 19, 2009 | திருச்செந்தூர் | அனிதா ராதாகிருஷ்ணன் | அதிமுக | உறுப்பினர் பதவி விலகல் | அனிதா ராதாகிருஷ்ணன் | திமுக |
10 | டிசம்பர் 19, 2009 | வந்தவாசி | எஸ். பி. ஜெயராமன் | திமுக | உறுப்பினர் மரணம் | கமலக்கண்ணன் | திமுக |
11 | மார்ச் 27, 2010 | பெண்ணாகரம் | பி. என். பெரியண்ணன் | திமுக | உறுப்பினர் மரணம் | பி. என். பி. இன்பசேகரன் | திமுக |