வர்கீஸ் குரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர். வர்கீஸ் குரியன்
பிறப்பு(1921-11-26)26 நவம்பர் 1921
கோழிக்கோடு, சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போது கோழிக்கோடு, கேரளா)
இறப்பு9 செப்டம்பர் 2012(2012-09-09) (அகவை 90)
நாடியாத், குஜராத், இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்"இந்திய வெண்மை புரட்சியின் தந்தை"
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி
கிண்டி பொறியியல் கல்லூரி
மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம்
பணிஅமுல் நிறுவனத்தின் நிறுவனர்
முன்னாள் தலைவர், என்டிடிபி மற்றும் ஆனந்த் ஊரக மேம்பாட்டு நிறுவனம்
அறியப்படுவதுஇந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என பரவலாக பாராட்டப்பட்டார்.[1]
விருதுகள்உலக உணவுப் பரிசு (1989)
பத்ம விபூசன் (1999)
பத்ம பூசன் (1966)
பத்மசிறீ (1965)
ரமோன் மக்சேசே விருது (1963)
வலைத்தளம்
www.drkurien.com
அமுல் கூட்டுறவு பால் பண்னையை நிறுவிய மும்மூர்த்திகள்:வர்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல் மற்றும் அரிசந்த் மேகா தலாயா

வர்கீஸ் குரியன் ( நவம்பர் 26, 1921- செப்டம்பர் 09, 2012[2], கோழிக்கோடு, கேரளம்) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் பால்காரர் என்றும் கூறுவதுண்டு.

குசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் (GCMMF) தலைவராக இருந்தவர். அமுல் என்ற வணிகப்பெயருடன் விற்கப்படும் உணவுப்பொருட்களை நிருவகிக்கும் ஓர் உயர்நிலை கூட்டுறவு இயக்கமே குசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பாகும். 2006-07 ஆண்டிற்கான வருவாய் $ 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

உலகின் மிகப்பெரிய பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டமான வெள்ளைச் செயலாக்கத்தின் வடிவமைப்பாளராக குரியன் கருதப்படுகிறார். ஆனந்த் மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன் இந்தியாவின் வெண்புரட்சியை வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.

கல்வி[தொகு]

குரியன் கோபிசெட்டிபாளயத்திலுள்ள வைரவிழா மேனிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்தார். குரியன் சென்னை லயோலாக் கல்லூரியில் 1940ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். 1946ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.

பணிவாழ்வு[தொகு]

இந்தியா வந்தபிறகு, மே 1949ஆம் ஆண்டு ஆனந்த் அரசு பால்பண்ணையில் பொறியாளராகச் சேர்ந்தார். அதேநேரம் புதியதாகத் துவங்கப்பட்ட கூட்டுறவு பால்பண்ணை , கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தனியாரிடமிருந்த பொல்சன் பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருந்தது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது. மேலும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது.

விருதுகள்[தொகு]

பால்பண்ணை மேம்பாட்டிற்காக குரியனுக்கு இந்தியாவில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

100வது பிறந்தநாள்[தொகு]

வர்கீஸ் குரியனின் 100வது பிறந்த தினமான நவம்பர் 26, 2021 அன்று வர்கீசின் புகைப்படத்தினை தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின், பால் உறையின் மீது அச்சிட்டுச் சிறப்பு செய்தது.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Father of white revolution Verghese Kurien dies". The Times of India. Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
  2. "வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் காலமானார்". தினகரன். 2012-09-10. Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 10, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Ramon Magsaysay Award Citation பரணிடப்பட்டது 2010-03-29 at the வந்தவழி இயந்திரம் ரமோன் மக்சேசே விருது Official website.
  4. "அடடே ஆவின்! ‘வெண்மை புரட்சி’ தந்தைக்கு கெளரவம்" (in தமிழ்). தின மலர் (தஞ்சாவூர்: தின மலர் திருச்சிராப்பள்ளி) 71 (தஞ்சாவூர் பதிப்பு): p. 11. 2021-11-27. 

வெளியிணைப்புகள்[தொகு]

Resignations
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்கீஸ்_குரியன்&oldid=3845016" இலிருந்து மீள்விக்கப்பட்டது