உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியச் சட்டம் (Law of India) இந்தியாவின் நீதிமுறைமையை செயல்படுத்துகின்ற ஒன்றாகும். இது ஆங்கிலேய பொதுச் சட்டத்தைச் சார்ந்தே இங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் வெகுகாலமாக இங்கு ஆட்சிபுரிந்தமையால் அதன் நீதிமுறைமையை இந்தியர்களும் சார்ந்துள்ளனர். இதனோடு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சட்டத் தாக்கங்களும் இந்திய நீதி முறைமையில் இடம் பெற்றிருக்கின்றது.

இந்திய அரசு, இந்திய மாநில அரசுகள், அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் அரசுகள் இயற்றும் சட்டங்களும், இந்தியக் குடியரசுத் தலைவர் அல்லது இந்திய ஆளுநர்கள் அல்லது துணை ஆளுநர்கள் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்களும், அல்லது இவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.

இந்தியாவில் சட்டங்கள் உரிமையியல் சட்டம்,குற்றவியல் சட்டம் என்று இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

சார்ந்துள்ளவை[தொகு]

தற்போதைய இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே இந்தியா தனக்காக உருவாக்கி எழுதிவைத்த முதல் சட்டத் தொகுப்பு ஆகும். இந்திய அரசியலமைப்பு வரையும் பொழுது அயர்லாந்து சட்டம், அமெரிக்கச் சட்டம், பிரித்தானிய சட்டம் மற்றும் பிரான்ஸ் சட்டம் இவற்றின் கலவையில் வடித்தெடுக்கப்பட்ட சட்டமாக இந்திய அரசியலமைப்பில் இந்திய சட்டம் வரையப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய சட்டம் ஐக்கிய நாடுகள் வழிகாட்டுதலின்படி அதன் வரையரைப்படி அமைந்துள்ள மனித உரிமைச் சட்டம் மற்றும் சூழ்நிலையியல் சட்டம் போன்றச் சட்டங்களை ஒற்றமைந்துள்ளன.

உரிமையியல் சிக்கல்கள்[தொகு]

இந்திய உரிமையியல் சட்டம் சிக்கல் நிறைந்தவையாக அமைந்துள்ளன. இந்தியா பல சமயத்தினரை உள்ளடக்கியதால் ஒவ்வொரு மதத்தினரும் அதற்குறியத் தனித்தன்மையை வலியுறித்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக உள்ளது.

பல மாநிலங்களில் திருமணங்களை பதிவு செய்வது, மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்து, இசுலாமியர், மற்றும் என்று தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அவைகள் முறையே இந்து, இசுலாமியர், கிறித்தவர் மற்றும் இம்மூன்று மதங்களில் இருந்தும் மற்ற மதங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு (காதலர்களுக்கு) சிறப்பு திருமண சட்டம் ஆகிய நான்கு மட்டுமேதான்.

இந்தியச் சட்டங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் நன்மைக்காகவே இயற்றப்பெறுகின்றன என்ற போதிலும் நுகர்வோர் நலச் சட்டம்(Consumer Protection Act 1985) போன்ற சட்டங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நன்மை பார்க்கும் சட்டங்கள் ஆகும். இருப்பினும் இந்தியச் சட்ட வரலாற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005) தான் பொது மக்களுக்கு மிகப்பெரிய உரிமைகளை வழங்கிய சட்டமாகும்.

பொதுச் சட்டம்[தொகு]

கோவாவில் மட்டும் போர்ச்சுகீசியர் ஒரே சீர் உரிமையியல் சட்டத்தின படி அனைவருக்கும் , அனைத்து சமயத்தினருக்கும் ஒரே மாதிரியாக வகுக்கப்பட்டப் பொதுச் சட்டம் பின்பற்றப்படுகின்றது.

செப்டம்பர் 2007 இன்படி 1160 சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்[தொகு]

 1. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்
 2. குற்றவியல் சட்டம்
 3. ஒப்பந்தச் சட்டம்
 4. தொழிலாளர்ச் சட்டம்
  1. பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் 2014

2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின், "பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் (The Apprentices (Amendment) Bill, 2014)" பயிற்சியாளர்களின் வேலை நேரத்தையும் விடுமுறை நாட்களையும் தீர்மானிக்கும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்கியது.[1]தொழில் தொடங்குவோருக்கும் நடத்துவோருக்கும் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்காக திருத்தியமைக்கப்பட்ட இச்சட்டம் தொழிலாளர்களுக்கு எதிரானதாக அமைந்துள்ளதாக பொதுவுடைமைக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழகத்தின் சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) கட்சியின் டி.கே.ரங்கராஜன், தொழிலாளர் அமைச்சரவையில் இருந்து வந்துள்ள மாற்றமாக இதனைக் கூறுவதை விட முதலாளிகள் கூட்டமைப்பிடம் இருந்து வந்துள்ள சட்டமாக இதனைக் கண்டித்துக் குறிப்பிட்டார்.[2] இச்சட்டம் நவம்பர் 2014 இல் ராஜ்ய சபாவால் நிறைவேற்றப்பட்டது. [3]

 1. பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா)
 2. குடும்பச் சட்டம்
 3. இந்துச் சட்டம்
 4. இசுலாமியச் சட்டம்
 5. கிருத்துவச் சட்டம்
 6. பொதுச் சட்டம்
 7. தேசியச் சட்டம்
 8. அமலாக்கச் சட்டம்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியச்_சட்டம்&oldid=2916200" இலிருந்து மீள்விக்கப்பட்டது