இந்தியக் கடற்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Naval Ensign of India.svg
2001-2004
1950-2001

இந்தியக் கடற்படை (தேவநாகரி: भारतीय नौ सेना) என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவு. 2013-2014 காலகட்டத்தில் இதில் ஏறத்தாழ இலட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர், இவர்களில் பாதுகாப்பு படையை சேராதவர்கள் 43,000, அதிகாரிகள் 8,700, கடற்படையினர் 50,000 [1], 2008, நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து "சாகர் ப்ரஹரி பல்" என்ற அமைப்பை உருவாக்கி அதில் 1,000 வீரர்களும், 80 விரைவு தாக்குதல் கலன்களும் இருக்கும் என இந்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜூலை 2009 தெரிவித்தது.[2] இந்தியக் கடற்படை 2014, மார்ச்சு மாத காலத்தில் 184 கலன்களை கொண்டிருந்தது. இதில் ஐ.என்.எஸ் விராட், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியனவும் 17 நீர்மூழ்கிக்கப்பல்களும் அடங்கும் [3].

நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன. நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.[4][5]

பணி[தொகு]

இந்தியக் கடற்படை தனக்கென்று பல முதன்மையான பணிகளைக் கொண்டுள்ளது:

  • மற்ற ராணுவப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து, போர் மற்றும் அமைதி ஆகிய இரண்டு கால கட்டங்களிலும் இந்திய மக்கள் மற்றும் கடல் சார்ந்த உரிமை ஆகியவற்றிற்கு எல்லைகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், ஆக்கிரமிப்புகளையும் தடுப்பது மற்றும் முறியடிப்பது ஆகிய செயல்பாடுகள்;
  • இந்தியாவின் கடல் சார்ந்த தேசிய அரசியல்,பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களில் மேம்பாட்டைக் கொணர்வதற்கான செயல்திட்டங்களில் ஈடுபடுதல்;
  • இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையின் ஒத்துழைப்புடன் இந்தியாவின் பொறுப்பில் உள்ள கடலோரப் பகுதிகளில் நல்ல ஸ்திரத்தன்மையையும் ஒழுங்கையும் நிலை நாட்டுதல்;
  • இந்தியாவின் கடலோர அண்டைப் பகுதிகளுக்கு (பேரிடர் நிவாரண உதவி உள்ளிட்ட) தேவையான உதவிகளை அளித்தல்.[6]
  • மேம்பட்ட ஒரு உலகை உருவாக்கும் முயற்சியில் 'பன்முகப் பாதுகாப்பு முறை'களில் முக்கியமான பங்கு வகித்தல்.[7]

வரலாறு[தொகு]

இந்தியா 7,600 ஆண்டுகளுக்கான கடல் வலிமை வரலாறு கொண்டது.[8][9][10][11] முதல் [12][13] கடல் துறைமுகம் என்பது சுமாராக கி.மு 2300 கால கட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் போதே, தற்பொழுது குஜராத் கரையில் உள்ள மாங்க்ரோல் துறைமுகத்திற்கு அருகிலான லோதல் என்னும் இடத்தில், கட்டப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. ஏறத்தாழ கி.மு1500ஆம் ஆண்டில் யில் எழுதப்பட்ட ரிக் வேதம், வருண தேவர் கடல் வழிகளைப்பற்றிய அறிவு பெற்றிருந்தார் என்றும் கடற் பயணங்களைப் பற்றி விரிவாகவும் எடுத்துரைக்கிறது. புயல் நிலைகளின் போது கப்பலுக்கு ஸ்திரத்தன்மையை அளிப்பதற்காக, ப்ளாவா என்னும் கப்பலின் புறங்களில் இறக்கைகள் பொருத்தப்பட்டிருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. கி.பி.நான்காவது மற்றும் ஐந்தாவது நூற்றாண்டுகளில், மத்ஸ்ய யந்த்ரா என்னும் ஒரு திசையறியும் கருவி கப்பலைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது.

கப்பல்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தைப் பற்றிய முந்தைய காலங்களில் அறியப்பட்ட குறிப்பு, கி.மு 4வது நூற்றாண்டில் மௌரிய ஆட்சிக் காலத்தில் காணப்படுகிறது. மன்னர் சந்திரகுப்த மௌரியரின் முதன் மந்திரி கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலில், நவத்யக்ஷா (கப்பல்களின் மேற்பார்வையாளர் என்பதற்கான சமஸ்கிருத வார்த்தை) என்பதன் கீழ் மாநில நீர் வழித் துறையைப் பற்றி ஒரு முழு அத்தியாயமே காணப்படுகிறது[5]. ஸமுத்ரஸம்யனம் என்னும் சொல்லின் பொருளுக்கு மேல் விளக்கம் அளிப்பதான நவ த்விபந்தரகமனம் என்னும் சொல் (மற்ற இடங்களுக்கு கப்பல்கள் மூலமாகச் செல்வதை அதாவது ஆய்வுப்பயணம் என்பதைக் குறிக்கும் வடமொழிச் சொல்), பௌதாயன தர்மஸாஸ்த்ரா என்னும் புத்த மதப் புத்தகம் மற்றும் இந்தப் புத்தகம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ராஜேந்திர சோழர் I காலத்தில் சோழ அரசுப்பகுதிகள்,சி.1030

இந்தியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான வணிகத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குக் கடல் வழிகளே பிரதானமாக இருந்து வந்தன; அதுவே மற்ற சமூகங்களில் இந்திய கலாசாரத்தின் தாக்கம் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தது. இந்தியாவின் மிகச் சக்திவாய்ந்த கடற்படைகள் மௌரிய,சதவாஹன,சோழ,விஜயநகர,கலிங்க,மராத்திய மற்றும் மொகலாய அரசுகளின் கடற்படைகளை உள்ளிட்டிருந்தது.[14] வெளிநாட்டு வாணிபத்திலும் கடல் சார்ந்த செயற்பாடுகளிலும் சோழர்கள் சிறந்து விளங்கினர். இதனால் அவர்களது செல்வாக்கு கடல் கடந்து சீன மற்றும் தென்மேற்கு ஆசியாவிலும் பரவியது.

17வது மற்றும் 18வது நூற்றாண்டுகளின் போது மராத்திய மற்றும் கேரளக் கடற்படைகள் விரிவாக்கப்பட்டன; இவை பல்வேறு சமயங்களில் ஐரோப்பியக் கடற்படைகளைத் தோற்கடித்து (பார்க்க:கொலேசல் போர் ) துணைக் கண்டத்தின் சக்தி வாய்ந்த கடற்படைகளாக விளங்கின. பால் மற்றும் கால்பட் என்னும் கப்பல்கள் பங்குபெற்ற மராத்தியக் கடற்படையின் மறு ஆய்வு ரத்னகிரிக் கோட்டையில் நடைபெற்றது. 'பால்' கப்பல் மூன்று பாய்மரங்கள் மற்றும் தனது அகன்ற புறங்களில் துருத்தியவாறுள்ள துப்பாக்கிகள் கொண்ட போர்க்கப்பல்.[15] ஸாமுத்ரியின் கடற்படைத் தலைவரான குஞ்சாலி மரக்கர் மற்றும் கநோஜி ஆங்கிரே என்பவர்கள் அந்தக் கால கட்டத்தின் குறிப்பிடத்தக்க இரண்டு கடற்படைத் தலைவர்களாவர்.

குடியேறிகள் காலம்[தொகு]

1830வது வருடம் இந்தியா ஒரு குடியேற்ற நாடு என்னும் நிலையில் இருந்த வேளையில், ஹெர் மெஜெஸ்டிஸ் இண்டியன் நேவி என்ற பெயரில், பிரிட்டிஷ் இந்தியக் கடற்படை பிரிட்டிஷ் நாட்டினரால் நிறுவப்பட்டது.(அதற்கு முன் அது 1612ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியால் ஹானரபில் ஈஸ்ட் இண்டியா கம்பெனி'ஸ் மெரைன் என்று அறியப்பட்டது. முழு வரலாறு அறிய மேலே உள்ள இணைப்பைக் காணவும்). 1928ஆம் ஆண்டில் ஒரு பொறியியல் அதிகாரியாக தி ராயல் இண்டியன் மெரைனில் சேர்ந்த சப் லெஃப்டினென்ட் டி.என். முகர்ஜி என்பவரே உயர் பொறுப்பளிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். 1946ஆம் ஆண்டில் இந்திய மாலுமிகள் தமது கப்பல்களிலும் கரையோர நிறுவனங்களிலும் உருவாக்கிய தி ராயல் இண்டியன் நேவி மியூட்டினி என்று கூறப்பட்ட புரட்சியானது இந்தியா முழுவதும் பரவியது. இந்தப் புரட்சியில் மொத்தமாக 78 கப்பல்கள், 20 கரையோர நிறுவனங்கள் மற்றும் 20,000 மாலுமிகள் ஈடுபட்டனர். இந்தியா 1950வது வருடம் ஜனவரி 26 அன்று குடியரசு நிலை அடைந்தபோது, இது இந்தியக் கடற்படை என்று பெயர் பெற்றது; இதன் கலன்கள் இந்தியக் கப்பற் கலன்கள் (ஐ.என்.எஸ்) என்று பெயர் பெற்றன. 1958வது வருடம் ஏப்ரல் 22 அன்று கடற்படையின் முதல் தலைவராக வைஸ் அட்மிரல் ஆர்.டி.கடாரி பொறுப்பேற்றார்.

கோவா படையெடுப்புகள்[தொகு]

கடற்படை முதன் முதலில் ஈடுபட்ட ஒரு போராட்டம் 1961வது ஆண்டு நிகழ்ந்த ஆபரேஷன் விஜய் என்னும் கோவா படையெடுப்பு ஆகும்.

போர்ச்சுகல்லின் குடியேற்றத்திற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் இந்தியாவிற்கு இடையே பல வருடங்களாக அதிகரித்து வந்த அழுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்தே இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 21,1961ஆம் ஆண்டில் அஞ்சதிப் தீவில் சபர்மதி என்னும் பயணிகள் கப்பலின் மீது போர்ச்சுகீசியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார் மற்றும் இருவம் காயமடைந்தனர். இது நிகழ்ந்த சிறிது காலத்தில், இந்திய அரசாங்கம் ராணுவ இடையூட்டின் மூலம் கோவாவில் போர்ச்சுகீஸ் ஆட்சியை முடிக்கத் தீர்மானித்தது. இந்தியக் கப்பல்கள், காலாட்படை மற்றும் கடற்படையின் நிலமிறங்கும் வீரர்களுக்குத் தளவாட ஆதரவு அளித்தன. இந்தச் செயற்பாட்டின்போது, ஐ.என்.எஸ் தில்லி ஒரு போர்ச்சுகீஸ் ரோந்துப் படகை மூழ்கடித்தது. ஒரு சிறு போருக்குப் பின்னர் இந்தியப் போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ் பெட்வா மற்றும் ஐ.என்.எஸ். பியஸ் ஆகியவை என்.ஆர்.பி அஃபோன்ஸோ டெ ஆல்புகெர்க் என்னும் போர்ச்சுகீசியக் கப்பலை மூழ்கடித்தன.[16]

இந்திய-பாகிஸ்தான் போர்கள்[தொகு]

ஐஎன்எஸ் விக்ராந்த் 1971 போரில் பங்கு கொண்டது; மற்றும் அது கிழக்கு பாகிஸ்தான் கரையோரத்தை (தற்போதைய பங்களாதேஷ்) பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.

பாகிஸ்தான் நாட்டுடன் நிகழ்ந்த இரண்டு போர்களில் கடற்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 1965வது ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் நிகழ்வில் இவை பெரும்பாலும் கரையோர ரோந்துப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தன; எனினும், 1971 போர் நிகழ்வில் கராச்சி துறைமுகத்தில் குண்டு வீசியதில் இது முக்கிய பங்கு வகித்தது. டிசம்பர் 4ஆம் தேதி துவக்கப்பட்ட இந்தத் தாக்குதல் ஆபரேஷன் ட்ரைடென்ட் என்று பெயரிடப்பட்டது. இதில் அடைந்த வெற்றியின் காரணமாக, அப்போது துவங்கி இந்த தினமே கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தப்போரின் மையம் கிழக்கிந்திய-பாகிஸ்தான் எல்லைக்கும் வங்காள விரிகுடா விற்கும் நகர்வதற்கு முன்னர் இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் பைதன் என்னும் தாக்குதல் நடத்தப்பட்டது. தனது நட்பு நாடான பாகிஸ்தானுடன் தனக்கிருந்த கூட்டொருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணம்,யுனைடெட் ஸ்டேட்ஸ் யூஎஸ்எஸ் என்டர்பிரைஸ் என்பதன் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் 74 என்னும் போர்க் கப்பலை வங்காளக் கடலில் செலுத்தியது. ஐஎன்எஸ் விக்ராந்த் தலைமையில் ஒரு செயற்படை எண்டர்பிரைஸ் படையை எதிர்கொள்வதற்காக நங்கூரமிடப்பட்டிருந்தது;சோவியத் கடற்படை நீர் மூழ்கிக் கப்பல்களும் யூ.எஸ். படைகளைப் பின் தொடர்ந்தன. யூ.எஸ். படைக்கப்பல் இந்தியக் கடலை விட்டு விலகித் தென் கிழக்கு ஆசியாவை நோக்கிப் பயணப்பட்டதால், நேருக்கு நேரான ஒரு தாக்குதல் தவிர்க்கப்பட்டது.[17]

