உள்ளடக்கத்துக்குச் செல்

உதய் சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதய் சங்கர்
பிறப்பு8 டிசம்பர் 1900
உதயப்பூர், உதயப்பூர் மாநிலம், பிரித்தானிய இந்தியா
இறப்பு26 செப்டம்பர் 1977 (வயது 76)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடனக் கலைஞர், நடன இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
அமலா சங்கர்
பிள்ளைகள்ஆனந்த சங்கர்
மம்தா சங்கர்

உதய் சங்கர் (Uday Shankar) (8 டிசம்பர் 1900 - 26 செப்டம்பர் 1977) ஒரு இந்திய நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் ஆவார். ஒரு இணைவு பாணியிலான நடனத்தை உருவாக்குவதற்கும், ஐரோப்பிய நாடக நுட்பங்களை இந்திய பாரம்பரிய நடனத்திற்கு மாற்றியமைப்பதற்கும், இந்திய பாரம்பரிய, நாட்டுப்புற மற்றும் பழங்குடி நடனத்தின் கூறுகளுடன் ஊக்கமளிப்பதற்கும் மிகவும் பிரபலமானவர். பின்னர் இவர் இவ்வகை நடனத்தை 1920களிலும் 1930களிலும் இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பிரபலப்படுத்தினார்.[1][2][3][4][5] இவர் இந்தியாவில் நவீன நடனத்தின் முன்னோடியாகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

உதய் சங்கர் சௌத்ரி ராஜஸ்தானின் உதயப்பூரில் ஒரு பெங்காலி குடும்பத்தில் நராய்ல் (தற்போதைய வங்காளதேசம்) மாவட்டத்தில் பிரபலமான பாரிஸ்டரான ஷியாம் சங்கர் சௌத்ரிக்கும், ஜமீன்தாரி குடும்பத்தைச் சேர்ந்த ஹேமாங்கினி தேவி என்பவருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இராஜேந்திர சங்கர், தேவேந்திர சங்கர், பூபேந்திர சங்கர், பிரபல இசைக் கலைஞர் ரவி சங்கர் ஆகியோர் இவரது தம்பிகள். இவரது உடன்பிறப்புகளில், பூபேந்திரா 1926இல் இளம் வயதிலேயே இறந்தார்.[6][7]

இவரது தந்தை சமசுகிருத அறிஞராகவும் இருந்தார். அவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கௌரவத்துடன் பட்டம் பெற்றார். பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு இவர் தத்துவ மருத்துவராக ஆனார்.[8] தந்தையின் பணியின் காரணமாக அடிக்கடி குடிபெயர்ந்ததால், குடும்பம் இவரது தாய் மாமாவின் ஊரான நஸ்ரத்பூரில் தங்கியிருந்தது. இவரது கல்வி நஸ்ரத்பூர், காசிப்பூர், வாரணாசி, ஜலவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடந்தன. தனது காசிப்பூர் பள்ளியில், வரைதல் மற்றும் கைவினை ஆசிரியரான அம்பிகா சரண் முகோபாத்யாயிடமிருந்து இசையையும் புகைப்படம் எடுப்பதையும் கற்றுக்கொண்டார்.

1918ஆம் ஆண்டில், தனது பதினெட்டு வயதில், ஜே.ஜே.கலைப் பள்ளியில் பயிற்சி பெற மும்பைக்கு அனுப்பப்பட்டார், பின்னர் புதி தில்லி,கந்தர்வ மகாவித்யாலயாவுக்கு அனுப்பப்பட்டார்.[9] அப்போது, இவரது தந்தை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு லண்டனுக்கு குடிபெயர்ந்திருந்தார். இந்திய நடனம் மற்றும் இசையை பிரிட்டனுக்கு அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, இவரும் இலண்டனில் தனது தந்தையுடன் சேர்ந்தார், 1920 ஆகஸ்ட் 23 அன்று சர் வில்லியம் ரோதன்ஸ்டீனின் கீழ் ஓவியம் படிக்க இலண்டனின் பேரரசின் கலைப்பள்ளியில் சேர்ந்தார். இலண்டனில் தனது தந்தை ஏற்பாடு செய்திருந்த ஒரு சில தொண்டு நிகழ்ச்சிகளில் இவர் நடனமாடினார். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், உருசிய நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவா கலந்து கொண்டார். இது இவரது வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.[5]

தொழில்

[தொகு]
1923ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ' இராதா - கிருஷ்ணா ' நடனத்தில் உதய் சங்கருடன் அண்ணா பாவ்லோவா.

