தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் | |
---|---|
தலைவர் | பேராசிரியர் முனைவர் எம்.ஹச்.ஜவாஹிருல்லா. |
தொடக்கம் | ஆகத்து 1, 1995 |
தலைமையகம் | 7, வட மரைக்காயர் தெரு, சென்னை - 600001 |
செய்தி ஏடு | மக்கள் உரிமை |
கொள்கை | இசுலாமியர் முன்னேற்றம் |
கட்சிக்கொடி | |
![]() | |
இணையதளம் | |
http://tmmk.in/ |
தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். இது 1995ஆம் ஆண்டில் ஆகத்து 1ம் தியதி பேரா. ஜவாஹிருல்லா, பி. ஜைனுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர், செ.ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை வருடந்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருவதோடல்லாமல் இடிப்பு தினமான திசம்பர் 6 அன்று போராட்டங்கள் பலவற்றையும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடை வழங்க போராடிய முஸ்லிம் இயக்கங்களுள் முதன்மையானதாக உள்ளது.
சமுகப்பணிகள்[தொகு]
தமிழகம் முழுவதும் 154 அவசர ஊர்திகளுடன் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றும் ஒரு அமைப்பாகும். முனனால் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் த.மு.மு.கவின் சமூகப்பணிகளை பாராட்டி, த.மு.மு.கவின் அவசர கால ஊர்தி பணியை வெகுவாக பாராட்டிய முதல்வர் தனது சொந்த செலவில் 2 அவசர ஊர்திகளை த.மு.மு.கவிற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.[1]
அதிக எண்ணிக்கையில் இரத்ததான செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது.[சான்று தேவை]
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்கள் அங்குதமிழ் முஸ்லிம்களை நிர்வாகிகளாக கொண்டு கிளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமலான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய நிதியுதவிகளை செய்து வருகின்றனர். இரத்த தானம், ஏழைகளுக்கான இலவச திருமணம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இஸ்லாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது. தேர்தல் மற்றும் பொது பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றிருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உதவிகள் செய்கின்றனர்.
அரசியல் பிரிவு[தொகு]
இதன் அரசியல் பிரிவாக கடந்த 2009 ஆம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.
அதிகாரபூர்வ வாரஇதழ்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
ஆதாரம்[தொகு]
- ↑ "சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு நிறைவு தருகிறது: கருணாநிதி". பார்த்த நாள் 20 மார்ச் 2016.