விளக்க இயலாத சூழ்நிலையில்[18], பாகிஸ்தானிய கடற்படையின் ஒரே பெருந் தொலைவு நீர் மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஸி மூழ்கிப்போனதால், கிழக்கு பாகிஸ்தான் வழியை அடைப்பது இந்தியாவிற்கு எளிதானது.[19] ஐஎன்எஸ் நிர்காட் மற்றும் ஐஎன்எஸ் நிபாட் ஆகிய ஏவுகணைக் கப்பல்கள் இரண்டும் தலா ஒரு வெடிகுண்டு தாங்கிச் செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை மூழ்கடித்தன; ஐஎன்எஸ் வீர் கடற்கண்ணிவாரிக் கப்பலைத் தகர்த்தது. விக்ராந்த் போர்க் கப்பலிலிருந்து செயல்படும் ஸீ ஹாக்ஸ் மற்றும் ஆலைஸஸ் ஆகிய கடற்படை விமானங்களும் பல சிறு பீரங்கி போர்க்கப்பல்கள் மற்றும் வணிக கப்பற் கலன்கள் ஆகியவற்றை மூழ்கடிப்பதில் உறுதுணையாக இருந்தன. மிகப் பெரும் போர் விபத்து ஒன்றும் நேரிட்டது: (பிஎன்எஸ் ஹாங்கார் என்பதால் மூழ்கடிக்கப்பட்ட) குக்ரி என்னும் போர்க்கப்பல்; மேற்குப் பகுதியில் நிகழ்ந்த போரில் கிர்பான் என்னும் கப்பலும் சேதமடைந்தது. இறுதியில், பாகிஸ்தானின் படைக் கலன்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை உள்வரும் மற்றும் வெளியேறும் வழிகளான கிழக்கு பாகிஸ்தான் துறைமுகம்மற்றும் கராச்சித் துறைமுகம்[20][21] ஆகியவற்றை முழுவதுமாக சூழடைப்பு செய்வதில் இந்தியக் கடற்படை வெற்றியடைந்தது.[22] இச் செயற்பாடுகள் இந்தப் போரில் இந்தியாவின் வெற்றியை உறுதியிட்டன.[23][24]

கலன்களின் வகைகள் இந்தியக் கடற்படையின் இழப்புகள் பாகிஸ்தானியக் கடற்படையின் இழப்புகள்
வெடிகுண்டு தாங்கிச் செல்லும் நீர் மூழ்கிக் கப்பல்கள் ஏதுமில்லை 2, பிஎன்எஸ் கைபார் மற்றும் ஷாஜஹான்*(சேதமடைந்தன)
போர்க் கப்பல்கள் 1,ஐஎன்எஸ்குக்ரி ஏதுமில்லை
நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏதுமில்லை 1, பிஎன்எஸ் காஸி
கடற்கண்ணிவாரிக் கப்பல்கள் ஏதுமில்லை 1, பிஎன்எஸ் முஹாஃபிஸ்
கடற்படை விமானங்கள் 1,ஆலைஸ் ஏதுமில்லை
ரோந்துப் படகுகள் மற்றும் சிறு பீரங்கி போர்க் கப்பல்கள் ஏதுமில்லை 7 சிறு பீரங்கி போர்க் கப்பல்களும் 3 ரோந்துப் படகுகளும்
வணிகக் கடற்படை மற்றும் ஏனைய கப்பல்கள் ஏதுமில்லை 11 (யூஎஸ் ஆயுதக் கப்பல் ஒன்றையும் உள்ளிட்டு)
நிலத்தில் இழப்புகள் ஏதுமில்லை கராச்சித் துறைமுகம் மற்றும் எண்ணை நிறுவனங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள்.
*பிஎன்எஸ் ஷாஜஹான் என்னும் கப்பல் சீரமைக்க இயலாத அளவு சேதமாகிவிட்டதாக அறியப்பட்டது.
**

ஆபரேஷன் காக்டஸ்[தொகு]

1988வது வருடம் மாலத்தீவுகளில் அரசுரிமையைப் பறிக்க ப்ளோட் ஈடுபட்ட வல்லடியை வெற்றிகரமாகக் குலைப்பதில் இந்திய விமானப் படையுடன் இந்தியக் கடற்படை இணைந்து செயல்பட்டது.[25] கரையோர உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு கடற்படை விமானம் ப்ளோட் போராளிகளால் கடத்தப்பட்ட ஒரு கலத்தைக் கண்டுபிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த பணயக் கைதிகளில் மாலத்தீவின் மூத்த மந்திரியும் ஒருவர். அந்தக் கலத்தை மீட்பதற்கு ஆபரேஷன் காக்டஸ் என்னும் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது. ஐஎன்எஸ் கோதாவரி மற்றும் இந்தியக் கடற்படை செயல் வீரர்களின் ராணுவ இடையூடுகளுக்குப் பின்னர் போராளிகள் சரணடைந்தனர்.[26]

1999-2001 போர்ச் செயற்பாடுகள்[தொகு]

1999வது வருடம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நிகழ்ந்த வேளையில் தல்வாரி செயற்பாடு என்பதன் ஒரு பகுதியாக வடக்கு அராபியக்கடலில் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்படைகள் அமர்த்தப்பட்டிருந்தன.[27] பாகிஸ்தானிய கடற்படையின் சாத்தியமான ஒரு தாக்குதலிலிருந்து இந்தியாவின் கடலோரச் சொத்துக்களைப் பாதுகாப்பதும், இந்தியாவின் கடல் வணிகப் பாதைகளை அடைப்பதன் மூலம் அதனை ஒரு முழுமையான போராக மாற்றுவதான பாகிஸ்தானிய முயற்சியைத் தடுப்பதுமே இதன் நோக்கம்.[28] கார்கில் போரின் போது இந்தியக் காலாட்படையினருடன் தோளோடு தோளாக இந்தியக் கடற்படை விமானிகள் மற்றும் செயல் வீரர்களும் போரிட்டனர்.[29][30]

2001-2002வது வருடங்களில் இந்திய-பாகிஸ்தான் உறவில் சுமுகமற்ற நிலை நிலவியபோது செயல்படுத்தப்பட்ட ஆபரேஷன் பராக்ரம் என்னும் முப்படையின் ஒருங்கிணைந்த திட்டத்தில் இந்தியக் கடற்படையும் பங்கேற்றது. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் அணிவகுக்கப்பட்டிருந்தன.[31]

பின்னர் 2001வது வருடம்,ஆபரேஷன் எண்ட்யூரிங் ஃப்ரீடம் என்னும் செயற்திட்டத்தில் பங்கேற்க மலாக்கா கடற்கால் வழியாக சென்ற ஐக்கிய நாடுகள் போர்க்கப்பல்களுக்கு இந்தியக் கடற்படை பாதுகாப்பு அளித்தது.[32]

பேரிடர் நிவாரணம்[தொகு]

2004 இந்தியப் பெருங்கடல் நில அதிர்ச்சி[தொகு]

2004ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பெருங்கடலில் உருவான நில அதிர்ச்சியின் போது, இந்தியக் கடற்படை 27 கப்பல்கள், 19 உலங்கு வானூர்திகள், 6 கடற்படை விமானங்கள் மற்றும் 5000த்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் ஆகியோரை நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியது.[33] இத்தகைய பணிகள் இது போன்ற பல்வேறு இடங்களில் இயங்கும் நிவாரண வேலைகளில் ஒரு பகுதியே. இந்திய மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த ஆபரேஷன் மாடத் ,அந்தமான் நிகோபார் தீவுகளில் நடந்த ஆபரேஷன் ஸீ வேவ்ஸ் ,மாலத்தீவுகளில் நடந்த ஆபரேஷன் காஸ்டர் , இலங்கையில் நடந்த ஆபரேஷன் ரெயின்போ மற்றும் இந்தோனேசியாவில் ஆபரேஷன் கம்பீர் ஆகியவை இதில் உள்ளடங்கியவையே.[34] இந்தியக் கடற்படை மேற்கொண்ட மிகப்பெரிய நிவாரணப் பணிகளில் இதுவும் ஒன்றாகும். சுனாமி பெருக்கெடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே, இந்தியக் கடற்படையினர் தமது நிவாரணப்பணிகளை அண்டை நாடுகளில் தொடங்க முடிந்தது; மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளி நாடுகளிலிருந்து சென்ற முதற் கடற்படையும் இதுவே.[33]

இதைப் போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபடும்போது, மிகத் துரிதமாகப் படைகளை இதில் ஈடுபடுத்தும் செயலானது, கடற்படை தனது நிலம் மற்றும் நீர் இரண்டிலும் செயல்படக் கூடிய சக்தியையும் தனது படை வலிமையையும் எடுத்துரைக்க ஏற்ற ஒரு சோதனைக் களமாக இருந்தது.[35] சுனாமிக்குப் பதிலிறுப்பான பணியில் காணப்பட்ட குறைபாடுகள் கடற்படையை நவீனப்படுத்துவதில் விளைந்தன; ஐஎன்எஸ் ஜலஷ்வா (யூஎஸ்எஸ் ட்ரென்டான் என்று முன்னர் அறியப்பட்டது) போன்ற நிறுத்தப்பட ஏதுவான தளங்கள் கொண்ட கப்பல்கள்(எல் பி டி)மற்றும் நிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தக் கூடிய சிறு கலன்கள் ஆகியவை வாங்கப்பட்டன.[36]

ஆபரேஷன் சுகூன்[தொகு]

2006ஆம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் சண்டையின் போது,436 இலங்கை வாழ் மக்கள் மற்றும் 69 நேபாள குடிமக்களையும் உள்ளிட்ட, 2,286 இந்தியர்களையும் குடியுரிமை அற்றவர்களையும் போரில் சிதிலமடைந்த லெபனான் நாட்டிலிருந்து இந்தியக் கடற்படை காப்பாற்றியது. இந்தச் செயற்பாடு "அமைதி மற்றும் சாந்தம்" என்னும் பொருள்படுமாறு ஆபரேஷன் சுகூன் என்று பெயரிடப்பட்டது.[37][38] 2006வது வருடத்தில், 10 இந்தியக் கடற்படை மருத்துவர்கள் யூஎஸ்என்எஸ் மெர்ஸி யில் 102 நாட்களுக்குத் தங்கி, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் கிழக்கு டைமோர் ஆகிய இடங்களில் ஏறத்தாழ 10 மருத்துவ முகாம்களை நடத்தினர்.[39] பங்களாதேஷ்[40] மற்றும் மயன்மார்[41] சூறாவளிகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நிவாரண பொருட்களையும் இந்தியக் கடற்படை அளித்துள்ளது. மயன்மாரின் நர்கிஸ் சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியக் கடற்படை, உதவிப் பொருட்களை இரண்டு கப்பல்களில் கொண்டு சென்றது.[42]

கடற் கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கைகள்[தொகு]

1999வது வருடம் அக்டோபர் மாதம் கடத்தப்பட்ட ஜப்பானிய சரக்கு கப்பலான எம்வி அலோந்த்ரா ரெயின்போ , இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கரையோர காவல் படையின் ஒருங்கிணைந்த முயற்சியால் கடற் கொள்ளைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.[43]

சோமாலியாவின் பெரும்பான்மையான கடல் வணிக கப்பல்கள் அதன் கடற் பகுதியைத் தாண்டியே செல்ல வேண்டியிருந்ததால் சோமாலியாவின் கடற் பகுதியில் நடந்து வந்த கொள்ளைகள் இந்தியாவைக் கவலை கொள்ள வைத்தன.[44] இந்தக் கவலைகளுக்குத் தீர்வு காண, இந்தியக் கடற்படை 2008வது வருடம் அக்டோபர் மாதம் ஏடன் வளைகுடாவில் ஐஎன்எஸ் தபார் என்னும் போர்க்கப்பலை நிறுத்தியது. அந்தப் பணியை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே தபார் , இரண்டு சரக்குக் கப்பல்களைச் சூறையாட கொள்ளையர்கள் செய்த முயற்சியை முறியடித்து மற்றும் கொள்ளையர்களின் "தாய்க் கப்பல்" என்று அறியப்பட்ட முக்கிய கப்பலையும் அழித்தது.[45] அந்தப் போர்க்கப்பலானது, 2008வது வருடம் நவம்பர் மாதம் வரையில், கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட பகுதி என்று கூறப்பட்ட பகுதியின் வழியாகவே 35 கப்பல்களைப் பாதுகாத்து அழைத்துச் சென்றது.[46] மீன் பிடிக்கும் பைவலை என்னும் இழுப்புப் படகு ஒன்றைத் தாய்லாந்திலிருந்து கடத்தி வந்து அதனைத் தங்கள் தாய்க் கப்பலாக கடற் கொள்ளையர்கள் மாற்றியிருந்தார்கள்.[47] கடற் கொள்ளைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐஎன்எஸ் தபார் கப்பலுக்குக் கூடுதல் உதவி புரிவதற்காக ஐஎன்எஸ் மைசூர் என்னும் வெடிகுண்டு தாங்கி நீர்மூழ்கிக் கப்பலையும் இந்தியா பணியில் அமர்த்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.[48] 2008வது ஆண்டு நவம்பர் 21 அன்று சோமாலியாவின் கடலோர எல்லைப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான கலன்களை இடைமறிக்க இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.[49] ஏடன் வளைகுடாவில் ஒரு வணிகக் கப்பலைக் கடத்துவதற்கு முற்பட்ட 23 கடற்கொள்ளையர்கள் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.[50] செஷல்ஸ் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கடற் கொள்ளையர்களுக்கு எதிராக ரோந்து சுற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.[51] இதன் விளைவாக ஒன்பது கடற் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.[52] இந்த கடற் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஊக்கமூட்ட, மேலும் சில கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.[53] லிபெரியன் கலமான எம்வி மௌட் என்னும் கலத்தின் மீதான கொள்ளையர் தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையில் 2 கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மீதமிருந்த அறுவர் கைது செய்யப்பட்டனர்.[54] 2009வது வருடம் டிசம்பர் 07 அன்று சோமாலியாவின் கரைப்புறமாக, ஏடன் வளைகுடாவில் இருந்த ஒரு யூஎஸ் பீரங்கிக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஒரு கொள்ளையர் தாக்குதலை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக முறியடித்தது.[55] ஏடன் வளைகுடாவில் கடற் கொள்ளையர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக யூ.என். இந்தியக் கடற்படைக்கு விருது வழங்கியது.[56]