உதய் சங்கருக்கு எந்த இந்திய நடன வடிவத்திலும் முறையான பயிற்சி இல்லை. ஆயினும்கூட, இவரது விளக்கக்காட்சிகள் ஆக்கபூர்வமானவை.[10] சிறு வயதிலிருந்தே, இவர் இந்தியப் பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தினார். அதே போல் இவர் ஐரோப்பாவில் தங்கியிருந்த காலத்தில் பாலேவையும் வெளிப்படுத்தினார். ஒரு புதிய நடனத்தை உருவாக்க இரு பாணிகளின் கூறுகளையும் ஒன்றாகக் கொண்டுவர முடிவு செய்தார். அதை இவர் ஹாய்-டான்ஸ் என்று அழைத்தார். பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ராஜபுதன ஓவியப் பாணி மற்றும் முகலாய ஓவிய பாணிகளைப் பார்த்தபின், இந்திய நடன வடிவங்களையும் அவற்றின் உருவப்படத்தையும் நடன இயக்கங்களில் கொண்டு வந்தார். மேலும், இவர் பிரிட்டனில் தங்கியிருந்த காலத்தில், பல கலைஞர்களிடமும் தொடர்பிலிருந்தார். பின்னர் கலையில் மேம்பட்ட படிப்புகளுக்காக இவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் 'உதவித்தொகையில் உரோம் சென்றார்.

புகழ்பெற்ற உருசிய நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவுடனான இவரது முதல் சந்திப்புகளுடன் திருப்புமுனை ஏற்பட்டது. இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட கருப்பொருள்களில் ஒத்துழைக்க கலைஞர்களை அவர் தேடிக்கொண்டிருந்தார். இது இந்து கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட பாலேக்களை உருவாக்க வழிவகுத்தது, இராதா - கிருஷ்ணா, என்ற பாலேவை அண்ணாவுடன் சேர்ந்து வடிவமைத்தார். பின்னர் தொடர்ந்து கருத்தரித்தல் மற்றும் நடனக் கலைகள், அஜந்தா குகைகளின் சுதை ஓவியங்களை அடிப்படையாகக் கொண்ட நடன நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுவதும் நிகழ்த்தினார்.[11] காலப்போக்கில் இவரது நடனம் 'ஹாய்-டான்ஸ்' என்று அறியப்பட்டது. ஆனால் பின்னர் இவர் அதை 'கிரியேட்டிவ் டான்ஸ்' என்று அழைத்தார்.[12]

'உதய் சங்கரின் பாலே குழு', (1935-37)கள்.

1938ஆம் ஆண்டில், இவர் இந்தியா திரும்பி அல்மோராவில் 'உதய் சங்கர் இந்தியா கலாச்சார மையத்தை' நிறுவினார். மேலும், கதகளிக்கு சங்கரன் நம்பூதிரி, பரதநாட்டியத்திற்கு கந்தப்பப் பிள்ளை, மணிப்பூரிக்கு அம்பி சிங், இசைக்கு உஸ்தாத் அலாவுதீன் கான் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர், இவர் குரு தத், சாந்தி பர்தன், சிம்கி, அமலா, சத்யவதி, நரேந்திர சர்மா, ரூமா குஹா தாகூர்த்தா, பிரபாத் கங்குலி, சோரா சேகல், உஸ்ரா, லட்சுமி சங்கர், சாந்தா காந்தி உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் ஒரு பெரிய கூட்டத்தைக் கொண்டிருந்தார்; இவரது சொந்த சகோதரர்களான இராஜேந்திரா, தேபேந்திரா மற்றும் ரவி ஆகியோரும் இவருடன் மாணவர்களாக சேர்ந்து கொண்டனர். ஆனாலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக 1942ஆம் ஆண்டில் இந்த மையம் மூடப்பட்டது. பின்னர், 1948 இல் தென்னிந்தியா திரும்பி நடனத்தின் அடிப்படையில் "கல்பனா" (கற்பனை) என்ற திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இவரும் இவரது மனைவி அமலா சங்கரும் நடனமாடினர். இப்படம் சென்னையின் ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டு படமாக்கப்பட்டது.

