தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் [1] (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இவரே தமிழக அரசு சார்பில் வழக்குகளில் வாதாடுவார் மற்றும் அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்குரியத் தகுதிகளுடன் இருப்பவர்.

தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞராக ஏ. நவநீத கிருஷ்ணன் (வழக்கறிஞர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.[2] வி.எஸ். சேதுராமன், முன்னாள் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் எஸ். கோமதிநாயகம் ஆகியோர் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கான கூடுதல் தலைமை வழக்குரைஞராக கே. செல்லபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]