இராசகோபாலன் சிதம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராசகோபாலன் சிதம்பரம்
Rajagopala Chidambaram.jpg
2008ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் தோவோசில் நடைபெற்ற உலக பொருளியல் மன்ற சந்திப்பில் சிதம்பரம்.
பிறப்பு திசம்பர் 11, 1936 (1936-12-11) (அகவை 79)
பிறப்பிடம் சென்னை, தமிழ்நாடு,
பிரித்தானிய இந்தியா
வாழிடம் புது தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்
இனம் தமிழர்
கல்வி கற்ற இடங்கள் சென்னை பல்கலைக்கழகம்,
இந்திய அறிவியல் கழகம்
அறியப்படுவது படிகவுருவியல்
சிரிக்கும் புத்தர்
பொக்ரான்-II

ஆர். சிதம்பரம் என்கிற இராசகோபாலன் சிதம்பரம் (Rajagopala Chidambaram) ஓர் இந்திய அணு அறிவியலாளர் மற்றும் புகழ்பெற்ற உலோகவியல் அறிஞர். இந்திய அரசின் முதன்மை அறிவியல் அறிவுரைஞராகப் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் அடிப்படை அணுவியல் ஆய்வுமையமான பாபா அணு ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனராக இருந்துள்ளார். முனைவர். சிதம்பரம் பொக்ரானில் நடந்த 1974 அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். மே 1998ஆம் ஆண்டு நடந்த சக்தி நடவடிக்கையின்போது அணுசக்தித் துறையின் குழுவை தலைமையேற்று நடத்தியுள்ளார்.

முனைவர். சிதம்பரம் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் 'மாண்புடை நபர்களின் குழு' அங்கத்தினர்களில் ஒருவராக உள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே குடிசார் அணுவாற்றல் கூட்டுறவு உடன்பாடுகையெழுத்தாகும் முன்னர் பன்னாட்டு முகமையின் இயக்குனர்குழு "பாதுகாவல்கள் உடன்பாட்டை" ஏற்றுக்கொள்ள இவர் ஆற்றிய பங்கு முதன்மையானதாகும்.

கல்வி[தொகு]

சென்னையில் பிறந்த சிதம்பரத்தின் பள்ளிப்பருவம், மீரட்டில் துவங்கி, சென்னையில் முடிவடைந்தது. சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

பணி[தொகு]

1962ஆம் ஆண்டு மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். 1990இல் இம்மையத்தின் இயக்குநரானார். [1]

குறிப்புகள்[தொகு]

  1. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்110

வெளியிணைப்புகள்[தொகு]