உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா குடியரசுத் துணைத் தலைவர்
தற்போது
ஜகதீப் தன்கர்

ஆகஸ்டு 11, 2022 முதல்
வாழுமிடம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், புது தில்லி
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள், புதுப்பிக்கவல்லது
முதலாவதாக பதவியேற்றவர்சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
மே 13, 1952 முதல் மே 12, 1962 வரை
இறுதியாகவெங்கையா நாயுடு
ஊதியம் 1,25,000 ($ 2808) ஒரு மாதத்திற்கு
இணையதளம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் (ஆங்கில மொழியில்)

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.

குடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.

தேர்ந்தெடுக்கும் முறை

[தொகு]

ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.[1]ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றி பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.

ஊதியம்

[தொகு]

துணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்

[தொகு]

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள்.[2]

எண். குடியரத் துணைத் தலைவர் படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு குடியரசுத் தலைவர்
1 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 13 மே 1952 12 மே 1962 ராசேந்திர பிரசாத்
2 சாகீர் உசேன் Zakir Hussain 13 மே 1962 12 மே 1967 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
3 வரதாகிரி வெங்கட்ட கிரி V.V. Giri 13 மே 1967 3 மே 1969 சாகீர் உசேன்
4 கோபால் சுவரூப் பதக் 31 ஆகத்து 1969 30 ஆகத்து 1974 வி. வி. கிரி
5 பசப்பா தனப்பா ஜாட்டி 31 ஆகத்து 1974 30 ஆகத்து 1979 பக்ருதின் அலி அகமது
6 முகம்மது இதயத்துல்லா 31 ஆகத்து 1979 30 ஆகத்து 1984 நீலம் சஞ்சீவ ரெட்டி
7 இராமசாமி வெங்கட்ராமன் R Venkataraman 31 ஆகத்து 1984 27 சூலை 1987 ஜெயில் சிங்
8 சங்கர் தயாள் சர்மா Shankar Dayal Sharma 3 செப்டம்பர் 1987 24 சூலை 1992 ஆர். வெங்கட்ராமன்
9 கோச்செரில் ராமன் நாராயணன் K.R. Narayanan 21 ஆகத்து 1992 24 சூலை 1997 சங்கர் தயாள் சர்மா
10[3] கிருஷ்ண காந்த் Krishna Kant 21 ஆகத்து 1997 27 சூலை 2002 கே. ஆர். நாராயணன்
11 பைரோன் சிங் செகாவத் Bhairon Singh Shekhawat 19 ஆகத்து 2002 21 சூலை 2007 ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
12 முகம்மது அமீத் அன்சாரி[4] Hamid Ansari 11 ஆகத்து 2007 10 ஆகத்து 2012 பிரதீபா பாட்டீல்
(12) முகம்மது அமீத் அன்சாரி[4] Hamid Ansari 11 ஆகத்து 2012 11 ஆகத்து 2017 பிரணாப் முகர்ஜி
13 வெங்கையா நாயுடு 11 ஆகத்து 2017 11

ஆகத்து 2022

ராம் நாத் கோவிந்த்
14 ஜெகதீப் தன்கர் 11 ஆகத்து 2022 தற்போது திரௌபதி முர்மு

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளிப்புற இணைப்புக்கள்

[தொகு]