பணியாளர்கள்[தொகு]

முதன்மை அதிகாரிகள்[தொகு]

Rank Insignia
Shoulder IN Admiral of the NAVY Shoulder curl.png IN Admiral Shoulder curl.png IN Vice Admiral Shoulder curl.png IN Rear Admiral Shoulder curl.png IN Commodore.png IN Captain.png IN Commander.png IN Lieutenant Commander.png IN Lieutenant.png IN Sublieutenant.png
Sleeve IN Admiral of Navy Sleeve.png IN Admiral Sleeve.png IN Vice Admiral Sleeve.png IN Rear Admiral Sleeve.png IN Commodore Sleeve.png IN Captain Sleeve.png IN Commander Sleeve.png IN Lieutenant Commander Sleeve.png IN Lieutenant Sleeve.png IN Sublieutenant Sleeve.png
Rank Admiral of
the Fleet
[note 1]
Admiral Vice Admiral Rear Admiral Commodore Captain Commander Lieutenant
Commander
Lieutenant Sublieutenant

கடற்படையின் ஆணை அதிகாரி (கமாண்டர்) என்பவர் கடற்படைப் பணியாளர்களின் முதன்மை அதிகாரி (சிஎன்எஸ்) எனப்படுகிறார். 2009வது வருடம் ஆகஸ்ட் 31 துவங்கி விசாகப்பட்டினத்தில் கிழக்குக் கடற்படை கமாண்டராக இருந்த வைஸ் அட்மிரல் நிர்மல் குமார் வர்மா, ஒய்வு பெறும் அட்மிரல்

நீர்-நில செயல் திறனுடைய போக்குவரத்து கப்பலான ஐஎன்எஸ் ஜலாஷ்வாவின் துவக்க விழா.கிழக்குக் கடற்படையின் ஒரு அங்கமான ஜலாஷ்வா, இந்தியக் கடற்படையில் தற்போது இயங்கி வரும் இரண்டாவது பெரிய கப்பல்.[57]

சுரீஷ் மேத்தா என்பவரிடமிருந்து கடற்படையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.[58]

அட்மிரல் எனப்படும் கடற்படை முதன்மை அதிகாரிக்கான பதவியை அளிப்பதற்கான நிர்வாக ஏற்பாடுகள் இருந்த போதிலும், பெரும்பான்மையான நேரங்களில் அப்பதவி போர்க் காலத்திற்காகவே உருவாக்கப்பட்டதாகும்; சில வேளைகளில் ஒரு கௌரவிப்பாகவும் பயன்படுகிறது. இதுவரை எந்த இந்தியக் கடற்படைத் தலைவருக்கும் அந்தப் பதவி கொடுக்கப்படவில்லை. (காலாட்படை மற்றும் விமானப்படை இரண்டிலுமே அதற்குச் சமமான பதவி பெற்ற அதிகாரிகளாக தரைப்படையில் ஃபீல்ட் மார்ஷல்களாக ஸாம் மானேக்ஷா மற்றும் கரியப்பா மற்றும் மார்ஷல் ஆஃப் தி இண்டியன் ஏர் ஃபோர்ஸ் (எம் ஐ ஏ எஃப்) அர்ஜூன் சிங்) ஆகியோர் இருந்தனர்.)

பட்டியலிடப்பட்ட ஊழியர்கள்[தொகு]

நிறுவனம்[தொகு]

இந்தியக் கடற்படை நிறுவன அமைப்புகள்.

இந்தியக் கடற்படை கீழ்காணும் பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது:

  • நிர்வாகம்
  • போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்
  • பயிற்சி அளித்தல்
  • படைக் கப்பல்கள்
  • கடற்படை விமானப் பிரிவு
  • நீர்மூழ்கிக் கப்பல் பிரிவு

ஆணைப் பிரிவுகள்[தொகு]

இந்தியக் கடற்படை கமாண்ட்ஸ் என்னும் நான்கு ஆணைப் பிரிவுகளை இயக்குகிறது. ஒவ்வொரு ஆணைப் பிரிவும் வைஸ் அட்மிரல் என்னும் பதவி வகிக்கும் ஃப்ளாக் ஆஃபீசர் கமாண்டிங்-இன்-சீஃப் என்பவரின் தலைமையில் இயங்குகிறது.

ஆணைப் பிரிவுகள்

தலைமை அலுவலகம் இயங்குமிடம்

தற்போதைய எஃப்ஒசீ-இன்-சி

மேற்குக் கடற்படை ஆணைப் பிரிவு மும்பை

வைஸ் அட்மிரல் வினோத் பாஸின்

கிழக்குக் கடற்படை ஆணைப் பிரிவு விசாகப்பட்டினம்

வைஸ் அட்மிரல் அனூப் சிங்[59]

தெற்குக் கடற்படை ஆணைப் பிரிவு கொச்சி

வைஸ் அட்மிரல் சுனில் கிருஷ்ணாஜி டாம்லே

தொலைதூர கிழக்குக் கடற்படை ஆணைப் பிரிவு போர்ட் பிளேர் வைஸ் அட்மிரல் விஜய் ஷங்கர்

2001வது வருடம், படைத்துறையின் போர் நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாகக் கருதப்பட்டு அந்தமான் நிகோபார் தீவுகளில் கடற்படை, காலாட்படை மற்றும் விமானப்படை அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு தொலைதூர கிழக்குக் கடற்படை பிரிவு அமைக்கப்பட்டது.[60] தென்கிழக்கு ஆசியா மற்றும் மலாக்கா கடற்கால் ஆகியவற்றில் இந்தியாவின் போர்த் திறன் சார்ந்த நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. அப்பகுதியில் இந்தோனேஷிய கடற்படை, ராயல் மலேசிய கடற்படை மற்றும் ராயல் தாய் கடற்படை யுடன் இணைந்து ரோந்துப் பணி செய்வதில் இந்தியக் கடற்படை பெரும் பங்கு வகிக்கிறது.[61][not in citation given] ஆசிய பசிஃபிக் பகுதியில் கரையோரப் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.[62]

அடித்தளங்கள்[தொகு]

அரக்கோணம் கடற்படை விமானப் பணியிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள, இந்தியக் கடற்படையின் டியூ-142 மற்றும் ஐஎல்-38எஸ்டி.

2005வது வருடம், இந்தியக் கடற்படை ஐஎன்எஸ் கடம்பா வை கோவாவிலிருந்து 100 கி.மீ தொலைவிலுள்ள கார்வார் என்னுமிடத்தில் அமைத்தது. மும்பை மற்றும் விசாகப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக இது மூன்றாவது கடற்படை இயக்க தளமாகும்; மற்றும் கடற்படையால் மட்டுமே முழுவதும் இயக்கப்படும் முதல் தளமும் ஆகும். (மற்ற தளங்கள் படைத்துறை சாராத மற்ற கப்பல்களுடன் தமது துறைமுக சௌகரியங்களை பகிர்ந்து கொள்கின்றன; ஆனால் இந்தத் தளமானது முற்றிலும் கடற்படையின் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.) பல பில்லியன் டாலர் திட்டமான இதன் முதல் கட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 'கடற் பறவை செயற்திட்டம்' அப்பகுதியிலேயே மிகப் பெரும் கடற்படை தளம்.[63] ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை கல்விச் சாலையான ஐஎன்எஸ் ஜமோரின், எழிமாலாவில் 2009வது வருடம் ஜனவரியில் இந்தியப் பிரதமரால் திறக்கப்படவுள்ளது.[64]

யூஎஸ் டாலர் 350 மில்லியன் செலவில் கிழக்கு கடற்கரைகளுக்காக விசாகப்பட்டினம் அருகில் மற்றொரு கப்பல் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.[65] இந்த தளம்,விசாகப்பட்டினத்திலிருந்து தென் திசையில் ஐம்பது கி.மீ தொலைவில் ரம்பிலி மண்டல் என்னும் இடத்தில் அமைக்கப்படும். இது விமானங்களைத் தகர்க்கக் கூடிய, நீர்மூழ்கிகளுக்கு எதிராக செயல்படக் கூடிய மற்றும் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் செயல்படக் கூடிய பன்முகத் திறன்கள் உடைய முழுமையான முறையில் அமைக்கப்படவிருக்கிறது.[66]

மொஸாம்பிக் கரையோரங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலின் தென் திசை ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பிற்காக இந்தியக் கடற்படை மடகாஸ்கர் என்னும் இடத்தில்,[67][68] ஒரு கடற்படைப் பணியிடத்தை அமைக்க இருக்கிறது.[69]

ஓமான் கடற்கரையில் கப்பலை நிறுத்துவதற்கும் இந்தியக் கடற்படையிடம் அனுமதி உள்ளது.

கடல் செயல் வீரர் படை[தொகு]

ஃபிலிப்பைன்ஸ் கடலில் பயிற்சி மேற்கொள்ளும் இந்தியக் கடற்படைச் செயல்வீரர்கள்.

மார்கோஸ் என்றும் அழைக்கப்படும் மெரைன் கமாண்டோ ஃபோர்ஸ் (எம் ஸீ எஃப்), இந்தியக் கடற்படையால் 1987வது வருடம் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புப் படையாகும். இது நேரடி செயல்பாடு, சிறப்பு உளவுச் சேவை, நிலம் நீர் இரண்டிலும் போர் புரியக்கூடிய திறமை மற்றும் தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுப்பது இவை அனைத்தையும் செயல்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டில், ப்ளோட் கூலிப்படை ஆட்களால் கடத்தப்பட்ட பல பணயக் கைதிகள் மற்றும் அப்போதைய மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை ஆபரேஷன் காக்டஸ் மூலம் மார்கோஸ் செயல் வீரர்கள் மீட்டனர்.

மேலும், ஜீலம் மற்றும் வூலார் ஏரி ஆகியவை வழியாக எதிரிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கும் ஜம்மு காஷ்மீர் ஏரிகள் மற்றும் ஆறுகளை சுற்றி மறைந்திருந்து தாக்கும் தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுப்பதற்கும் மார்கோஸ் செயல் வீரர்கள் நியமிக்கப்படுகின்றனர்.[70][71]

மும்பைப் பெரு நகரில் தீவிரவாத தாக்குதல் 2008வது வருடம் நவம்பர் மாதம் நிகழ்ந்தபோது அதில் சிக்குண்டவர்களைக் காக்கும் பணியின் ஒரு பகுதியாக, மும்பை தாஜ் மஹல் பேலஸ் அண்ட் டவர் என்னும் ஆடம்பர விடுதியில் சிறைப்படுத்தப்பட்டவர்களை மீட்கும் பணியிலும் மார்கோஸ் செயல் வீரர்கள் ஈடுபட்டனர்.

கப்பல்கள்[தொகு]

இந்தியக் கடற்படையில் உள்ள அனைத்துக் கப்பல்கள் (மற்றும் கப்பல் தளங்கள்) ஆகியவற்றின் பெயருக்கு முன்னால் இன்டியன் நேவல் ஷிப் அல்லது இன்டியன் நேவல் ஸ்டேஷன் என்பதை குறிக்கும் விதமாக ஐஎன்எஸ் என்னும் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்தியக் கடற்படை கப்பல் அணிவகுப்பு என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலன்கள் இரண்டும் சேர்ந்த கலவையாகும்; மேலும் புதிய வரவுகளால் இது இன்னும் விரிவாக்கப்பட்டு வருகின்றது. வெடிகுண்டு தாங்கி செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் வழித் துணைக் கப்பல்கள் ஆகியவற்றையே இந்தியா அடுத்தடுத்து அமைத்து வருகிறது.

கப்பலை உடைக்கும் திறன் கொண்ட வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகுகள்[தொகு]

இந்தியக் கடற்படை தற்போது, டில்லி மற்றும் ராஜ்புட் பிரிவில் உள்ள ஏவுகணை கப்பல்களை இயக்குகிறது.

அடுத்த தலைமுறையான கொல்கத்தா பிரிவு கலன்கள் 2012வது வருடத்திற்குள் கடற்படையில் செயற்படுத்தப் படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க்கப்பல்கள்[தொகு]

தற்பொழுது இயக்கத்தில் இருக்கும் ஏவுகணை போர்க் கப்பல்கள் தல்வார் , பிரம்மபுத்ரா மற்றும் கோதாவரி ஆகிய பிரிவுகளைச் சார்ந்தவை. நீலகிரி பிரிவை (பிரிட்டிஷாரின் லியண்டர் பிரிவு என்பதன் மாறுபட்ட வடிவம்) சார்ந்த அனைத்துக் கலன்களும் படையிலிருந்து நீக்கப்பட்டு விட்டன. 3 அதி நவீன தல்வார் பிரிவு போர்க்கப்பல்களை (கிரிவாக் ஐவி) 2012வது வருட இறுதிக்குள் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தன்னுள் இரகசியப் பகுதிகளை கொண்ட அடுத்த தலைமுறை ஷிவாலிக் பிரிவை சார்ந்த கலன்களை 2009வது வருடம் களத்தில் இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வழித்துணைக் கப்பல்கள்[தொகு]

இந்தியக் கடற்படையில் தற்பொழுது கோரா , குக்ரி , வீர் மற்றும் அபே பிரிவு வழித்துணை கப்பல்கள் இயக்கத்தில் உள்ளன.

