உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால் சுவரூப் பதக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் சுவரூப் பதக்
4வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
31 ஆகத்து 1969 – 30 ஆகத்து 1974
குடியரசுத் தலைவர்வி. வி. கிரி
பக்ருதின் அலி அகமது
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்வி. வி. கிரி
பின்னவர்பசப்பா தனப்பா ஜாட்டி
கருநாடக ஆளுநர்
பதவியில்
13 மே 1967 – 31 ஆகத்து 1969
முதலமைச்சர்எஸ். நிஜலிங்கப்பா
வீரேந்திர பட்டீல்
முன்னையவர்வி. வி. கிரி
பின்னவர்தர்ம வீரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-02-26)26 பெப்ரவரி 1896
பரேலி, வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்பொழுது உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு4 அக்டோபர் 1982(1982-10-04) (அகவை 86)
அரசியல் கட்சிசுயேச்சை
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

கோபால் சுவரூப் பதக் (Gopal Swarup Pathak) இந்தியாவின் நான்காவது குடியரசுத் துணைத் தலைவராக ஆகத்து 1969 முதல் ஆகத்து 1974 வரை பணியாற்றியுள்ளார்.

இவர் குடியரசுத் தலைவராக பதவியேற்காத முதல் இந்திய துணைத் தலைவர் ஆவார்.

இளமை[தொகு]

இவர் பிப்ரவரி 26, 1896 அன்று உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் ஆவார்.

பணி[தொகு]

1945-46களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக பொறுப்பேற்றார். 1960-67 காலத்தில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 1966-67ஆம் ஆண்டுகளில் சட்ட அமைச்சராகவும் 1967-69 ஆண்டுகளில் மைசூர் மாநில (தற்கால கருநாடக மாநிலம்) ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3]


இறப்பு[தொகு]

கோபால் சுவரூப் பதக், அக்டோபர் 4, 1982ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சுவரூப்_பதக்&oldid=3519610" இலிருந்து மீள்விக்கப்பட்டது