உள்ளடக்கத்துக்குச் செல்

தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல செயல்களை மேற்கொள்ளும் எந்த ஒரு (அரசு/ அரசு சாரா) அமைப்பும் தன் செயல்களை அல்லது செயலகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமைச் செயலகத்தைக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ”தலைமைச் செயலகம்” என்பது அது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தையே குறிக்கும்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.

 ஒவ்வொரு மாநிலமும் தனக்கான சொந்த செயலகத்தை கொண்டிருக்கும் இதுவே மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக செயல்படுகிறது இது மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகளை கொண்டுள்ளது அரசியல் ரீதியாக அமைச்சர்களை தலைவர்களாகவும் நிர்வாக ரீதியாக செயலர்களை தலைவராக கொண்டிருக்கும் தலைமைச் செயலர் ஒட்டுமொத்த மாநில செயலகத்திற்கும் தலைவராக இருக்கிறார் ஒரு செயலர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளுக்கும் தலைவராக இருக்கிறார்

மாநில செயலகத்தின் செயல்பாடுகள்:

 செயலகம் என்பது ஒரு பணியாளர் முகமது மக்களுக்கான கொள்கைகளை செயல்படுத்துவதில் நிர்வாக துறைகளுக்கு ஆலோசனை வழங்குகிறது
 இது அமைச்சர்கள் தங்களுடைய பங்குகளை முழுவதுமாக செயலாற்ற உதவுவதே இதன் அடிப்படை வேலையாகும்

1. மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றை தீர்மானித்தல் 2.மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்தல் 3.மாநில அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் மற்றும் பொதுச் செலவுகளின் மீது கட்டுப்பாடுகள் விதித்தல் 4.விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் போன்றவற்றை கட்டமைத்தல் 5.நிறுவனங்கள் மூலம் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வை இடுதல் 6.கொள்கைகளின் அமலாக்கத்தின் விளைவுகளை பரிசீலனை செய்தல் மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புகளை பராமரித்தல் திறன் வாய்ந்த நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி வைத்தல் 7.அமைச்சர்கள் மாநில சட்டமன்றங்களில் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் மற்றும் பொறுப்புணர்வுகளுக்காக உதவி செய்தல் 8.துறைகளின் தலைமையை நியமித்து வேலைகளின் விளைவு ஊதிய நிர்வாகம் போன்றவற்றை கவனித்தல் 9.மாநில அரசாங்கத்தின் சிந்தனை களஞ்சியமாக செயல்படுதல் 10.மாநிலத்தின் நிதியில் நிலைமைகளை கூடுமானவரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் 11.மக்களிடமிருந்து குறைகள் மேல்முறையீடுகள் போன்றவற்றை பெற்று அதனை சரி செய்தல்.

தலைமைச் செயலர்[தொகு]

தமிழக அரசின் தலைமைச் செயலர் அல்லது தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார்.

 தலைமைச் செயலாளர் பொதுவாக ஒரு மூத்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியாக உள்ளார் 
 விதிவிலக்காக பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளர் தலைவராக விளங்குகிறார்.

பல்வேறு துறைச் செயலர்கள்[தொகு]

தமிழக அரசு நிருவாகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன. இத் துறைகளுக்குத் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளுக்கு ஒன்று சேர்ந்தோ தனித் தனிச் செயலர்கள் இருப்பர். இச்செயலர்கள் நேரடியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும், தத்தம் துறை அலுவலர்களிடமும் தொடர்பிலிருப்பர்.

தமிழக அரசு நிருவாகத்தின் துறைகளில் சில[தொகு]

 • 1. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
 • 2. விவசாயத்துறை.
 • 3. கால்நடை, பால்வளம், மாறும் மீன் வளத்துறை.
 • 4. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை.
 • 5. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை.
 • 6. வணிக வரி மற்றும் பதிவுத்துறை.
 • 7. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை.
 • 8. நிதித் துறை.
 • 9. சட்டத் துறை.
 • 10. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை.
 • 11. பொதுப் பணித் துறை.
 • 12. உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை.
 • 13. மின் ஆற்றல் துறை.
 • 14. உயர் கல்வித் துறை.
 • 15. உள்துறை.
 • 16. தொழில் துறை.
 • 17. வருவாய்த் துறை.
 • 18. போக்குவரத்துத் துறை.

செயலர்களின் நிலைகள்[தொகு]

துறைச் செயலர்களில் முதன்மைச் செயலர்கள் அத் துறைக்கு முழுப் பொறுப்பு ஆவர்; நேரடியாக அத் துறையின் அமைச்சரின் கீழ் செயல்படுவர். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு பெற்றுப் பின் சார் ஆட்சியாளர்களாகவோ, கூடுதல் மாவட்ட ஆட்சியாளர்களாகவோ அல்லது அதற்கு இணையான பணிகளிலோ நன்கு அனுபவம் பெற்ற பின் மாவட்ட ஆட்சியாளர்களாக அல்லது அதற்கு இணையான பணிகளில் நன்கு அனுபவம் பெற்றவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக கூடுதல் செயலாளர்கள் அல்லது இணைச் செயலாளர்கள் இருப்பர். இவர்களும் இந்திய ஆட்சியியல் மற்றும் நிருவாகவியலில் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக துணைச் செயலர்கள் இருப்பர். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் தேர்வு பெற்ற பின் சில பயிற்சிகளுக்குப் பின்னர் பணியமர்த்தப்படுவர்.