பிராஜெக்ட் 28 மற்றும் பிராஜெக்ட் 28A பிரிவைச் சார்ந்த அடுத்த தலைமுறை வழித்துணைக்கப்பல்கள் 2012வது வருடம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் மற்றும் நிலம் இரண்டிலும் செயல்திறன் கொண்ட போர்க்கலன்கள்[தொகு]

ஐஎன்எஸ் ஜலாஷ்வா என்ற மாற்றுப் பெயரிடப்பட்ட ஆஸ்டின் பிரிவு நீர்-நிலச் செயல் திறன் கொண்ட போக்குவரத்து கப்பல் ஒன்று இந்தியக் கடற்படையில் உள்ளது.

விமான-தாங்கி கப்பல்கள்[தொகு]

இந்தியக் கடற்படையில் தற்பொழுது ஐஎன்எஸ் விராட் என்னும் விமானம் தாங்கிச் செல்லும் கப்பல் ஒன்று உள்ளது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ராந்த் பிரிவைச் சார்ந்த விமானம் தாங்கி கப்பல் களமிறக்கப்பட்டவுடன் இது கடற்படையிலிருந்து நீக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் மூழ்கிக் கப்பல்கள்[தொகு]

ஐஎன்எஸ் ஸிந்துவிஜய்,ஒரு ஸிந்துகோஷ் வகை நீர்மூழ்கி

டீசல் நீர்மூழ்கிக் கப்பல்கள்[தொகு]

சிந்துகோஷ் மற்றும் ஷிஷூமார் என்னும் பிரிவைச் சார்ந்த முதன்மையான டீசல்-மின்சக்தி நீர் மூழ்கி கப்பல்களின் ஒரு அணி வகுப்பை இந்தியக் கடற்படை தற்பொழுது பராமரித்து வருகிறது.

வாயு-சுய உந்தெறிவு உள்ள ஆறு ஸ்கார்பீன் பிரிவு நீர் மூழ்கிக் கப்பல்கள் அமைப்பதற்காக மெஸ்மாவுடன் இந்தியா ஒரு திட்டத்தை கையெழுத்திட்டுள்ளது; மற்றும் அதன் கட்டுமானமும் துவங்கி விட்டது. இந்த நீர் மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் 2012வது வருடம் துவங்கி இயங்கும்.[72] கிலோ பிரிவைச் சார்ந்த நீர்மூழ்கிகளில் பிரம்மோஸ் வகை கப்பல் ஏவுகணைகளை இயக்கி சோதனைகளை வெற்றிகரமாக முடித்த பின்னர் நீர் மூழ்கிகளில் அந்த வகை ஏவுகணைகளை இந்தியக் கடற்படை சேர்க்கும்.[73] 2008-09வது நிதியாண்டில் மேலும் ஆறு நீர்மூழ்கிகள் வாங்குவதற்கான வேண்டுகோளை இந்தியா முன் வைக்கும்.[74]

ஆளில்லாத நீர்மூழ்கி கப்பல்கள்[தொகு]

கடல்களைப் பற்றிய துறையில் ஆராய்ச்சி செய்வதற்கு பயன்படக்கூடிய அட்டானமஸ் அண்டர் வாட்டர் வெஹிகில்(ஏயூவி) என்னும் தானியங்கி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஒஷெனோகிராஃபி என்னும் தேசியக் கடல் ஆய்வியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேற்பரப்பில் இயங்கும் தானியங்கி கப்பல் (அட்டானமஸ் ஸர்ஃபேஸ் வெஹிகில்)(ஏஎஸ்வி) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.[75]

அணு சக்தியால் உந்தப்படும் நீர்மூழ்கிகள்[தொகு]

இந்தியக் கடற்படையால் 1988லிருந்து 1991 வரை குத்தகைக்கு எடுக்கப்பட்ட, அச்சமயம் ஐஎன்எஸ் சக்ரா என்றழைக்கப்பட்ட, சார்லி வகையைச் சார்ந்த அணுசக்தி நீர்மூழ்கி.

இந்தியா, 1988வது வருடம் ஜனவரி மாதம், மற்றும் எட்டு அமெடிஸ்ட் (எஸ்-எஸ்-என்-7 ஸ்டார்பிரைட்) கப்பல்களை தகர்க்கும் ஏவுகணைகளை விடும் கப்பல்களோடு சேர்த்து முன்னாள் சோவியத்தின் சார்லி வகை அணு சக்தியால் உந்தப்படும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை மூன்று வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்தது. இந்தியக் கடற்படையில் அந்த கலனுக்கு ஐஎன்எஸ் சக்ரா என்று பெயரிடப்பட்டது. அதை இந்திய கடற்படை குழு இயக்கியது. 1991வது வருடம் குத்தகைக் காலம் நிறைவுற்ற பின்னர், அந்த நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அது ரஷ்யக் கடற்படையின் பசிஃபிக் படையில் சேர்ந்து விட்டது.

இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் உந்தப்படும்அரிஹந்த் வகையைச் சார்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் 2011வது வருடம் கடற்படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[76] ஐஎன்எஸ் அரிஹந்த் வகையைச் சார்ந்த தலைமைக் கலம், கடலில் சோதனைகளுக்காக ஜூலை 26, 2009ல் விசாகப்பட்டினத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.[77]

இந்தியாவிடம் தற்போது பயன்பாட்டில் உள்ளவை[தொகு]

பெயர் கப்பலின் படம் தயார்ப்பு எண்ணிக்கை நீளம் அகலம் உயரம் இயக்கம்
அகுலா வகை INS Chakra ரஷ்யா - 366 அடிகள் 44 அடிகள் 31 அடிகள் அணுசக்தி
சிந்துகோஷ் வகை INS Sindhuvijay ரஷ்யா 10 234 அடிகள் 32 அடிகள் 22 அடிகள் வழக்கமான பயன்பாடு
சுசிமோர் வகை Shishumar class submarine.JPG ஜெர்மனி 4 211 அடிகள் 21 அடிகள் 20 அடிகள் வழக்கமான பயன்பாடு [78]

திட்டமிடப்பட்டுள்ள கையகப்படுத்துதல்கள்[தொகு]

இந்தியக் கடற்படை ரஷ்யாவிடமிருந்து அட்மிரல் கோர்ஷ்கோவ் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்னும் கீவ் வகையை சார்ந்த விமானங்கள் தாங்கும் கப்பலை வாங்கியுள்ளது. அது இந்தியாவிற்கு 2012வது வருடத்தில் அனுப்பப்படும்.[79]

மேலும் அதி நவீன தல்வார் வகை போர்க் கப்பல்களையும் மற்றும் ஆறு வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களையும் கையகப்படுத்த இந்தியக் கடற்படை ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது.

1985வது வருடம் அணுசக்தியால் உந்தப்படும் நீர்மூழ்கிகளை அமைப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக (அட்வான்ஸ்ட் டெக்னாலஜி வெஸெல்)(ஏடிவி) என்னும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கலன்களுக்கான ஒரு செயல் திட்டத்தை இந்தியா தொடங்கியது.முதல் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி வெஸெல் ஐஎன்எஸ் அரிஹந்த் என்று பெயரிடப்பட்டு ஜூலை 26, 2009 தொடங்கப்பட்டது.[80] கப்பலின் உடற் பகுதி லார்ஸென் அன்ட் டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்டிருக்கிறது. கல்பாக்கம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் கடற்படைப் பதிப்பான அணு உலையை உருவாக்கியுள்ளது; அதன் சிறிய வடிவம் பெறப்பட்டதும், அது இந்த நீர்மூழ்கியின் உடற்பகுதியில் பொருத்தப்பட்டு விடும். நீர்மூழ்கிகளின் விசையாழிகளையும் (டர்பைன்ஸ்)கப்பலின் இயக்குறுப்புகளையும் (ப்ரொபெல்லர்ஸ்) சோதனை செய்ய முன்மாதிரி சோதனைக்கூடம் (தி ப்ரோடோடைப் டெஸ்டிங் சென்டர்) (பிடிசி) பயன்படுத்தப்படும். முக்கிய விசையாழிகளையும் இழுவைப் பெட்டிகளையும்(கியர் பாக்ஸ்) சோதனை செய்ய இதைப் போன்ற வசதி விசாகப்பட்டினம் நகரிலும் இயக்கத்தில் உள்ளது.

கப்பல் கட்டுமானம் முடிவடைந்த பின்னர் அதனுள் கே-15 மற்றும் ஸாகாரிகா/அக்னி-III பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அதி நவீன இந்திய சோனார் அமைப்புகளும் பொருத்தப்படும். பாதுகாப்புத் துறைத் தகவல்களின்படி, 2010வது வருடத்தில் ஏடிவி கடற்படையில் இணைக்கப்படும். இதன் ஒவ்வொரு தொகுதியும் ஒரு பில்லியன் யூ.எஸ்.டாலர்கள் விலையாகும்.[81] அரிஹந்த் வகை நீர்மூழ்கிகளை விடப் பெரியதான எஸ்எஸ்பிஎன் வகைகளில் கட்டுமானங்கள் தொடங்க அரசாங்கம் அனுமதி வழங்கி விட்டது. எஸ்எஸ்என்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இவை எஸ்எஸ்பிஎன்களுக்குப் பாதுகாவலாகச் செல்லும்.[82]

40-60% முடிவு பெற்று விட்ட அகுலா-II வகை நீர்மூழ்கிகளுக்கு அரசாங்கம் இரண்டு பில்லியன் டாலர்கள் விலை அளித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.[83] இந்த நீர்மூழ்கிகளை இயக்குவதில் தேர்ச்சி பெறுவதற்காக முன்னூறு இந்தியக் கடற்படை வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்மூழ்கிகளின் குத்தகைக் காலம் முடிந்த பின்னர் இவற்றை கையகப்படுத்தவும் வசதி செய்யும் வகையில் ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா நிறைவு செய்துள்ளது. தகவல்களின்படி, முதல் நீர்மூழ்கி 2009வது வருடம் செப்டம்பர் மாதம் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும்.[84] முதல் நீர்மூழ்கி ஐஎன்எஸ் சக்ரா என்று பெயரிடப்படும்; இது தற்பொழுது பசிஃபிக் பெருங்கடலில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[85][86]

போர் விமானம்[தொகு]

இந்தியக் கடற்படையின் எம்ஐஜி-29கே.
ஐஎன்எஸ் விராட்டில் இந்தியக் கடற்படையின் ஒரு கடல் ஹாரியர்.

கடற்படை விமானப்பிரிவு இந்தியக் கடற்படையின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்தியக் கடற்படையின் விமானப்பிரிவில் விமானம் தாங்கும் கப்பல்கள் ஐஎன்எஸ் விராட் மற்றும் ஐஎன்எஸ் ஜலஷ்வா விலிருந்தும் இயங்கும் ஸீ ஹாரியர் ஆகியஜெட் விமானங்கள் உள்ளன. சமீபத்தில், இந்த விமானங்கள் கண்ணுக்கெட்டும் தொலைவையும் தாண்டி ஏவுகணைகள் செலுத்தும் திறனைப் பெறுவதற்காக நவீனப்படுத்தப்பட்டன. காமோவ்-31, வானத்தில் வரும் ஆபத்துக்களுக்கான முன்னெச்சரிக்கையை கடற்படைகளுக்கு அளிக்கிறது. நீர்மூழ்கிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஸீ கிங்,கேஏ-28 மற்றும் உள்நாட்டு தயாரிப்பான ஹெச்ஏஎல் துருவ் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. போர்க்கால நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது ஸீ கிங் மற்றும் ஹெச்ஏஎல் துருவ உலங்கு வானூர்திகளை மார்கோஸ் பயன்படுத்துகின்றது. டூபோலேவ் 142, இல்யூஷின் 38, டார்னியர் டிஒ 228 ஆகிய விமானங்கள் மற்றும் ஹெச்ஏஎல் சேதக் ஹெலிகாப்டர்கள் வேவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

போரில் அணுகுண்டு போடுவதற்கும் கரையோரங்களில் தாக்குவதற்கும் 4 டூபோலேவ் டியு-22எம் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன (மேலும் 3 உருவாக்கப்பட்டு வருகின்றன); இவை உளவுப் பணிச் செயற்பாடுகளுக்கான திறன் கொண்டவை. யூஏவி பிரிவில் ஹெரான் மற்றும் ஸர்ச்சர்-II போன்ற 30 யூஏவிக்கள் உள்ளன. இவை மேம்பட்ட மேற்பார்வைக்காக கப்பல் மற்றும் கரையிலிருந்து இயக்கப்படுகின்றன. வானத்தில் வேடிக்கைகள் செய்யும் 4 விமானங்கள் கொண்ட ஸாகர் பவன் என்னும் ஒரு குழுவையும் இந்தியக் கடற்படை பராமரித்து வருகிறது. இந்த ஸாகர் பவன் தனது குழுவில் உள்ள கிரண் ஹெச் ஜே டி-16 என்னும் விமானத்திற்குப் பதிலாக ஹெச் ஜே டி-36 என்னும் விமானத்தைக் கொண்டு வரப்போகிறது.[87] கரையோர உளவுப் பணியில் நீண்ட தொலைவிற்குக் கண்காணிக்கும் ஆற்றலுடைய எட்டு பி-8ஐ பொசைடன் என்னும் விமானங்களை உருவாக்குவதற்கும் இந்தியக் கடற்படை அனுப்பாணை அளித்துள்ளது.[88]

2004வது வருடம் ஜனவரி மாதம் 12 எம்ஐஜி-29கே மற்றும் 4 எம்ஐஜி-29கேயூபி ஆகியவற்றை அளிக்க இந்தியக் கடற்படை ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இவை ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விலிருந்து இயக்கப்படும்.[89] கடற்படைக்காக முதலில் தயாரிக்கப்பட்ட எம்ஐஜி-29கேயூபி 2008வது வருடம் மே மாதம் வானில் செலுத்தப்பட்டது.[90] முதல் நான்கு விமானங்கள் இந்தியாவிற்கு 2009வது ஆண்டு ஃபிப்ரவரியில் அனுப்பப்பட்டன.[91] சுதேசி விமானம் தாங்கிக் கப்பலுக்காக இந்தியக் கடற்படை கூடுதலாக 30 எம்ஐ-29கே மற்றும் -கேயூபிக்களை வாங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.[92][93]

இந்தியக் கடற்படைக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையும் கரையோரப் பாதுகாவல் பணிகளில் ஈடுபடுகிறது. இதில் செபகாட் ஜக்குவார்[94][95] மற்றும் ஸூகோய் எஸ்யூ-30 எம்கேஐ[96] ஆகிய விமானங்களை இந்திய விமானப்படை ஈடுபடுத்துகிறது. இத்தகைய ஜக்குவார்களில் ஸீ ஈகிள் ஏவுகணைகள் இருக்கின்றன,இவற்றிற்குப் பதிலாக ஹார்பூன் ஏவுகணைகள் இனி பயன்படுத்தப்படும்.[97] எஸ்யு-30எம்கேஐ மற்றும் ஐஎல்-8 ஆகியவை வானில் ஏவப்படும் பிரம்மோஸ் கப்பல் ஏவுகணைகளை கொண்டிருக்கும்.

