பி. வி. நரசிம்ம ராவ்
பி. வி. நரசிம்ம ராவ் | |
---|---|
![]() | |
பிறப்பு | 28 சூன் 1921 Vangara, Karimnagar |
இறப்பு | 23 திசம்பர் 2004 (அகவை 83) தில்லி |
படித்த இடங்கள் | |
பணி | அரசியல்வாதி, புதின எழுத்தாளர், freedom fighter, கவிஞர் |
பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.[1]
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.
1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.
மறைவு[தொகு]
டிசம்பர் 2004 இல், தனது 83 ஆம் வயதில் ராவ் மாரடைப்பால் காலமானார்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- பி. வி. நரசிம்ம ராவ்
- இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்
- இந்தியப் பிரதமர்
- நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி
![]() |
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
- இந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்
- இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியப் பிரதமர்கள்
- 1921 பிறப்புகள்
- 2004 இறப்புகள்
- ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்
- இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
- இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்