மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் | |
---|---|
தலைவர் | ஸ்ரீதர் வாண்டையார் |
நிறுவனர் | பிரேம்குமார் வாண்டையார் |
கூட்டணி | அஇஅதிமுக+ (2006 - 2009) (2014 - 2016) (2021 - 2024) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (2009 - 2014) (2019 - 2021) (2024 - முதல்) பார்வார்டு பிளாக்+ (2016) |
கட்சிக்கொடி | |
இந்தியா அரசியல் |
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (Moovendar Munnetra Kazhagam) முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். மூ.மு.க. என்று சுருக்கமாக இக்கட்சி அறியப்படுகிறது. முக்குலத்தினர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார்.[1]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவெறும்பூர் மக்களவைத் தொகுதியில் சிறீதர் வாண்டையாரை வேட்பாளராக நிறுத்தியது. மற்றும் கே.என். சேகரனிடம் சிறிய வாக்கு வித்தியாசத்தில் இவர் தோற்றார்.[2]
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.[3] 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[4]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Ganesan, S. (12 May 2006). "DMK front secures seven seats in Tiruchi dt.". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629023805/http://www.hindu.com/2006/05/12/stories/2006051224970300.htm. பார்த்த நாள்: 4 August 2020.
- ↑ Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
- ↑ "அதிமுகவில் சீட் கிடைக்காத மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுகவுக்கு ஆதரவு". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/tamilnadu/moovendar-munnetra-kazhagam-extend-their-support-dmk-251984.html. பார்த்த நாள்: 13 January 2025.