மிக் 29 கே ரக போர் விமானங்கள் 2013 மே 11-ம் தேதி முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. கோவா மாநிலத்தில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை தளத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவின்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ரஷ்ய தயாரிப்பு மிக் 29 கே ரக போர்விமானங்களை கடற்படையில் இணைத்தார்.[98]

ஆயுத அமைப்பு முறைகள்[தொகு]

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளைகளைக் குறைப்பதற்காக ஐஎன்எஸ் மைசூர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை நவீன தொழில் நுட்பங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மற்ற, பிரம்மோஸ் ஸூப்பர் ஸோனிக் கப்பல் ஏவுகணைகள் போன்றவை பாதுகாப்பு ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க இலக்கை அடைந்துள்ள ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியப் படைக்கப்பல்களின் இயக்கத்தில் உள்ள பாரக்-I விண்வெளி பாதுகாப்பு ஏவுகணையின் நீண்ட தொலைவு செலுத்தப்படக்கூடிய ,மேம்படுத்தப்பட்ட,பாரக்-II ஏவுகணை அமைப்பு முறையை இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கும் என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன.[99] இந்தியக் கடற்படையின் பெரும்பான்மையான முக்கிய கப்பல்களில் பாரக்-I பயன்படுத்தப்படுகிறது. இந்தியக் கடற்படையின் எதிரிகளைப் பின்னடையச் செய்யும் அணுசக்தி திறன், 350கிமீ செயல் எல்லை கொண்ட தனுஷ் பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் செயல்படும் சுகன்யா வகை கப்பல்களைச் சார்ந்தே உள்ளது.

க்ளப் எஸ்எஸ்-என்-27 ஆகியவற்றை உள்ளிட்டு இந்தியாவிடம் பல வெளிநாட்டுத் தயாரிப்பான கப்பல் ஏவுகணை அமைப்பு முறைகள் உள்ளன. இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான நிர்பே கப்பல் ஏவுகணை அமைப்பு முறைகள் தற்போது உருவாக்கத்தில் உள்ளன. 700கிமீ (சில தகவல்கள் 1000 கிமீ என்று கூறுகின்றன) செயல் எல்லை கொண்ட (பெருங்கடல்) நீர்மூழ்கியிலிருந்து செலுத்தப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை (எஸ்எல்பிஎம்) சகாரிகா இந்திய முவ்விணை அணுசக்தியின் ஒரு பாகமாக உள்ளது. என்பிஒ மற்றும் டிஆர்டிஒவால் பிரம்மோஸியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாகோந்த் என்னும் கப்பல் தகர்க்கும் ஏவுகணை அமைப்பு முறை மற்றுமொரு வெற்றிகரமான நிகழ்வாகும். இந்த பிரம்மோஸ் இந்தியாவின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக, இந்திய-வடிவமைப்பில் உருவான பொருட்களும் தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன; அவற்றுள் எரிசக்தியைக் கட்டுப்படுத்தும் அமைப்பு முறைகள், போக்குவரத்துக் கப்பல்களிலிருந்து செலுத்தப்படும், மற்றும் கப்பலிலிருந்து தாக்கும் அமைப்பு முறைகள் ஆகியவை அடங்கும். ஐஎன்எஸ் ராஜ்புட்(டி51)லிருந்து வெற்றிகரமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பிரம்மோஸ், நிலத்தில் துல்லியமாகத் தாக்கும் திறனை இந்தியக் கடற்படைக்கு அளித்துள்ளது.[100]

மின்னணு சார் போர் நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு முறைகளின் மேலாண்மை[தொகு]

மாஸகான் டாக்ஸ் லிமிடெட் துவக்கத்திற்கு முன்னதான ஐஎன்எஸ் ஷிவாலிக், மும்பை.

சங்க்ரஹா என்பது (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) (டிஆர்டிஒ) இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து செயல்படுத்தும் ஒரு மின்னணுப் போர் நடவடிக்கைத் திட்டமாகும். இதில் அஜந்தா மற்றும் எல்லோரா போன்ற மின்னணுப் போர் நடவடிக்கை அணிவரிசைகளின் ஒரு குடும்பமே இருக்கிறது. மென் குரல் சேணளாவிகள்,அலை அதிர்வெண்ணின் விரை நெளிவு,துடிப்பை மறுபடி செய்யும் அலை அதிர்வெண்ணின் விரை நெளிவு,தாங்கிச் செல்லும் அலை போன்றவற்றை தடைசெய்தல், கண்டுபிடித்தல் மற்றும் பிரித்தல் போன்ற கடற்படையின் வெவ்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்றவாறு இவை பயன்படுத்தப்படுகின்றன. சிறு உலங்கு வானூர்திகள், வாகனங்கள், சிறு கப்பல்கள் போன்ற வேறுபட்ட தளங்களில் பயன்பாட்டிற்கு ஏற்றதாக ஒரு முன்மாதிரியான அணுகு நெறியை இந்த அமைப்பு முறைகள் கொண்டுள்ளன. சில தளங்கள் ஈஎஸ்எம் (மின்னணு ஆதரவு நடவடிக்கை) தவிர, ஈஸிஎம் எனப்படும் மின்னணுப் பதிலிறுப்பு நடவடிக்கைத் திறன்களையும் கொண்டுள்ளன. பல்வேறு அச்சுறுத்தல்களையும் ஒரே நேரத்தில் கையாள வல்ல பன்முக-கதிருமிழ் அணிவரிசை உருக்குலைத்திகள் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் இந்த அமைப்பு முறைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.[101]

21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள இந்தியக் கடற்படை தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தையும் சார்ந்துள்ளது. தள மத்திய விசை இயக்கத்திலிருந்து ஒரு வலைத்தள-மத்திய விசை இயக்க முறைமைக்கு மாறுவதற்காக இந்தியக் கடற்படை, கரையில் இருக்கும் தளங்கள் மற்றும் கப்பல்களை அதி-வேகத் தரவு வலைப்பின்னல்கள் மற்றும் செயற்கைகோள்கள் இணைப்பின் வழி ஒரு புதிய முறையைப் புகுத்துகிறது.[102][103] இது செயற்பாட்டு முன்னுணர்வை அதிகரிக்க உதவும். இந்த வலைப்பின்னல் நேவி என்டர்பிரைஸ் வைட் நெட்வொர்க் (என்ஈடபிள்யூஎன்) என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியக் கடற்படை, மும்பையில் உள்ள கடற்படைக் கணினி பயன்பாட்டு நிறுவனத்தில் (நேவல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்- என்ஐசிஏ) தனது வீரர்கள் அனைவருக்கும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்துள்ளது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மேலும் மேம்பட்ட பயிற்சி அளித்தல், பாவனைச் சூழல் நடவடிக்கைகளைப் பயன்படுத்துதல், படை மேலாண்மை மேம்பாடு, ஆகியவற்றிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[104]

கடற்படை மேற்பார்வையீடு[தொகு]

இந்திய ஜனாதிபதிக்குத் தனது கடற்படையை மேற்பார்வையிடும் அதிகாரம் உண்டு; ஏனெனில், அவரே இந்திய ராணுவத்தின் முதன்மைத் தளபதி ஆவார். இத்தகைய ஜனாதிபதி இந்தியக் கடற்படையைப் மேற்பார்வையிடும் முதல் நிகழ்வானது டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் 1953வது வருடம், அக்டோபர் மாதம் 10 அன்று மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி மேற்பார்வையிடுவது என்பது வழக்கமாக ஜனாதிபதியின் பணிக்காலத்தில் ஒரு முறை நடைபெறுவதாகும். இதுவரை, ஒன்பது கடற்படை மேற்பார்வையிடுதல்கள் நடைபெற்றுள்ளன, அதில் மிக அண்மையிலானது ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பிப்ரவரி 2006ஆம் ஆண்டில் மேற்பார்வையிட்டதாகும்.[105] நட்பின் பாலங்கள் என்ற பெயரில் இந்தியக் கடற்படை மும்பையில் 2001வது ஆண்டு, பிப்ரவரி மாதம் ஒரு சர்வதேசக் கடற்படை அணிவகுப்பையும் நடத்தியது. யூஎஸ் கடற்படையிலிருந்து இரண்டு கப்பல்களையும் உள்ளிட்டு,உலகெங்கிலும் உள்ள நட்புக் கடற்படைகளிலிருந்து பல கப்பல்கள் இதில் பங்கேற்றன.[106][107]

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியப் பெருங்கடற் பகுதியில் உள்ள கடற்படைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சந்திக்கின்றன, இந்த நிகழ்ச்சி மிலன் எனப்படுகிறது. (இதற்கு வடமொழியில் ஒன்று சேர்வது என்று பொருளாகும்).[108]

கடற்படைப் பயிற்சிகளும் ஒத்துழைப்பும்[தொகு]

மலபார் 2007 சமயத்தில் ஐந்து தேச படைக்கப்பல்களின் அணிவகுப்பு கொண்டு இந்தியா இது வரை நிகழ்த்தியவற்றில் பெரும் போர் விளையாட்டு.[109]

இந்தியா அடிக்கடி மற்ற நட்பு நாடுகளுடன் கப்பல் பயிற்சிகளை மேற்கொள்கிறது; பரஸ்பர இயக்கத்தை அதிகரிக்கவும், கூட்டுப் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தவும் இவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. ஃப்ரென்ச் கடற்படையுடன் வருணா , யூகேவின் ராயல் கடற்படையுடன் கொன்கன் , ரஷ்ய கடற்படையுடன் இந்திரா , யூஎஸ் கடற்படையுடன் மலபார் மற்றும் ரிபப்ளிக் ஆஃப் சிங்கப்பூர் கடற்படையுடன் ஸிம்பெக்ஸ் [110] போன்ற இத்தகைய பயிற்சிகள் வருடத்திற்கொரு முறை மேற்கொள்ளப்படுகின்றன. 2003வது ஆண்டு, மக்கள் விடுதலை ராணுவக் கடற்படையுடனும் இந்தியக் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டது; மேலும் கப்பல் அணிவகுப்பிற்காக தெற்கு சீனக்கடலுக்கு கப்பல்களையும் அனுப்பும்.[111] 2007வது ஆண்டு ட்ரோபெக்ஸ் (தியேட்டர்-லெவல் ரெடினெஸ் ஆபரேஷனல் எக்ஸர்சைஸஸ்) இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்டது, இச்சமயத்தில் இந்திய காலாட்படைக்கும் இந்திய விமானப்படைக்கும் ஆதரவளிக்கும் நோக்கத்தோடு நில மற்றும் வான் போர் ஒன்றை நடத்தும் கோட்பாடு ஒன்றையும் சோதித்துப் பார்த்தது.[112] இந்தியப் பெருங்கடலை அடுத்து, பசிபிக் பெருங்கடலிலும் இந்தியா உறுதியாகத் தனது செல்வாக்கை உருவாக்கி வருகிறது. 2007வது வருடம், இந்தியா ஜப்பான் மெரிடைம் செல்ஃப்-டிஃபென்ஸ் ஃபோர்ஸ் மற்றும் யூஎஸ் கடற்படை ஆகியவற்றுடன் பசிஃபிக்[113] பகுதியில் கப்பல் பயிற்சிகளை நடத்தியது; மேலும் ஆசிய-பசிஃபிக் பகுதியில் ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து சுற்றும் பணிக்காக ஜப்பானோடு 2008வது வருடம் அக்டோபர் மாதத்தில் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.[114]

மலபார் 2007ன்போது இந்தியக் கடற்படை விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விராட்டிற்கு மேலாக அணிவகுத்துப் பறக்கும் இந்திய மற்றும் யூஎஸ் கடற்படைகளின் விமானங்கள்

வியட்நாம்,[115] ஃபிலிப்பைன்ஸ் மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளோடும் கப்பல் பயிற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.[116] 2007வது ஆண்டு, இந்தியாவும் தென் கொரியாவும் வருடாந்திர கப்பல் பயிற்சிகளை[117] மேற்கொள்ளத் திட்டமிட்டன; மேலும் தென் கொரியாவின் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் இந்தியா கலந்துகொண்டது.[118] இதற்கும் மேலாக, இதர நட்பு நாடுகளுடன் குறிப்பாக ஜெர்மனி[119] மற்றும் குவைத்,ஒமன்,[120] பஹ்ரெய்ன் மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றையும் உள்ளிட்டு பெர்சிய வளைகுடாவின் அராபிய நாடுகள் ஆகியவற்றுடனான தனது ஒத்துழைப்பை இந்தியக் கடற்படை அதிகரித்து வருகிறது; .[121][122] இந்தியா, இந்தியப் பெருங்கடலில் முதல் கடற்படை கருத்தரங்கு (ஐஓஎன்எஸ்)[123] நடத்தியது. இந்தியப் பெருங்கடல் கரையில் அமைந்துள்ள அனைத்து நாடுகளும் பரஸ்பரம் இணக்கமானவற்றில் ஒத்துழைத்து அப்பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.[124] சர்வதேச அரசியற் செயல் நயத்தில் இந்தியக் கடற்படையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.[125] 2000வது ஆண்டிலிருந்து, இந்திய படைக்கப்பல்கள் இஸ்ரேல், துருக்கி, எகிப்து, லிபியா, கிரீஸ், ஒமன், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, டோங்கா, தென் ஆப்பிரிக்கா,[126]கென்யா,[127] கதார், ஒமன், யுனைடெட் அராப் எமிரேட்ஸ், பஹ்ரெய்ன், குவைத்[128] ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு சென்று வந்துள்ளன; 2005-2007 ஆண்டுகளில் இவை பிற நாட்டுத் துறைமுகங்களுக்கும் வருகை புரிந்துள்ளன.

