தமிழ்நாடு அரசு
![]() | |
தலைமையிடம் | புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | ஆர். என். ரவி |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
தலைமைச் செயலாளர் | சிவ் தாஸ் மீனா, இ. ஆ. ப. |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | எம். அப்பாவு, (திமுக) |
துணை சபாநாயகர் | கு. பிச்சாண்டி, (திமுக) |
உறுப்பினர்கள் | 234 |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | சென்னை உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | டி. ராஜா (Acting) |
தமிழ்நாடு அரசு[1] 1986 வரை தமிழ்நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமையிடம் சென்னையில் உள்ள, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.
ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
தற்பொழுதைய ஆட்சியாளர்[தொகு]

தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் ஆர். என். ரவி[2], தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின்[3], தற்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ. ஆ. ப., தற்போதைய தலைமை நீதிபதி டி. ராஜா ஆகியோர் ஆவர்.
தொகுதிகள்[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 72,138,959 ஆகும். இது 130,058 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளும், 39 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. தமிழக அரசு 38 மாவட்டங்களையும், 87 வருவாய் கோட்டங்களையும், 310 வட்டங்களையும், 21 மாநகராட்சிகளையும், 138 நகராட்சிகளையும், 385 ஊராட்சி ஒன்றியங்களையும், 528 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
மின் ஆளுமை[தொகு]
தமிழ்நாடு மாநிலம், மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியதன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில், தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
அமைச்சர்கள்[தொகு]
இக்கட்டுரை |
தமிழகத்தில் மொத்தம் முதலமைச்சருடன் சேர்த்து 35 அமைச்சர்கள் உள்ளனர்.
- மு. க. ஸ்டாலின்
- துரைமுருகன்
- கே. என். நேரு
- இ. பெரியசாமி
- க. பொன்முடி
- எ. வ. வேலு
- எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
- கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
- தங்கம் தென்னரசு
- உதயநிதி ஸ்டாலின்
- எஸ். ரகுபதி
- சு. முத்துசாமி
- கே. ஆர். பெரியகருப்பன்
- தா. மோ. அன்பரசன்
- எம். பி. சாமிநாதன்
- பெ. கீதா ஜீவன்
- அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
- ஆர். எஸ். இராஜ கண்ணப்பன்
- கே. இராமச்சந்திரன்
- அர. சக்கரபாணி
- வே. செந்தில்பாலாஜி
- ஆர். காந்தி
- மா. சுப்பிரமணியம்
- பி. மூர்த்தி
- எஸ். எஸ். சிவசங்கர்
- பி. கே. சேகர் பாபு
- பழனிவேல் தியாகராஜன்
- டி. ஆர். பி. ராஜா
- செஞ்சி கே. எஸ். மஸ்தான்
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- சிவ. வீ. மெய்யநாதன்
- சி. வே. கணேசன்
- மனோ தங்கராஜ்
- மா. மதிவேந்தன்
- என். கயல்விழி செல்வராஜ்
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்" இம் மூலத்தில் இருந்து 2010-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413233934/http://www.assembly.tn.gov.in/history/history.htm.
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.