மெகுதி நவாசு ஜங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாப் மெகுதி நவாசு ஜங்
Nawab Mehdi Nawaz Jung.jpg
பிறப்புசையது முகமது மெகுதி
மே 23, 1894(1894-05-23)
தார்-உல்-சிபா, ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம் (தற்போதைய தெலங்காணா, இந்தியா)
இறப்பு28 சூன் 1967(1967-06-28) (அகவை 73)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா (தற்போதைய தெலங்காணா, இந்தியா)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பாபா மிலன்
பணிஅதிகாரத்துவமும் அரசியல்வாதியும்
அறியப்படுவதுசமூக பணி, கூட்டுறவு இயக்கம் மற்றும் சுகாதாரப் பணிகள்.
விருதுகள்பத்ம விபூசண்
மெகுதி நவாசு ஜங்
1வது [[குசராத்தின் ஆளுநர்]]
பதவியில்
1 மே 1960 – 1 ஆகத்து 1965
முதலமைச்சர் ஜீவராஜ் மேத்தா
பைவந்திரா மேத்தா
முன்னவர் Office Established
பின்வந்தவர் நித்யானந்த் கனுங்கோ
உசுமானியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்
பதவியில்
1936–1943

நவாப் மெகுதி நவாசு ஜங் (Nawab Mehdi Nawaz Jung) (23 மே 1894 - 28 சூன் 1967) இவர் ஓர் இந்திய அதிகாரத்துவவாதியாவர். இவர், ஐதராபாத் நிசாம் ஆட்சியின் போது நிர்வாக சபையின் செயலாளராகவும் இருந்தார். [1] 1960-1965 வரை குசராத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார்.

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இவரது வீடு 'பஞ்சாரா பவன்' என்று அழைக்கப்படுகிறது. இது ஐதராபாத்தின் மிகவும் அழகிய பகுதியாகும். [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், ஐதராபாத்தின் தெற்குப்பகுதியான தார்-உல்-சிபா என்ற இடத்தில் மௌல்வி சையத் அப்பாசு அலி என்பவருக்கு ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். [4]

தொழில்[தொகு]

ஐதராபாத் மாநகராட்சியின் முதல் ஆணையாளராகவும் இவர் இருந்தார். இவர், ஐதராபாத் தொகுதியிலிருந்து 1952 இல் ஒரு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 1952 முதல் 1960 சனவரி வரை, முன்னாள் ஐதராபாத் மாநிலத்திலும் பின்னர் ஆந்திர மாநில அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். பொதுப்பணித்துறை, சாலைகள் மற்றும் கட்டிடத் துறை, நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம் போன்ற பல்வேறு இலாகாக்களை கவனித்து வந்தார். [5]

இந்திய சமூக நல அமைப்பின் முதல் தலைவராக இருந்தார். நிலூஃபர் மருத்துவமனை, மெகுதி நவாசு ஜங் புற்றுநோயியல் நிறுவனம் போன்ற முதல் அரசு புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இது, கேடயச் சுரப்பி புற்றுநோய்களில் ரேடியோ-அயோடின் நீக்கம் பயன்படுத்துவதில் முன்னோடி மருவத்துமனைகளில் ஒன்றாகும். இது பிராந்திய புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும். தற்போது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு நிதியளிக்கப்படுகிறது. [6]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், நவாப் அகீல் ஜங் என்பவரின் மகள் தாகிரா பேகம் என்பவரை மணந்தார். இவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.

இவர் அகமதாபாத் (குசராத்து) மையத்தில் சமூகத்திற்காக ஒரு கலையரங்கத்தை நிறுவினார், அதற்கான நிலம் நானாவதி குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. குசராத்தின் ஆரம்ப கட்டத்தில் தனி மாநிலத்தைப் பெற்ற பின்னர் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன. அரங்கத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.

நினைவு[தொகு]

ஐதராபாத்தில் உள்ள மெகுதி பட்டினம் என்ற ஊருக்கு இவரது பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hyderabad's heritage Rock House razed to set up club". The Times of India. 2011-08-16. 2012-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. "HMDA blames GHMC for heritage buildings razing". CNN IBN. 2011-08-17. 2012-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "HMDA halts Banjara Bhavan demolition". The Times of India. 2011-08-17. 2012-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Former Vice Chancellors". Osmania University. 19 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Raj Bhavan". Rajbhavan.gujarat.gov.in. 2012-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது.
  6. "The man who gave Hyderabad its 'Banjara Hills', Nawab Mehdi Nawaz Jung". The News Minute. 2015-09-09. https://www.thenewsminute.com/article/man-who-gave-hyderabad-its-banjara-hills-nawab-mehdi-nawaz-jung-34143. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகுதி_நவாசு_ஜங்&oldid=3591273" இருந்து மீள்விக்கப்பட்டது