அட்லாண்டிக் கடலில் இந்தியக் கடற்படையின் முதல் பணியமர்வு 2009வது வருடம் நடைபெற்றது. இந்த பணியமர்வின் போது இந்தியக் கடற்படை ஃப்ரென்ச், ஜெர்மன், ரஷ்யன் மற்றும் பிரிட்டிஷ் கடற்படைகளோடு பயிற்சிகளை நடத்தும்.[129]

ஆய்வுப்பயணம்[தொகு]

இந்தியக் கடற்படையில் கப்பலோட்டும் பயிற்சி கொடுக்கும் கப்பல் ஐஎன்எஸ் தரங்கிணி ஒன்று மட்டுமே. அது இந்தியாவின் சிறப்பான கடல்சார் சரித்திரத்தின் குறியீடு.

இந்தியக் கடற்படை, முறையான கால இடைவெளிகளில் சாகச ஆய்வுப் பயணங்களை மேற்கொள்கிறது. 2003வது ஆண்டு ஜனவரி 23 அன்று ஒடிக்கொண்டேயிருக்கும் பயிற்சிக் கலமான ஐஎன்எஸ் தரங்கிணி , பிற நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு உலகம் தழுவிய கப்பற் பயணத்தை மேற்கொண்டது; 18 நாடுகளில் 36 துறைமுகங்களுக்கு வருகை அளித்த பின்னர் மறு வருடத்தில் மே மாதம் இந்தியாவிற்குத் திரும்பியது.[130] ஐஎன்எஸ் தரங்கிணி, லோகாயான் 07 என்னும் பத்து மாத கால கடற் பயணத்திற்குப் பின்னர் துறைமுகம் திரும்பியது.[131] லெஃப்டினென்ட் கமாண்டர் எம்.எஸ்.கோஹ்லி என்பவர் எவரெஸ்ட் சிகரத்தின் முதல் பயணத்திற்கு 1965ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையை நடத்திச் சென்றார்; மீண்டும் 2004வது வருடம் மே மாதம் இதைப் போன்ற ஒரு பயணத்தின் போது எவெரெஸ்ட் சிகரத்தின் மீது கடற்படையின் கொடி பறக்க விடப்பட்டது. மற்றொரு கடற்படைக் குழு, தொழில் நுட்ப ரீதியாக மிகவும் சவாலான வழித்தடமாக அமைந்துள்ள, எவரெஸ்டின் சிகரத்தின் வட முகத்தையும் வெற்றிகரமாகக் கடந்து மலையேறியது.[132] உன்னத நீர்மூழ்கி பிரிவைச் சார்ந்த கமாண்டர் சத்யப்ரதா தாம் என்பவர் இந்தப் பயணத்தை நடத்தி சென்றார். கமாண்டர் தாம் ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற மலையேறுபவர் ஆவார்; அவர் ஆல்ப்ஸ் மலைச் சிகரம், பாதகோனியா ஆகியவற்றை உள்ளிட்ட பல்வேறு மலைச் சிகரங்களில் ஏறியுள்ளார். இந்த குழுவின் சாதனைக்கு ஈடாக இன்று வரை வேறொன்றும் இல்லை. எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதற்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வீரரை முதன் முதலாக அனுப்பியதும் கடற்படைதான்.[133]

11 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இந்தியக் கடற்படை குழு ஆர்க்டிக் துருவத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தது. அதற்குத் தம்மைத் தயார் செய்து கொள்ள, குழு உறுப்பினர்கள் முதலில் ஐஸ்லாந்துக்குச் சென்று, அங்குள்ள ஒரு சிகரத்தில் ஏற முயன்றனர்.[134] இந்தக்குழு அடுத்து கிழக்கு கிரீன்லாந்துக்குப் பறந்து சென்றது; அங்கு குலுசுக் மற்றும் அங்மஸாலிக் பகுதிகளில், குளிரால் உறைந்திருந்த பள்ளதாக்குகளில், எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் இனுயிட் படகுகளை அவர்கள் பயன்படுத்தினர். அவர்கள் ஆர்க்டிக் சர்க்கிள் பனிப்பாறைகளுக்கு எழுபது டிகிரி கோணத்தில் வடபுறமாகப் பயணம் செய்தனர். இந்தக்குழு பெயர் அறியப்படாத 11,000 அடி உயரமுள்ள சிகரம் ஒன்றைத் தொட்டு அதற்கு "இந்தியச் சிகரம்" என்று பெயரிட்டது.[135]

இந்தியக் கடற்படையின் கொடி அன்டார்டிகாவில் 1981வது ஆண்டு முதன் முதலாகப் பறந்தது.[136] 2006வது வருடம், இந்தியக் கடற்படை தென் துருவத்தினூடே பனியின் இடையே பனிக்கட்டைகள் கொண்டு பயணம் செய்து தனது தக்ஷிண் துருவ் பணித்திட்டத்தில் வெற்றியடைந்தது. இந்த சரித்திரப்புகழ் வாய்ந்த பயணத்தின் மூலம், அவர்கள் நிலவியலில் தென் துருவத்தில் பனியின் இடையே பயணம் செய்த முதல் ராணுவக் குழு என்ற சாதனையை உருவாக்கியுள்ளனர்.[137] மேலும், பத்து உறுப்பினர் கொண்ட குழுவில் மூவர்- பயணத்தின் தலைவர்- கமாண்டர் சத்யப்ரதா தாம், புகழ் வாய்ந்த மருத்துவர்கள் ராகேஷ் குமார் மற்றும் விகாஸ் குமார் ஆகியோர் உலகிலேயே இரண்டு துருவங்கள் மற்றும் எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றை அடைந்த மிகச் சிலரில் தற்பொழுது உள்ளீடாகின்றனர்.[138][139] துருவங்களுக்கும் எவரெஸ்ட் சிகரத்திற்கும் சென்ற முதல் நிறுவனம் சார்ந்த அமைப்பு இந்தியக் கடற்படையே ஆகும்.[140] 'சாகர் பரிக்ரமா' என்று பெயரிட்டப்பட்ட, ஒரு உலக சுற்றுப்பயணம் ஒற்றை ஆளாக கமாண்டர் திலீப் தாண்டே என்பவரால் மேற்கொள்ளப்படுகிறது.[141]

மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கங்கள்[தொகு]

இந்தியா 2004வது வருடத்தில், யூஎஸ் $1.5 பில்லியனுக்கு நிகரான தொகைக்கு அட்மிரல் கோர்ஷ்கோவ் என்னும் ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பலை வாங்கியது. இதை மறு சீரமைப்பு செய்ய மேலும் யூஎஸ் $1.5 பில்லியன் செலவாகும்; அதன் பின்னர் அது 2012வது வருடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்னும் பெயருடன் இந்தியக் கடற்படையில் இணையும். மேலும் கூடுதலாக, 12 ஒரிருக்கை உடைய எம்ஐஜி-29கே மற்றும் இரு இருக்கைகள் கொண்ட எம்ஐஜி-29கேயூபி விமானங்கள் நான்கு, தாக்கும் மற்றும் உளவு நீர்மூழ்கிகளைத் தகர்க்கும் உலங்கு வானூர்திகளான காமோவ்-31 ஆறு, விமான ஒட்டிகளுக்கும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பயிற்சி, உபரி பாகங்களும் பாவனை இயந்திரங்களும் தருவித்தல், மற்றும் இந்தியக் கடற்படை நிறுவல் மற்றும் பராமரிப்புப் பணி வசதிகள் இவையனைத்தும் யூஎஸ் $700 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளில், 14.3 டிகிரி பனிச்சறுக்கலுக்கு வழி ஏற்படுத்துவதற்காக சரக்கு ஏந்தி செல்லும் மேல் தளத்திலிருந்து ஏவுகணைகளை அப்புறப்படுத்துவதும் அடங்கும்.[142] 2009வது ஆண்டில், இந்தியக் கடற்படைக்கு எம்ஐஜி-29கள் வழங்கப்படும்.[143]

2007வது வருடம் ஏப்ரல் மாதம் இந்தியா $800 மில்லியன் செலவில் 40,000 டன் விக்ராந்த் வகை விமானம் தாங்கும் கப்பலை உருவாக்கத் தொடங்கியது; இது நேவல் எல்சிஏ, எம்ஐஜி-29கே, மற்றும் ஸீ ஹாரியர் காம்பட் விமானம், ஆகியவற்றுடன் ஹெச்ஏஎல் துருவ், கேஏ-31 மற்றும் ஸீ கிங் எம்கே.42 உலங்கு வானூர்திகள் ஆகியவற்றையும் உள்ளிட்டு 30 விமானங்கள் இயக்கும் ஒரு கட்டமைப்பாக உருவாக்கப்படுகிறது. நான்கு விசையாழிப் பொறி இயந்திரங்கள் கப்பலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும். மாநில அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்[144] டால் கட்டப்படும் இந்தப் பொதி ஊர்தி 2012-13வது ஆண்டில் கடற்படையுடன் இணையும். இந்த விமானம் தாங்கிக் கப்பல் 2011வது வருடம் இயக்கப் பெறலாம் என்று இந்திய ராணுவத்திற்கான இணை அமைச்சர், பல்லம் ராஜூ 2006வது வருடம் செப்டம்பர் மாதம் கூறினார்.[145] உள்நாட்டிலேயே மேலும் அதிக விமானம் தாங்கிக் கப்பல்களை உருவாக்கத் திட்டங்கள் உள்ளன.[146]

தற்பொழுது இந்தியக் கடற்படை விரைவான விரிவாக்கம் மற்றும் நவீனமாக்கல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளது.[147] மேலும், மூன்று 1135.6 வகைப் போர்க்கப்பல்கள் கட்டுவதற்காக ரஷ்யாவின் கலினிங்கிராட்டில் உள்ள யாந்தர் என்னும் தொழிற்சாலைக்கு யூஎஸ் $1.56 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இதன் அதிக விலைக்கான காரணம், பிரம்மோஸ் போன்ற அதி நவீன கப்பல் ஏவுகணைகள்தாம். மேலும் கூடுதலாக எட்டு போர்க்கப்பல்கள் பெறுவதற்கு இந்தியக் கடற்படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பி-8 பொஸிடான் என்னும் நீர்மூழ்கித் தகர்க்கும் போர் நடவடிக்கை/ கரையோர கண்காணிப்புப் பிரிவிலான எட்டு விமானங்களுக்காக போயிங்குடன் இந்தியக் கடற்படை ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட 4 வருடங்களுக்கு பிறகு, அதாவது 2012வது ஆண்டு முதல் விமானம் அனுப்பப்படும்.[148]

எதிர்கால வாய்ப்புகள்[தொகு]

2008 தொடங்கி 2013வது ஆண்டு வரை, இந்தியா தனது ராணுவ நவீனமயமாக்கலுக்காக யூஎஸ்$40 பில்லியன் செலவழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[149] இதில் பெரும்பாலும் இந்தியக் கடற்படைக்காக வாங்கப்படுபவையே. மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலிற்கான பணியாக்கம் 2010வது ஆண்டு துவங்கும், அது 2017வது வருடம் கடற்படையில் இணைக்கப்படும்.[150] ஏழு 17ஏ தொழிற்திட்டப் பிரிவு போர்க்கப்பல்களுக்கு அனுப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.[151] தற்சமயம், தனது நீர்மூழ்கிப் படையை விரிவுபடுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. மேலும், மனிதரற்று நீருக்கடியில் இயங்கும் வாகனம் (யூயூவி) போன்ற புதிய தொழில் நுட்பங்களும் இந்தியக் கடற்படைக்காக உருவாக்கப்பட்டு வருகின்றன.[152][153]

தொழிற்திட்டம் 75 என்பதன் ஒரு பகுதியாக ஆறு ஸ்கார்பீன் நீர்மூழ்கிகள் தயாரிக்க அனுப்பாணை வழங்கப்பட்டுள்ளது; இதை அடுத்து இந்தியக் கடற்படை தற்பொழுது அடுத்த தலைமுறை நீர்மூழ்கிகள் ஆறினை வாங்குவதற்கு 30,000 கோடி மதிப்புடைய திட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளது. இந்தியாவில் 75I தொழிற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ஆறு டீசல்-மின்சக்தி நீர்மூழ்கிகள், காற்றை-நம்பியிராத உந்துசக்தி கொண்டவையாக இருக்கும்; இவற்றின் இயக்கத்திறனை இது மேம்படுத்தும்; மேலும் அதிக அளவில் மறைபொருள் கொண்டவையாய், நிலத்தில் தாக்கும் திறன் கொண்டு எதிர்காலத் தொழில் நுட்பங்களையும் புகுத்த வல்லனவாக இருக்கும். ரோஸோபோரோனெக்ஸ்போர்ட், ஃப்ரென்ச்(ஆர்மரிஸ்), ஹெச்டிடபிள்யூ மற்றும் இதர நிறுவனங்களுக்கும் ஆர்எஃப்ஐக்கள் வழங்கப்பட்டு விட்டன, இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகளும் முடிவடைந்து விட்டன. 2008வது வருட இறுதியில் அல்லது 2009வது வருடத் துவக்கத்தில் ஆர்எஃப்பி அல்லது உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி வழங்கப்படும்.[154]

