தமிழ்நாட்டின் ஆளுநர்
தோற்றம்
| இக்கட்டுரை தொடரின் ஒரு பகுதியாகும் |
| தமிழ்நாடு அரசியல் |
|---|
தமிழ்நாட்டின் ஆளுநர் (Governors of TamilNadu) தென் இந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர், தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாகச் செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946-இல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
தற்பொழுதுள்ள தமிழ்நாடு, முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்த காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்றுச் சான்றாகும்.[1][2]
தமிழ்நாட்டின் ஆளுநாராக ஆர். என். ரவி என்பவர் செப்டம்பர் 18, 2021 முதல் பதவி வகித்து வந்தார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள் பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)
- ↑ 1947-இலிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)

