பாரத ரத்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரத ரத்னா
Bharat Ratna.jpg
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2014
மொத்தம் வழங்கப்பட்டவை 43
வழங்கப்பட்டது இந்திய அரசு
விவரம் பாரத ரத்னா பதக்கம்: அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும்
கடைசி வெற்றியாளர்(கள்) சி.என்.ஆர்.ராவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர்
விருது தரவரிசை
ஏதுமில்லை ← பாரத ரத்னாபத்ம விபூசண்

பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[1] இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.


1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

விருது பயன்பாட்டு விதிகள்[தொகு]

  • விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
  • அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். [2][3]

விருது பெற்றோர் பட்டியல்[தொகு]

ஆண்டு படம் பெயர்
1954 Radhakrishnan.jpg முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)
1954 C Rajagopalachari Feb 17 2011.JPG சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி]] (1878-1972)
1954 Sir CV Raman.JPG முனைவர். சி. வி. ராமன் (1888-1970)
1955 - முனைவர். பக்வான் தாஸ் (1869-1958)
1955 Visvesvaraya Statue bust at JIT.jpg முனைவர். மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (1861-1962)
1955 Bundesarchiv Bild 183-61849-0001, Indien, Otto Grotewohl bei Ministerpräsident Nehru cropped.jpg ஜவகர்லால் நேரு (1889 -1964)
1957 - கோவிந்த் வல்லப் பந்த் (1887-1961)
1958 - முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962)
1961 - முனைவர். பிதான் சந்திர ராய் (1882-1962)
1961 - புருசோத்தம் தாசு தாண்டன் (1882-1962)
1962 Food Minister Rajendra Prasad during a radio broadcast in Dec 1947 cropped.jpg முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963)
1963 - முனைவர். சாகிர் ஹுசைன்(1897-1969)
1963 - முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972)
1966 1736 Lal Bahadur Shastri cropped.jpg லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966)
1971 Indira2.jpg இந்திரா காந்தி (1917-1984)
1975 - வி.வி. கிரி (1894-1980)
1976 - கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975)
1980 MotherTeresa 090.jpg அக்னசு தெரேசா போயாக்சு (அன்னை தெரேசா) (1910-1997)
1983 - ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982)
1987 Khan Abdul Ghaffar Khan.jpg கான் அப்துல் கப்பார் கான் (1890-1988)
1988 M. G. Ramachandran.jpg எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987)
1990 Young Ambedkar.gif முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956)
1990 Nelson Mandela-2008 (edit).jpg நெல்சன் மண்டேலா (b 1918)
1991 Rajiv Gandhi (cropped).jpg ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991)
1991 Sardar patel (cropped).jpg சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950)
1991 Morarji Desai (portrait).png மொரார்ஜி தேசாய் (1896-1995)
1992 Maulana Abul Kalam Azad.jpg மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958)
1992 - ஜே. ஆர். டி. டாடா (1904-1993)
1992 SatyajitRay.jpg சத்யஜித் ராய் (1922-1992)
1992 - சுபாஷ் சந்திர போஸ் (1897-1945) (பின்னர் திரும்ப பெறப்பட்டது)
1997 AbdulKalam.JPG ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931)
1997 - குல்சாரிலால் நந்தா (1898-1998)
1997 - அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996)
1998 Ms subbulakshmi 140x190.jpg எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004)
1998 - சி. சுப்ரமணியம் (1910-2000)
1999 - ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979)
1999 Ravi Shankar 2009 crop.jpg ரவி சங்கர் (b 1920)
1999 Amartya Sen NIH.jpg அமர்த்தியா சென் (b 1933)
1999 Gopinath Bordoloi.jpg கோபிநாத் போர்டோலாய் (b 1927)
2001 Lata Mangeshkar - still 29065 crop.jpg லதா மங்கேஷ்கர் (பி 1929)
2001 Bismillah at Concert1 (edited) 2.jpg பிஸ்மில்லா கான் (1916 - 2006)
2008 Pandit Bhimsen Joshi (cropped).jpg பீம்சென் ஜோஷி (பி 1922)
2013 CNRrao2.jpg சி.என்.ஆர்.ராவ் (பி 1934)
2013 Sachin at Castrol Golden Spanner Awards (crop).jpg சச்சின் டெண்டுல்கர் (பி 1973)

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_ரத்னா&oldid=1734722" இருந்து மீள்விக்கப்பட்டது