நவ சேனா பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ சேனா பதக்கம்
Nao Sena Medal ribbon.svg
விருது குறித்தத் தகவல்
வகை பதக்கம்
வழங்கப்பட்டது இந்தியக் கடற்படை

நவ சேனா பதக்கம் (Nao Sena Medal) இந்தியக் கடற்படை, தனது கடற்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காக வழங்கும் ஒரு விருதாகும். இது 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது.

முகப்பு: இந்தப் பதக்கத்தின் முதன்மை விவரணங்கள்: இது ஓர் உள்ளடங்கிய ஓரங்களை உடைய ஐம்முனை வெள்ளி பதக்கமாக குறிப்பிட்டாலும், இத்தகைய பதக்கம் வெளியானதாகத் (மாதிரிகள் மற்றும் குறுவடிவங்கள் தவிர்த்து ?) தெரியவில்லை. மே 1961ஆம் ஆண்டில் இதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதன்படி முகப்பில் கடற்படை சின்னம் பொறிக்கப்பட்ட 35 மி.மீ வட்டவடிவ வெள்ளி பதக்கமாக உள்ளது. பதக்கத்தைத் தொங்கவிட ஓர் அழகிய சட்டகம் அமைக்கப்பட்டுள்ளது; இதன் ஓரத்தில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.

பின்புறம்: முதலில் ஓர் கயிறு சுற்றிய மேல்நோக்கிய திரிசூலம் பதிப்பதாக இருந்தது. 1961ஆம் ஆண்டில் இதற்கு மாற்றாக குறுக்காக ஒன்றன்மீது ஒன்று சாத்திய நங்கூரங்களைச் சுற்றி சங்கிலி வடம் அமைந்துள்ளதைப் போல வடிவமைக்கப்பட்டது. மேலே இந்தியில் "நௌ சேனா பதக்கம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நாடா: 2 மிமீ வெள்ளை மையக்கோடுகளுடன் 32 மிமீ, கருநீலம். கருநீலம் 15 மிமீ, வெள்ளை 2 மிமீ, கருநீலம் 15 மிமீ.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_சேனா_பதக்கம்&oldid=3462331" இருந்து மீள்விக்கப்பட்டது