சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 | |
---|---|
தனி நபர் அல்லது ஒரு கூட்டத்தின் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் | |
சான்று | Act No. 37 of 1967 |
நிலப்பரப்பு எல்லை | இந்தியா முழுமைக்கும் |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
சம்மதிக்கப்பட்ட தேதி | 30 டிசம்பர் 1967[1] |
சட்ட திருத்தங்கள் | |
1. The Unlawful Activities (Prevention) Amendment Act, 1969 (24 of 1969). 2. The Criminal Law (Amendment) Act, 1972 (31 of 1972). |
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், 1967-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கபட்டது. [1][2]
சட்டத்தின் செயல்பாடுகள்
[தொகு]இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.
அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும்.
இந்தச் சட்டத்தின் பிரிவு 43-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சமாக ஒரு நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். அதேபோல், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.
இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. அதேபோல் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் பிரிவு 43-ன் படி, ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இந்தச்க் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.
உபா சட்டத்தில் 2004, 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவு 2019
[தொகு]சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட தேவையான திருத்தங்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. [3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "UAPA, 1967 at NIA.gov.in" (PDF). NIA. பார்க்கப்பட்ட நாள் 28 December 2012.
- ↑ "The Unlawful Activities (Prevention) Act" (PDF). Nia.gov.in.
- ↑ கடும் எதிர்ப்புக்கு மத்தியில் “உபா சட்ட திருத்த மசோதா” மாநிலங்களவையில் நிறைவேறியது
- ↑ UAPA Amendment bill passed in Parliament