உள்ளடக்கத்துக்குச் செல்

விசிட்ட சேவா பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசிட்ட சேவா பதக்கம்
விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்காலப் பணி
பகுப்பு சிறப்புமிகு சேவை
நிறுவியது சனவரி 26, 1960
வழங்கப்பட்டது இந்திய அரசு
விவரம் படைத்துறையின் அனைத்து பிரிவினரக்கும்
முந்தைய பெயர்(கள்) விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III. (சனவரி 27, 1967 வரை)
முகப்பு மையத்தில் ஐம்முனை நட்சத்திரம் கூடிய 35 மி.மீ வட்டவடிவ பதக்கம்.
நேரான பட்டயத்திலிருந்து தொங்கவிடப்பட்டது; பக்கவாட்டில் பெயர்.
பின்புறம் மேலே இந்தியில் விருது பெயருடன் கீழே அரசு இலச்சினை.
இந்தியில் "விசிட்ட சேவா பதக்கம்"
நாடா 32 மிமீ, 2 மிமீ கருநீல பட்டைகளுடன் கூடிய மஞ்சள் நாடா

விசிட்ட சேவா பதக்கம் (Vishisht Seva Medal அல்லது VSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படக்கூடியதாகும்.

இந்தப் பதக்கம் துவக்கத்தில் "விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III" என வழங்கப்பட்டது[2]. 1967ஆம் ஆண்டு முதல் தற்போதையப் பெயரில் அழைக்கப்படுகிறது. பதக்க வடிவமைப்பில் இதனால் எந்த மாறுதல்களும் இல்லை. 1980ஆம் ஆண்டு முதல் போர்க்காலச் சிறப்புப் பணிகளுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுவதால்[2] இந்த விருது போரற்ற அமைதிக்காலப் பணிச் சிறப்பிற்காக வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vishist Seva Medal & Sarvottam Yudh Seva Medal". bharat-rakshak.com. Archived from the original on 2007-11-11. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
  2. 2.0 2.1 Ed Haynes. "Vishisht Seva Medal". Archived from the original on 2007-07-27. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிட்ட_சேவா_பதக்கம்&oldid=3571575" இலிருந்து மீள்விக்கப்பட்டது