தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்
இக்கட்டுரை |
தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்
மாநிலத்தின் பொதுத் தேர்தலாகிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை தனது மேற்பார்வையில் நடத்துவதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் இந்திய அரசியலமைப்பின் விதி 324 ன்படி மேலும் நாடாளுமன்றத்தில் 1950 ல் ஏற்படுத்தப்பெற்ற மக்கள் பிரநிதித்துவச் சட்டம், 1951,[1] குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் சட்டம்,1952 ஏற்படுத்தப் பெற்றதாகும்.
மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் அ அதிகாரி (சி.இ.ஒ.- மா.த.தே.அ)[1] இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால், ஆணையரால் நியமிக்கப்படுகின்றார். இவர்களின் பணி மாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தலை மேற்பார்வையிடுவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது. தமிழகத்திலும் இவ்வலுவலரால் இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. மாநிலத் தேர்தல் அலுவலர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்களே அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
தற்பொழுதய தமிழகத் தேர்தல் அலுவலராக திரு. சத்யபிரதா சாஹூ, இ.ஆ.ப, பணியாற்றுகின்றார்.
மாவட்டத் தேர்தல் அலுவலர்[தொகு]
மாவட்ட ஆளவில் தேர்தல்களை மேற்பார்வையிட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மாவட்ட அலுலர்களாக மாவட்ட ஆட்சியாளர்,மாவட்ட நடுவர், வட்டாட்சியர் அலுவலர்களாக செயல்படுகின்றனர்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் நியமனம் சுதந்திர இந்தியாவின் ,1952 முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பே மக்கள் பிரதிநித்துவச் சட்டம், 1950, பிரிவு 13 ஏ ன்படி [1] பின்பற்றபட்டு வருகின்றது.
அதன் செயல்பாடுகள் மற்றும் கடமைகள்[தொகு]
அதன் செயல்பாடுகள் மற்றும் கடமைகளாவன்;[1]
- தேர்தல்கள் அ இடைத் தேர்தல்கள் நடத்துவது.
- தமிழ் நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல்கள்
- தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளின் தேர்தல்கள்
- தமிழ் நாட்டின் 18 மாநிலங்களவைத் தேர்தல்கள்
- இந்தியக் குடியரசுத் தலைவரின் தேர்தல்
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் தேர்தல்.
- வாக்கு மையங்களை அமைத்தல்
- தவறுகள், குறைகள் இல்லா சுதந்திரத் தேர்தலை நடத்த வழி வகை செய்வது.
- வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கித் தருவது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "தமிழ்நாடுத் தேர்தல்கள் அரசு இணையம்" இம் மூலத்தில் இருந்து 2009-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090301140909/http://www.elections.tn.nic.in/organisation.htm.