உதய் சங்கர் 1960 இல் கொல்கத்தாவின் பாலிகுங்கில் குடியேறினார். அங்கு "உதய் சங்கர் நடன மையம்" 1965இல் மீண்டும் திறக்கப்பட்டது. இந்திய நடனத்தில் இவரது வாழ்நாள் சாதனைகளுக்காக 1962-ல் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற விருது வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

உதய் தன்னுடன் நடனமாடி வந்த அமலா சங்கர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆனந்த சங்கர் என்ற ஒரு மகனும் மம்தா சங்கர் என்ற ஒரு மகளும் பிறந்தனர். ஆனந்த சங்கர் ஒரு இசைக்கலைஞராகவும், இசையமைப்பாளராகவும் ஆனார். தனது பெற்றோர்களைப் போன்ற நடனக் கலைஞரான மம்தா சங்கர் ஒரு பிரபலமான நடிகையானார். சத்யஜித் ராய் மற்றும் மிருணாள் சென் ஆகியோரின் படங்களில் பணியாற்றினார். அவர் இப்போது கொல்கத்தாவில் 'உதயன் நடன நிறுவனத்தை' நடத்தி வருகிறார், மேலும் உலகம் முழுவதும் விரிவாக பயணம் செய்கிறார்.[13]

விர்ஹுதும் கௌரவமும்

[தொகு]
1978 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் உதய் சங்கர்

1962ஆம் ஆண்டில், இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி, அதன் மிக உயர்ந்த விருதான, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை வழங்கியது. 1971ஆம் ஆண்டில், இந்திய அரசு தனது இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூசண் விருதை வழங்கியது.

விருதுகள்

[தொகு]

நடனங்கள் (முழுமையானது அல்ல)

[தொகு]
  • The Original Uday Shankar Company of Hindu Musicians, Recorded During the Historic 1937 Visit to the United States, instrumental ensemble: Vishnudass Shirala, Sisir Sovan, Rabindra (Ravi Shankar), Dulal Sen, Nagen Dey, Brijo Behari
    • Indian Music: Ragas and Dances, The Original Uday Shankar Company of Hindu Musicians. Recorded during the historic 1937 visit to the United States. RCA/Victrola VIC-1361 (1968 reissue, 10 tracks: 4 ragas, 5 dances, 1 பஜனைகள்)
    • Ravi Shankar:Flowers of India El Records (2007), containing all tracks from the original album[15]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Uday Shankar பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
  2. Uday Shankar: a tribute[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து, 21 December 2001.
  3. DANCE VIEW; ONE OF INDIA'S EARLY AMBASSADORS த நியூயார்க் டைம்ஸ், 6 October 1985.
  4. Sukanta Chaudhuri (1990) Calcutta, the Living City: The present and future. Oxford University Press. p. 280.
  5. 5.0 5.1 Reginald Massey (2004) India's dances: their history, technique, and repertoire. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-434-1. pp. 221–225. Ch. 21.
  6. Family Tree Mamta Shankar Dance Company, website.
  7. Biography of Ravi Shankar பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம் Ramon Magsaysay Award website.
  8. Uday Shankar Biography catchcal.com.
  9. Banglapedia: National Encyclopedia of Bangladesh.
  10. Sunil Kothari (2000) Uday Shankar:An Appreciation. Natya Kala Conference
  11. Nayana Bhat (26 September 2007) The Uday Shankar story. narthaki.com
  12. Ballet Legacy. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 22 March 2003.
  13. Mohd. Anis Md. Nor (2007) Dialogues in dance discourse: creating dance in Asia Pacific. Cultural Centre, University of Malaya. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2085-85-3.
  14. Creative Dance பரணிடப்பட்டது 5 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம் Sangeet Natak Akademi Award Official listings.
  15. The Flowers of India – acmem117cd பரணிடப்பட்டது 21 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Cherry Red Records.

28. Sarkar Munsi, Urmimala (2011). 'Imag(in)ing The Nation: Uday Shankar's Kalpana' in Traversing Traditions: Celebrating Dance in India. Eds. Urmimala Sarkar Munsi & Stephanie Burridge. Routledge: India, UK, USA. pp. 124–150.

29. Sarkar Munsi, Urmimala (2010). 'Boundaries and Beyond: Problems of Nomenclature in Indian Dance' in Dance: Transcending Borders. Ed. Urmimala Sarkar Munsi. Tulika Books: Delhi. pp. 78–98.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uday Shankar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்_சங்கர்&oldid=3924685" இலிருந்து மீள்விக்கப்பட்டது