தோண்டோ கேசவ் கார்வே
தோண்டு கேசவ் கார்வே | |
---|---|
1958 ஆம் இந்திய அஞ்சல் தலையில் கார்வே | |
தாய்மொழியில் பெயர் | धोंडो केशव कर्वे |
பிறப்பு | செராவலி, தபோலி, ரத்னகிரி, மகாராட்டிரம் | 18 ஏப்ரல் 1858
இறப்பு | 9 நவம்பர் 1962 புனே, இந்தியா | (அகவை 104)
பணி |
|
வாழ்க்கைத் துணை | ராதா பாய், கோது பாய் |
பிள்ளைகள் | ரகுநாத் கார்வே, சங்கர் கார்வே, தினகர் கார்வே, பாஸ்கர் கார்வே |
மகரிசி முனைவர். தோண்டு கேசவ் கார்வே (Maharshi Dr. Dhondu Keshav Karve, மராத்தி: महर्षी डॉ. धोंडो केशव कर्वे) (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 9, 1962) இந்தியாவில் மகளிர் நலனுக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி. இவரது நினைவாக மும்பையின் குயின்ஸ் சாலை மகரிசி கார்வே சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கும் விதவைகள் மறுமணம் புரியும் உரிமைக்கான போராட்டத்திலும் முன்னோடியாக விளங்கினார். இவரது சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருதை இவரது நூறாவது அகவையில் 1958ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.
வாழ்க்கை வரலாறு
[தொகு]மகாராட்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் முருத் என்ற சிற்றூரில் ஏப்ரல் 18, 1858 அன்று கேசவ் பாபுண்ணா கார்வேயின் மகனாகப் பிறந்தார். மும்பையின் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1][2].அவரது பதினான்காவது வயதிலேயே எட்டு வயது ராதாபாய்க்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.[3] 1891ஆம் ஆண்டில் தனது இரண்டாவது பிரசவத்தின்போது ராதாபாய் மரணமடைந்தார். இவர்களுக்குப் பிறந்த ரகுநாத் கார்வேயும் பின்னாளில் ஓர் சீர்திருத்தவாதியாக விளங்கினார்.
பெண்களுக்கு எதிரான வழக்கங்களைக் கண்டு சீர்திருத்தக் கருத்துக்களை முழங்கி வந்த கார்வே தன்னுடைய வாழ்விலும் அக்கொள்கைகளை கடைபிடிக்கும் வண்ணம் கோதுபாய் என்ற 23 வயதுடைய விதவையை இரண்டாவது திருமணம் செய்தார்.[4]
1891–1914 காலகட்டத்தில் கார்வே புனேயின் ஃபெர்குசன் கல்லூரியில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5]. ஈசுவர் சந்திர வித்தியா சாகர், ராதாபாய் மற்றும் எர்பெர்ட் ஸ்பென்சர் ஆகியோரின் தாக்கத்தால் பெண்களின் கல்வி, விதவைகளின் மறுவாழ்வு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராயிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vikram Karve's Notes on his great-grand father". Archived from the original on 2007-08-22. பார்க்கப்பட்ட நாள் 2006-08-01.
- ↑ "Notes on Asia Times". Archived from the original on 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 2006-08-04.
- ↑ autobiography:
- ↑ "NCTE – Comparison of Tilak with other reformers including Karve". Archived from the original on 2006-11-06. பார்க்கப்பட்ட நாள் 2006-08-01.
- ↑ "Fergusson College Department of Mathematics web page". Archived from the original on 2006-06-19. பார்க்கப்பட்ட நாள் 2006-08-11.
வெளியிணைப்புகள்
[தொகு]- MKSSS Education Trust[தொடர்பிழந்த இணைப்பு]
- Maharshi Karve by Ganesh L. Chandāvarkar, Popular Prakashan (1958) (The biography was commissioned and published by the Dr. D. K. Karve Centenary Celebrations Committee on April 18, 1958, the birth centenary of Karve. Jawāharlāl Nehru, the then Prime Minister of India, had addressed the main function that day at the Brabourne Stadium in Mumbai).