2008வது வருடம் ஜூலை மாதம் 11 அன்று நீர்மூழ்கிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை(ஏஎஸ்டபிள்யூ) திறனுள்ள ஆறு எம்ஆர்எம்ஆர் விமானங்களுக்கான ஆர்எஃப்பி (முன் மொழிதலுக்கான வேண்டுகோள்) இத்தாலிய அலேனியா ஏரோனாடிக்காவின் ஏடிஆர்-72-500எம்பி விமானம், பிரேசிலின் எம்ப்ரேயர் பீ-99, ஃப்ரென்ச் டஸால்ட்'ஸ் ஃபால்கான் 900டிஎக்ஸ் மற்றும் ரஷ்ய ஆன்டோனோவ்-72பீ ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் 2009வது வருடம் ஜூன் மாதம் கையெழுத்தாகும் என்றும் 2012வது வருடம் பூர்த்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1,600 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், அதிக யூஏவிக்களைத் தருவிப்பதற்கு கடற்படை திட்டமிடுகிறது. சேடக் உலங்கு வானூர்திகளைக் கப்பலிலிருந்து இயக்கப்படக்கூடிய மனிதரற்ற யூஏவிக்களாக மாற்றியமைக்கும் இந்தியா-இஸ்ரேலின் கூட்டுமுயற்சி உறுதியாக முன்னேறி வருகிறது. இவை அனைத்தும், விண்வெளி-சார்ந்த உளவு அமைப்பு முறைமைகளுடன் இணைக்கப்படும்.[155] 2009வது வருடம் ஜனவரி 13 அன்று, மிதமான செயல் தொலைவு உள்ள ஆறு கரையோர உளவு விமானங்களுக்காக (எம்ஆர்எம்ஆர்) இந்தியா ஆர்எஃப்பிக்களை வழங்கியுள்ளது. இந்தப் புதிய விமானங்கள் முதிர் நிலை அடைந்து விட்ட 10 ஐலேண்டர் விமானங்களை இயக்க நிலையிலிருந்து அகற்றும், மற்றும் இவை வான்வழி முன்னெச்சரிக்கை அமைப்பு ஒன்றையும் கொண்டிருக்கும். வானில் முன்னறிவிப்பு செய்யும் அமைப்பு முறை அற்ற ஆறு எம்ஆர்எம்ஆர்களும் இந்தியக் கரைக் காவற்படைக்கு தேவைப்படுகின்றன. இந்த எம்ஆர்எம்ஆர்களில் 500 நாட்டிக்கல் மைல்கள் செயல் தொலைவும் ஆறு மணி நேரம் தொடர்ந்து பணி மேற்கொள்ளும் திறனும் இருத்தல் அவசியம். இத்திட்டத்தில் ஈடுபட போட்டியில் உள்ள விமானங்களில் போயிங்கின் பீ-8Iன் மாறுபட்ட வடிவம், மற்றும் அநேகமாக டர்போப்ராப் ஏடி ஆர்-72எம்பி, ஈட்ஸ் சி-295, டஸால்ட்'ஸ் ஃபால்கான் 900எம்பிஏம் மற்றும் எம்ப்ரேயர் பீ-99ஏ தளங்கள் ஆகியவை அடங்கும். கரைக் காவற்படையின் ஆர்எஃப்பிக்கான முயற்சியில் ஏடிஆர்-42எம்பி, சி-295 அல்லது சிஎன்-235எம்பி ஆகியவை இருக்கலாம்.

16 நவீன பலச் செயல் திறன் கொண்ட உலங்கு வானூர்திகளை வாங்குவதற்காக அகஸ்டாவெஸ்ட்லாண்ட், ஈட்ஸ் மற்றும் ஸிகோர்ஸ்கி ஆகியவற்றிற்குக் கடற்படை ஒப்பந்தப் புள்ளியை வழங்கியுள்ளது. இந்த அனுப்பாணை 60 உலங்கு வானூர்திகளுக்காக அதிகரிக்கவுள்ளது. இந்த உலங்கு வானூர்திகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு வீசும் நீர்மூழ்கிகளும் உள்ளிட்ட, கப்பல் தகர்க்கும் மற்றும் நீர்மூழ்கிகளுக்கு எதிராகச் செயல்படும் போர்க் கருவிகளைக் கொண்டிருக்கும். மேலும் இவை வானில் செல்லும் பொழுதே எரிவாயு நிரப்பிக் கொள்ளக்கூடிய திறன் கொண்டவையாகவும் இருக்கும். இந்த வகைக் கப்பல்கள் நீர் மற்றும் நில தளங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் இயக்கப்படும்.[156]

தற்பொழுது இயக்கத்தில் உள்ள பாண்டிச்சேரி வகை பெருங்கடல் கண்ணியகற்றிகளுக்கு மாற்றாக எட்டு கண்ணியகற்றிக் கப்பல்களுக்கான (எம்சிஎம்விக்கள்) விலை குறிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஏலத்தில் ப்ரான்ஸ் நாட்டு டிசிஎன் இண்டர்நேஷனல், இத்தாலி நாட்டு ஃபின்கான்டியெரி, ஸ்பெயின் நாட்டு இஸார், தென் கொரியாவின் காங்னாம் ஷிப்பில்டிங் கம்பெனி மற்றும் யூஎஸ்ஸின் நார்த்ராப் கிரன்மேன் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப இடமாற்றத்தின் மூலம் இவற்றில் ஆறு விமானங்கள் கோவா கப்பல் கட்டுந்துறையில் உருவாக்கப்படும்.[157]

அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் திறன் கூட்டுதல், புதியன இணைத்தல் ஆகியவற்றால் இந்தியக் கடற்படை விரைவில் நீல-நீர் கடற்படையாக மாறி விடும் என்று தனிப்பட்ட பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.[158] இந்தியக் கடற்படை ஏற்கனவே அதன் பகுதியில் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது;[159] மேலும் எதிர்காலத்தில் இதன் திறன்கள் அதிகரிப்பதால் இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை உள்ள கரையோரப் பகுதியை கட்டுப்படுத்துவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.[160] விமானம் தாங்கிக் கப்பல்களை வழக்கமான முறையாக இயக்கும் ஒரே ஆசியக் கடற்படை இந்தியக் கடற்படையே.[161] இதன் நோக்கம், மொத்தம் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை அடைவது; இவற்றில், போர் குழுக்களில் உள்ள பொதி ஊர்திகள் இரண்டும், கூடுதலாக, விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றும் இருக்கும். இந்தச் சீரமைப்பின் விளைவாக இந்தியா நீல-நிறக் கடற்படை இயக்கும் நாடாகத் திகழும்.[162]

