பிதான் சந்திர ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிதான் சந்திர ராய்
2வது மேற்கு வங்காள முதலமைச்சர்
பதவியில்
14 சனவரி 1948 – 1 சூலை 1962
முன்னவர் பிரபுல்ல சந்திரா கோஷ்
பின்வந்தவர் பிரபுல்ல சந்திரா கோஷ்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 1, 1882(1882-07-01)
பங்கிப்பூர், பட்னா, பீகார்
இறப்பு 1 சூலை 1962(1962-07-01) (அகவை 80)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) திருமணமாகாதவர்
இருப்பிடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் பிரசிடென்சி கல்லூரி, கொல்கத்தா
பட்னா கல்லூரி
மருத்துவர்களின் அரசக் கல்லூரி அங்கத்தினர் (M.R.C.P.)
அறுவை மருத்துவ அரசக்கல்லூரியின் சீர் உறுப்பினர் (F.R.C.S.)
தொழில் மருத்துவர்
விடுதலை போராளி
அரசியல்வாதி
சமயம் பிரம்மோ சமாஜ்

மரு. பிதான் சந்திர ராய் , (Bidhan Chandra Roy, வங்காள மொழி: বিধান চন্দ্র রায়; 1 சூலை 1882–1 சூலை 1962) எனப்படும் பி. சி. ராய் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றியவர். 1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் காங்கிரசு முதலமைச்சராக தொடர்ந்து இப்பதவியில் இருந்தார். சிறந்த மருத்துவராகவும் விடுதலை இயக்க போராளியாகவும் மிகவும் புகழ் பெற்றிருந்தார். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு அடிகோலிய ராய் முதன்மை நகரங்களாக விளங்கும் துர்காப்பூர், கல்யாணி மற்றும் கொல்கத்தாவின் புறநகர் பிதான்நகர் உருவாக காரணமாக இருந்தார்.கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். இந்தியாவில் அவரது பிறந்த (மற்றும் இறந்த) நாளான சூலை 1 தேசிய மருத்துவர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதான்_சந்திர_ராய்&oldid=3188182" இருந்து மீள்விக்கப்பட்டது