மொரார்ஜி தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொரார்சி தேசாய்
Morarji Desai 1978.jpg
5வது இந்தியப் பிரதமர்
பதவியில்
மார்ச் 24, 1977 – ஜூலை 15, 1979
முன்னவர் இந்திரா காந்தி
பின்வந்தவர் சரண் சிங்
2வது இந்திய துணைப் பிரதமர்
பதவியில்
13 மார்ச் 1967 – 16 ஜூலை 1969
முன்னவர் சர்தார் வல்லபாய் படேல்
பின்வந்தவர் சரண் சிங்,

ஜெகசீவன்ராம்

தனிநபர் தகவல்
பிறப்பு பிப்ரவரி 29, 1896
பாதிலி, மும்பை
இறப்பு ஏப்ரல் 10, 1995
அரசியல் கட்சி ஜனதா கட்சி (1977-1988)
பிற அரசியல்
சார்புகள்
* இந்திய தேசிய காங்கிரஸ் (1934-1969)
* நிறுவன காங்கிரஸ் (1969-1977)
* ஜனதா தளம் (1988-1995)

மொரார்சி ரன்சோதிசி தேசாய் (29 பிப்ரவரி 1896 - 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வெளியேறி பின்பு காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலையும், பல அதிகார மீறல் செயல்களையும், அவர் அப்போது கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் முதல் எதிர்கட்சியான ஜனதா கட்சியில் பிரதமர் ஆனார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.

இளமைக் காலம்[தொகு]

மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரார்ஜி_தேசாய்&oldid=3611416" இருந்து மீள்விக்கப்பட்டது