அண்மையில் வெளியான ஒரு செயற்திட்ட வரைவு ஆறு விமானம் தாங்கிக் கப்பல்கள் கொண்ட நீல-நிற கடற்படையாக இந்தியா திகழ்வதை நீண்ட காலத்திற்கான இலக்கு என்று தெரிவித்துள்ளது. [163]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. இந்தியக் கடற்படையின் உலகார்ந்த பாதுகாப்பு மீதான கட்டுரை
  2. சாகர் ப்ரஹரி பல் படைக்கான விரைவு இடையூட்டுப் படகுகள்
  3. "India has become the largest importer of military goods as it continues its expansion and modernization in 2014". globalfirepower. 7 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "ப்ரூனெல் பல்கலைகழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவைச் சேர்ந்த டாக்டர் டேவிட் ஸ்காட்டின் 'நீல நீர்' கடற்படை வேண்டி இந்திய முயற்சி" (PDF). 2008-05-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  5. "உலகத்தரம் வாய்ந்த கடற்படைக்கு இந்தியாவின் 12 படிகள்". 2010-02-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  6. இந்தியாவின் கரையோரத் திட்டங்களை வடிவமைத்தல்-வாய்ப்புகளும் சவால்களும்
  7. உலகளாவிய பாதுகாப்பில் தனக்கான பங்காற்ற இந்தியா தயார்:ஆண்டனி
  8. "இந்தியாவைப் பற்றிய சுவையான உண்மைகள்". 2011-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  9. "மேற்கத்தியர்களுடன் கடல்சார் வணிகம்". 2008-06-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  10. "சிந்து சமவெளி நாகரிகம்". 2010-06-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  11. "சிந்து சமவெளி நாகரிகத்தின் பொருளாதாரம்". 2007-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  12. "கப்பல் கட்டுவது எப்படி". 2008-02-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  13. பண்டைக்கால எச்சங்களை மறைக்கும் இந்தியக் கடல் படுக்கை
  14. "இந்தியக் கடற்படையின் சரித்திரம்". 2010-03-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  15. "2001வது வருடம் வெளியிடப்பட்ட தபால் தலைகள்". 2001-04-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2001-04-19 அன்று பார்க்கப்பட்டது.
  16. கோவா போர்ச் செயற்பாடு- இந்தியக் கடற்படை
  17. "1971 போரில் யூஎஸ் தலையீடு". 2006-09-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  18. ஜியோஃப்ரி டில் எழுதிய கடற் சக்தி: 21வது நூற்றாண்டிற்கான வழிகாட்டி
  19. "Maritime Awareness and Pakistan Navy". Defence Notes by Commander (Retd) Muhammad Azam Khan. 2016-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 May 2005 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |dateformat= ignored (உதவி)
  20. பலுசிஸ், பெய்ஜிங் மற்றும் பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகம் பரணிடப்பட்டது 2009-09-19 at the வந்தவழி இயந்திரம்-ஹென்ரி எல்.ஸ்டிம்ஸன் மையம்
  21. ஃப்ரெட்ரிக் கரார் எழுதிய பலுச் தேசிய உணர்வின் மறு எழுச்சி - சர்வதேச அமைதிக்கான கார்னெஜி அறக்கொடை
  22. பங்களாதேஷ்: போரினின்றும் ஒரு தேசம் பிறக்கிறது பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம் டிசம்பர் 20,1971 டைம்
  23. தி பங்களாதேஷ் வார் ப்ரிட்டானிக்கா ஆன்லைன்
  24. இல்லை! என்று சொல்லும் துணிவு
  25. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-20 அன்று பார்க்கப்பட்டது.
  26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2002-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-20 அன்று பார்க்கப்பட்டது.
  27. 'இந்தியாவின் தேசப் பாதுகாப்பு அதன் கடற் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டது'
  28. http://www.globalsecurity.org/military/world/war/kargil-99.htm
  29. இந்தியக் கடற்படை கார்கில் வெற்றியை ஆரவாரமில்லாது கொண்டாடுகிறது
  30. பாதுகாப்பு அமைச்சக அறிக்கை
  31. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-20 அன்று பார்க்கப்பட்டது.
  32. 2006வது ஆண்டு மார்ச் 3, ஐ.நா-இந்திய வலுவான கூட்டுப் பங்காண்மை பற்றி இந்தியாவில் புது தில்லியில் அதிபர் விவாதம், வெள்ளை மாளிகை
  33. 33.0 33.1 "சுனாமி அரசியல் சாதுர்யம் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது". 2005-05-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  34. இந்தியக் கடற்படையின் அரசியல் சாதுர்யம்: சுனாமிக்குப் பின்னர்
  35. "இந்தியா தனது ராணுவ பலத்தை வெளிக் காட்டுகிறது". 2008-09-23 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-09-23 அன்று பார்க்கப்பட்டது.
  36. "ஐஎன்எஸ் ஜலாஷ்வா கிழக்குப் படையில் சேர்கிறது". 2007-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  37. ஆபரேஷன் சுகூன்
  38. ஆபரேஷன் சுகூன்@அதிகாரபூர்வமான வலைத்தளம்
  39. "தெற்கு மற்றும் தென் கிழக்காசியாவில் யூ.எஸ் கடற்படை மருத்துவக் கப்பல் மெர்ஸி நடத்திய உதவிப்பணியில் இந்தியக் கடற்படை மருத்துவர்கள் சேவை செய்கின்றனர்". 2006-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  40. பங்களாதேஷ் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா அரிசி அனுப்புகிறது
  41. மயன்மாருக்கான இந்தியாவின் உதவி அதன் பகுதி சார்ந்த பங்கைப் பிரதிபலிக்கவேண்டும்
  42. http://www.business-standard.com/india/storypage.php?tp=on&autono=37324
  43. "கோவா கரையோரத்தில் கடற்படையின் கரையோரப் பாதுகாவல் படை கடற் கொள்ளையர்களைப் பிடித்து, கடத்தப்பட்ட வணிகக் கப்பலை மீட்டது". 2012-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  44. கடற் கொள்ளைகள் எவ்வாறு இந்தியாவைப் பாதிக்கின்றன
  45. "ஏடன் வளைகுடாவில் இந்தியக் கடற்படை கொள்ளையர் கப்பலைத் தகர்த்தது". 2009-11-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  46. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7736885.stm
  47. "கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தாய் கப்பலை இந்தியா மூழ்கடித்தது-ஐஎம்பி". 2010-11-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  48. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7741287.stm
  49. http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=1705458&wa=wsignin1.0[தொடர்பிழந்த இணைப்பு]
  50. கடற்கொள்ளைக் கலன் கைப்பற்றப்படுதல்
  51. செஷெல்ஸிலிருந்து விடுக்கப்பட்ட எஸ்ஒஎஸ் அறைகூவலுக்கு கடற்படை உதவி
  52. இந்தியக் கடற்படை, செஷெல்ஸிற்கு அருகே நடக்கவிருந்த கொள்ளையை முறியடித்து ஒன்பது பேரைக் கைது செய்தது
  53. "செஷெல்ஸ் நோக்கி மற்றொரு கடற்படைக் கப்பல் செல்கிறது". 2009-05-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  54. "ஏடன் வளைகுடாவில் இந்தியக் கடற்படை கொள்ளையர் தாக்குதலை முறியடித்தது". 2010-10-20 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2010-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  55. http://timesofindia.indiatimes.com/india/Indian-Navy-ship-thwarts-pirate-attack-on-US-tanker-in-Gulf/articleshow/5311594.cms
  56. கடற்கொள்ளைகளுக்கு எதிரான நடவடிக்கைளுக்காக இந்தியக் கடற்படைக்கு யூஎன் புகழாரம்
  57. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  58. [1]
  59. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-01-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-20 அன்று பார்க்கப்பட்டது.
  60. கடலின் மீதான அதிகாரம்
  61. "மலாக்கா கடற்கால் பாதுகாப்பு: இந்தியக் கடற்படைக்கான பங்கு அறியப்படுகிறது". 2010-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  62. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன.
  63. "கடற்பறவை செயற்திட்டம்". 2010-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  64. கடற்படை தலைவர்: எழிமாலா கல்விச்சாலையை பிரதம மந்திரி துவக்கவுள்ளார்.[தொடர்பிழந்த இணைப்பு]
  65. "இந்தியக் கடற்படை பாய்ச்சிய மற்றொரு நங்கூரம்". 2009-04-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  66. வைசாக்கில் கடற்படை தனது இரண்டாவது தளத்தை அமைக்கவிருக்கிறது
  67. மடகாஸ்கரில் உள்ள தளத்தை இந்தியக் கடற்படை குத்தகைக்கு எடுக்கவுள்ளது
  68. வெளிநாட்டு மண்ணில் முதல் கேட்கும் கம்பம் ஒன்றை இந்தியா செயல்படுத்தியது: மடகாஸ்கரில் ராடார்கள்
  69. இந்தியாவும் மொஸாம்பிக்கும் கரையோர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
  70. "கடற்படையின் கடல் செயல் வீரர்கள் கவனத்தைக் கவர்கிறார்கள்". 2010-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  71. "மார்கோஸ் (கடல் செயல் வீரர்கள்)". 2007-10-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  72. இந்தியக் கடற்படைக்காக $1.8 பில்லியனில் ஒரு துணை உடன்படிக்கை
  73. பிரம்மோஸின் அடுத்த இலக்கு நீர்மூழ்கிக் கப்பல் இயக்கம்
  74. இந்தியா 6 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது, கடற்படைத் தலைவர் கூற்று
  75. "நீருக்கடியில் செயல்படும் தானியங்கிக் கப்பலை என்எஸ்டிஎல் உருவாக்கியுள்ளது". 2009-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  76. http://timesofindia.indiatimes.com/news-india-india-set-to-launch-nuclear-powered-submarin/articleshow/4787167.cms
  77. பிஐபி பிரசுர அறிக்கை
  78. இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா?
  79. "2012வது வருடம் அட்மிரல் கோர்ஷ்கோவை அனுப்ப ரஷ்யா உறுதி". 2009-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  80. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-01-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  81. கடலுக்கடியில் ரகசிய ஆயுதம், இண்டியா டுடே
  82. ஆழமான தாக்கம்
  83. அகுலா வகை நீர்மூழ்கி
  84. அடுத்தவருடம், ரஷ்யாவின் அணுசக்தி வாய்ந்த அகுலா II நீர்மூழ்கியைப் பெற்றுக் கொள்ள இந்தியா எதிர்பார்க்கிறது
  85. "ரகசிய அணுசக்தி துணை உடன்படிக்கை". 2009-01-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-14 அன்று பார்க்கப்பட்டது.
  86. "இந்திய அணுசக்தி நீர்மூழ்கிகள்", இந்தியா டுடே, ஆகஸ்ட் 2007 பதிப்பு
  87. "இந்திய ராணுவ விமான ஆர்பேட்". 2013-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  88. யூஎஸ்சுடன் இதுவரையிலான மிகப்பெரும் ராணுவ உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடுகிறது
  89. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-10-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  90. [2]
  91. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-02-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  92. [3]
  93. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-11-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  94. "செபகாட்/ஹெச்ஏஎல்ஜக்குவார்". 2009-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  95. இந்திய விமானப்படை கரையோர ஜக்குவாரின் படம்
  96. கரையோரப் பாதுகாப்புப் பணிக்குத் தயார் நிலையில் உள்ள இந்திய விமானப் படையின் எஸ்யு-30எம்கேஐ விமானம்
  97. இந்தியா யூஎஸ் ஹார்பூன் ஏவுகணைகளைத் தேர்வு செய்கிறது
  98. "மிக் 29 கே ரக விமானங்கள் இணைக்கப்பட்டன". 2013-06-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-05-11 அன்று பார்க்கப்பட்டது.
  99. "$350 மில்லியன் மதிப்புள்ள, நீண்ட-கால பாரக் ஸாம் திட்டத்தில் இஸ்ரேல் மற்றும் இந்தியா ஒத்துழைப்பு". 2008-09-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  100. பிரம்மோஸின் கடற்படைப் பதிப்பு சோதனை வெற்றி
  101. சங்க்ரஹா மின்னணுப் போர்முறை அமைப்பு
  102. "கடற்படை உருவாக்கி வரும் மிகு-விரைவு தரவு வலைப்பின்னல்". 2010-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  103. மாற்றம் ஆனால் தொடர்ச்சி: இந்தியக் கடற்படை வீறு நடை போட்டு முன்னேறுகிறது
  104. தகவல் தொழில் நுட்பமும் இந்தியக் கடற்படையும்
  105. "ஜனாதிபதியின் கடற்படை மேற்பார்வையீடு". 2006-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  106. "நட்பு வட்டப் பாலங்கள்". 2008-12-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  107. நட்புப் பாலங்கள்
  108. இந்தியக் கடற்படை தனது நீல-நீர் திறன்களை வெளிப்படுத்துகிறது
  109. மிகப் பெரும் கடற்படைப் போர் விளையாட்டு
  110. ஸிம்பெக்ஸ்-2009
  111. "சீனாவின் சர்வதேச கடற்படைப் பார்வையீட்டில் இந்தியா பங்கேற்க இருக்கிறது". 2010-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  112. "இந்தியா மின்னணுசெய்தி - இந்தியக் கடற்படை புதிய கரையோர போர்முறை கோட்பாடுகளை செயலாக்குகிறது". 2010-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  113. உயர் கடற்படை அதிகாரிகளுடன் இணைந்து இந்தியக் கடற்படை கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறது
  114. சீனாவின் மீது கண் வைத்திருக்க, இந்தியா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன
  115. "5-நாட்கள் பார்வையீட்டிற்காக ஸாய்-கான் துறைமுகத்தில் இரண்டு இந்தியக் கடற்படை கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன". 2007-09-30 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  116. யூஎஸ் மற்றும் ரஷ்யாவை தன்னகத்திற்கு வெளியே இந்தியக் கடற்படை ஈடுபடுத்துகிறது
  117. இந்தியாவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் கடற்படைப் பயிற்சிகள்
  118. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  119. "இந்திய-ஜெர்மன் கடற்படைப் பயிற்சிகள் இன்று துவக்கம்". 2010-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  120. "அபு தாபி: இந்திய படைக் கப்பல்கள் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன". 2009-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-14 அன்று பார்க்கப்பட்டது.
  121. "கடற்படையின் சிறு கப்பல் தொகுதி பெர்சிய வளைகுடா மாநிலங்களுடன் பயிற்சிகள் மேற்கொள்கிறது". 2007-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  122. "ஜிசிசி நாடுகளுடன் கப்பல் பயிற்சிகள் மேற்கொள்ள இந்தியா தயார்". 2010-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  123. ஐஓஎன்எஸ்- அதிகார பூர்வமான வலைத்தளம்
  124. வளங்களைத் திரட்டுவதற்காக இந்தியப் பெருங்கடல் கடற்படையுடன் பிரதம மந்திரி சந்திப்பு
  125. "சர்வதேச அரசியற் செயல் நயத்தில் இந்தியக் கடற்படையின் அதிகரிக்கும் பங்கு". 2007-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  126. "இந்தியக் கனவு மெய்ப்படுதல்". 2009-12-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  127. கென்யாவிற்கு இந்தியக் கப்பலின் பிரியாவிடை[தொடர்பிழந்த இணைப்பு]
  128. இந்தியப் படைக் கப்பல்கள் மேற்கொள்ளும் இணக்கச் சுற்றுப்பயணம்
  129. "அட்லான்டிக்கில் ஃப்ரென்ச் மற்றும் பிரிட்டிஷுடன் கடற்படைப் போர் விளையாட்டுகள் அடுத்த மாதம் ஆரம்பம்". 2009-06-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  130. ஐஎன்எஸ் தரங்கிணி
  131. "பெருமையுடன் நிமிர்ந்து பயணிக்கும் ஒரு கப்பல்". 2007-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  132. "உலகின் உச்சியில் இந்தியக் கடற்படை". 2008-06-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  133. இந்தியக் கடற்படை எவரெஸ்ட் சிகரம் தொட்டது
  134. "ஐஸ்லாந்தில் இந்தியக் கடற்படைக் குழு". 2006-10-03 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2006-10-03 அன்று பார்க்கப்பட்டது.
  135. "நடுக்கும் குளிரை அடக்கு!". 2010-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  136. "இந்தியக் கடற்படையின் காலச் சுவடு". 2007-11-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  137. "கடற்படை தென் துருவத்தில் பனி நடை பயின்ற முதல் ராணுவக் குழுவாகிறது". 2008-06-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  138. "இந்தியக் கடற்படை கட்டளைப் பணி தக்ஷிண் துருவ் 2006-07". 2008-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  139. திபெத்திய வழியைப் பின்பற்றி எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதற்கு, இந்தியக் கடற்படைக் குழு தயாராக உள்ளது.
  140. வட துருவத்தில் இந்தியக் கடற்படை குழுவின் சாதனை
  141. சாகர்பரிக்ரமா கட்டளைப் பணியின் அதிகாரபூர்வமான வலைப்பூ
  142. இந்தியா வாங்கியுள்ள அட்மிரல் கோர்ஷ்கோவைப் பற்றிய ஓரு அறிக்கை
  143. இந்தியாவின் சரக்குக் கப்பல் எம்ஐஜியை ஒப்படைக்கும் நேரம் நெருங்குகிறது
  144. விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானப் பணியில் இந்தியா
  145. ஐஏசி கட்டுமானம்
  146. * '3-கேரியர் கடற்படை'ஒன்றை இந்தியா வாங்குகிறது பரணிடப்பட்டது 2007-03-19 at the வந்தவழி இயந்திரம்
  147. [4]
  148. இந்தியா தனது படைத்துறை பலத்தை வெளிப்படுத்துகிறது-பக்கம் 2>
  149. இந்தியக் கடற்படை, 2017வது வருடத்தில் தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலைப் பெறும்
  150. 45,000-கோடி உடன்படிக்கையை இந்தியக் கடற்படை முடிக்கிறது: 7 போர்க் கப்பல்கள்
  151. "நீருக்கடியில் ஆளற்று இயங்கும் கப்பல்களை டிஆர்டிஒ உருவாக்குகிறது". 2010-08-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  152. "ஆளற்று இயங்கும் பாதுகாப்பு அமைப்புகள் முதிர்நிலை அடைகின்றன". 2009-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  153. இந்தியக் கடற்படைத் திட்டங்கள்-75ஏ: ஆறு நவீன நீர்மூழ்கிகளுக்கான ஆர்எஃப்ஐக்கள் வழங்கப்பட்டு விட்டன; ரோஸோபோரோனெக்ஸ்போர்ட்,அர்மாரிஸ், ஹெச்டிடபிள்யூ ஆகியவை போட்டியில் உள்ளன
  154. உளவுத் திறனை அதிகரிக்க கடற்படை யோசனை
  155. உலங்கு வானூர்திகளுக்கான கடற்படையின் வேண்டுகோள் 2009வது வருடத்தின் மையத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
  156. 8 கண்ணி எதிர் நடவடிக்கை கப்பல்களுக்காக இந்தியா கோரிக்கை[தொடர்பிழந்த இணைப்பு]
  157. "நீல நிறக் கடற்படைக்காக பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்கு இந்தியா முயற்சி". 2010-02-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  158. பின்புலக் குறிப்பு: இந்தியா தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களின் பிரிவறையகம், அக்டோபர் 2006,யூஎஸ்.மாநிலத் துறை
  159. "மார்ச் 12,2007 'இந்தியாவின் வளர்ந்து வரும் ஆற்றலை மத்திய கிழக்கு விரைவில் உணரலாம்'". 2008-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  160. யுவான் ஜிங் டாங்கின் யூஎஸ்-இந்தியா உடன்படிக்கை பற்றி பெய்ஜிங்க் இன்னமும் மௌனம் மார்ச் 16,2006 தாய்பெய் டைம்ஸ்
  161. http://timesofindia.indiatimes.com/articleshow/1086252.cms
  162. http://www.defensenews.com/story.php?i=4238801&c=ASI&s=SEA[தொடர்பிழந்த இணைப்பு]

நூல் பட்டியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Honorary/War time rank. No officer held this rank in the Indian Navy.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கடற்படை&oldid=3636388" இருந்து மீள்விக்கப்பட்டது