குஷ்வந்த் சிங்
குசுவந்த் சிங் | |
---|---|
புது தில்லியில் குசுவந்த் சிங் | |
பிறப்பு | குஷால் சிங் 2 பெப்ரவரி 1915 அடாலி, பிரித்தானிய இந்தியா (தற்போது சர்கோதா மாவட்டம், பாக்கித்தான்) |
இறப்பு | 20 மார்ச்சு 2014 புதுதில்லி, இந்தியா | (அகவை 99)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித இசுடீவன் கல்லூரி, தில்லி கிங்சு கல்லூரி இலண்டன் |
பணி | செய்தியாளர், எழுத்தாளர், வரலாற்றாளர் |
வாழ்க்கைத் துணை | கவல் மாலிக் |
கையொப்பம் |
குஷ்வந்த் சிங் (Khushwant Singh; பெப்ரவரி 2,1915 - மார்ச்சு 20, 2014) பஞ்சாபை சேர்ந்த முதுபெரும் புதின ஆசிரியர் ஆவார். இவர் இந்தியாவின் பல்வேறு பத்திரிகைகள், வார இதழ்களில் பணியாற்றியுள்ளார். இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம விபூஷண் விருதை 2007 ஆம் ஆண்டில் இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவின் கீழ் பெற்றார். மேற்கத்திய கலாச்சாரத்தையும் இந்தியக் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே இவரது பெரும்பாலான படைப்புகள் இருக்கும் என்ற ஒரு கருத்தும் உண்டு.
இளமையும் கல்வியும்
[தொகு]பாக்கிச்தானின் பஞ்சாபில் உள்ள ஹதாலியில் 1915ஆம் ஆண்டு பிப்பிரவரி 2இல் பிறந்தார்.தில்லியில் பள்ளிப் படிப்பை முடித்த குஷ்வந்த் தில்லி,லாகூர் ஆகிய நகரங்களில் கல்லூரிப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியிலும் பயின்றார்.
பணிகள்
[தொகு]குஷ்வந்த்சிங் 1947இல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சேருவதற்குமுன் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். நடுவணரசு திட்டக்குழுவுக்காக யோஜனா என்னும் பத்திரிக்கையை நிறுவினார்.மேலும் தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா ’தி இந்துஸ்தான் டைம்ஸ்’ ’தி நேசனல் ஹெரால்ட்’ ஆகிய செய்தி இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1980ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
இவர் எழுதிய சில நூல்கள்
[தொகு]- தி மார்க் ஆப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரீஸ் (விஷ்ணு மற்றும் பிற கதைகளின் தழும்புகள்)
- தி ஹிஸ்டரி ஒப் சீக்ஸ் (சீக்கியர்களின் வரலாறு)
- ட்ரெயின் டு பாகிஸ்தான் (பாகிஸ்தான் செல்லும் ரயில்)
- தி வாய்ஸ் ஆப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ் (கடவுளின் குரலும் பிற கதைகளும்)
- ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல் (நைட்டிங்கேல் பறவையின் பாடலை என்னால் கேட்க முடியாது)
- தி பால் ஆப் பஞ்சாப் (பஞ்சாப் பேரரசின் வீழ்ச்சி)
- ட்ராஜெடி ஆப் பஞ்சாப் (பஞ்சாபின் அவலம்)
மறைவு
[தொகு]2014ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 அன்று தனது 99ஆவது வயதில் காலமானார்.