உள்ளடக்கத்துக்குச் செல்

பூபேன் அசாரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபேன் அசாரிகா
Bhupen Hazarika
பூபேன் அசாரிகா
பிறப்பு8 செப்டம்பர் 1926 (1926-09-08) (அகவை 97)
குவஹாத்தி, அசாம், பிரித்தானிய இந்தியா
இறப்பு5 நவம்பர் 2011(2011-11-05) (அகவை 85)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
இறப்பிற்கான
காரணம்
பல உறுப்புகள் செயலிழப்பு
பணிபாடகர், இசைக்கலைஞர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர்
வலைத்தளம்
http://bhupenhazarika.com/bio/index.php

பூபேன் அசாரிகா (Bhupen Hazarika, அசாமிய மொழி: ভূপেন হাজৰিকা, பூபேன் ஹசோரிகா) ( செப்டம்பர் 8, 1926 – நவம்பர் 5, 2011) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

முனைவர் பூபேன் அசாரிகா இந்தி மற்றும் அசாமிய திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசையில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளார். அவரது மாநிலமான அசாமிலும் அண்டை மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் பெருமதிப்புமிக்கவராக புகழ் பெற்றுள்ளார். அசாமின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக அமைந்துள்ளார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக பொறுப்பாற்றி உள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

அசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார்.

1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார்.

வாழ்க்கை[தொகு]

பாடகராக அவரது ஆழமான கரகரப்புக் குரலுக்காகவும் மொழி உச்சரிப்புக்காகவும் அறியப்பட்டார்; பாடலாசிரியராக கவித்துவம் நிறைந்த வரிகளுக்காகவும் உவமைகள் நிறைந்த உள்ளடக்கத்திற்காகவும் அறியப்பட்டார்; இசையமைப்பாளராக நாட்டுப்புற இசை கலந்த தற்கால இசையமைப்புக்காக அறியப்பட்டார். தனது தாய்மொழியான அசாமிய மொழி தவிர இந்தி, வங்காள மொழி எனப் பிற மொழிகளிலும் பாடியுள்ளார்.

விருதுகள்[தொகு]

பெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபேன்_அசாரிகா&oldid=3711635" இலிருந்து மீள்விக்கப்பட்டது