ரா. வெங்கட்ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராமசுவாமி வெங்கட்ராமன்
R Venkataraman.jpg
8வது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜூலை 25, 1987 – ஜூலை 25 1992
துணை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா
முன்னவர் ஜெயில் சிங்
பின்வந்தவர் சங்கர் தயாள் சர்மா
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 4, 1910(1910-12-04)
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு ஜனவரி 27, 2009 (அகவை 98)
புது டில்லி, இந்தியா

இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் விவகாரம், ராஜிவ்காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கி இருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர். பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்திய குடியரசு தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

வாழ்வும்,தொழிலும்[தொகு]

இவர் 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் இராமசாமி ஐயர். பள்ளிப்படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின் உயர் கல்விக்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளர். தொழிலாளர் சட்டத்தில் புலமை பெற்றவர். தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டவர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூரில் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள்,உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கம் அமைத்தவர். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டவர். 1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை.

வகித்த பதவிகள்[தொகு]

  • நாடாளுமன்ற காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்
  • தமிழக காங்கிரஸ் கட்சியின் செயலாளர்
  • ஆவடி காங்கிரஸ் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர்
  • திட்டக்குழுவில் தொழில் துறை, தொழிலாளர் நலன், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ரயில்வே ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.
  • நடுவண் நிதியமைச்சர்.(1980-82)
  • பாதுகாப்பு அமைச்சர் (1982-84)
  • குடியரசுத் துணைத்தலைவர் (1984)
  • குடியரசுத் தலைவர் 1987-1992[1]

குறிப்புகள்[தொகு]

  1. தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்140
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._வெங்கட்ராமன்&oldid=1749855" இருந்து மீள்விக்கப்பட்டது