எஸ். ஐ. பத்மாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மருத்துவர் பத்மாவதி (S. I. Padmavati) 1917 சூன் 17 அன்று பிறந்த இவர் ஓர் இந்திய இதயநோய் நிபுணராக அறியப்படுகிறார். தில்லியின் தேசிய இதய நிறுவனத்தின் இயக்குநராகவும், அகில இந்திய இதய அறக்கட்டளையின் நிறுவனர் தலைவராகவும் உள்ளார். தடுப்பு இருதயவியல் தொடர்பான மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இந்த நிறுவனம் உலக சுகாதார அமைப்புடன் (WHO) ஒத்துழைக்கிறது. [1] [2]

1992 இல் மருத்துவர் பத்மாவதிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது. [3] தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளரான மருத்துவர் பத்மாவதி, [4] 1954 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணராவார். வட இந்தியாவில் முதல் இருதய மருத்துவமனை மற்றும் இருதய கேத் ஆய்வகத்தை நிறுவினார். புது தில்லியில் நடைபெற்ற (1966) 5 வது இருதயவியல் உலக காங்கிரசின் தலைவராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மருத்துவர் பத்மாவதி பர்மாவில் (மியான்மர்) ஒரு வழக்குரைஞருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர் [5]

யங்கோன், யங்கோன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றப் பின்னர் 1949 இல் இலண்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் இலண்டனின் இராயல் மருத்துவக் கல்லூரியில் சக கூட்டாளர் என்பதை பெற்றார். அதன்பிறகு எடின்பரோவின் இராயல் மருத்துவக் கல்லூரியில் சக கூட்டாளர் ஆனார். இங்கே தேசிய இதய மருத்துவமனை, தேசிய மார்பு மருத்துவமனை மற்றும் லண்டனின் குயின் சதுக்கத்தில் உள்ள தேசிய மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் பணிபுரியும் போது, இவர் இருதயவியலில் தனதுல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

பின்னர், இவர் மூன்று மாதங்கள் சுவீடனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் தெற்கு மருத்துவமனையில் இருதயவியலில் உயர் படிப்புகளை படித்தார் [6] இதற்கிடையில், அமெரிக்காவின் ஒரு பகுதியான பால்டிமோரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சக கூட்டாளருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பிரபல இருதயநோய் மருத்துவர் டாக்டர் ஹெலன் தௌசிக் உடன் ஆய்வுக்குச் சென்றார். 1952 ஆம் ஆண்டில், இவர் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்) சேர்ந்தார். அங்கு இவர் நவீன இருதயவியலில் முன்னோடியாக இருந்த டாக்டர் பால் டட்லி ஒயிட்டின் கீழ் படித்தார். [7]

தொழில்[தொகு]

1953 ஆம் ஆண்டில், இந்தியாவில், டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக மீண்டும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு இவர் இருதயவியல் மருத்துவமனை ஒன்றைத் திறந்தார். 1954 ஆம் ஆண்டில், இவர் இந்தியாவின் முதல் பெண்கள் இருதயநோய் நிபுணர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் இந்திய மருத்துவக் கழகத்துடன் ஒரு பரிசோதகராக இவர் இந்தியாவில் இருதயவியல் துறையில் முதல் மருத்துவரானார். [8]

1967 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அதே ஆண்டில் பத்ம பூசண் விருதை இந்திய அரசு வழங்கியது. இருதயவியல் துறையின் முதல் துறைகளில் ஒன்றை கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் ஜிபி பந்த் மருத்துவமனையில் நிறுவினார். இவர் 1978 இல் கல்லூரியின் இயக்குநராக பணியாற்றி (முதல்வராக) ஓய்வு பெற்றார். [9] இவர் 1962 ஆம் ஆண்டில் அகில இந்திய இதய அறக்கட்டளையை உருவாக்கினார்.

ஓய்வுக்குப் பிறகு, இவர் தென் டெல்லியில், அகில இந்திய இதய அறக்கட்டளையின் கீழ் தேசிய இதய நிறுவனத்தை அமைத்தார். இந்த மருத்துவமனை 1981 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் மூன்றாம் நிலை நோயாளி பராமரிப்பு, ஆராய்ச்சி மற்றும் மக்கள்தொகை மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இவர் தொடர்ந்து இங்கு பணிபுரிகிறார்.

இன்று, இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் இருதயவியல் துறையின் கௌரவப் பேராசிரியராக உள்ளார். 1992ல் இந்திய அரசு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூசண் வழங்கியது. இவர் சூன் 2018 இல் தனது 101 வயதை எட்டினார். [10]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஐ._பத்மாவதி&oldid=3263207" இருந்து மீள்விக்கப்பட்டது