பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது (Dr. Moturi Satyanarayan Award, தேவநாகரி: पद्मभूषण डॉ. मोटूरि सत्यानारायण पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்திஇலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு பெரும் இந்தி மொழி ஆர்வலர் மோடுரி சத்யநாராயண் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. முதல் விருது 2002ஆம் ஆண்டு அரிசங்கர் ஆதேசிற்கு வழங்கப்பட்டது.