தாரா சந்து (தொல்லியலாளர்)
தாரா சந்து (Tara Chand (பிறப்பு 17 ஜூன் 1888 சியால்கோட்; இறப்பு 14 அக்டோபர் 1973) என்பவர் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் நிபுணத்துவம் பெற்ற வரலாற்றாசிரியர் ஆவார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் 1940களில் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[1]
பணி
[தொகு]சந்து ஈரானுக்கான இந்தியத் தூதராகவும்[1][2] மற்றும் இந்திய அரசாங்கத்தின் கல்வி ஆலோசகராகவும் பணியாற்றினார்.[3]
தனிமனித தகவல்
[தொகு]தாரா சந்தின் தந்தை முன்சி கிருபா நாரின் ஆவார். இவர் 1951 முதல் 1956 வரை தெகுரானுக்கு இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். இவருக்குப் பின் டி: பத்ருதீன் தியாப்ஜி (டிப்ளமோட்) இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.[4]
வெளியீடுகள்
[தொகு]- Chand, Tara (1922). Influence of Islam on Indian Culture. Read Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781406730401.
- Chand, Tara (1966). Material and ideological factors in Indian history. University of Allahabad. Archived from the original on 2014-02-28. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
- Chand, Tara (1967). History of the Freedom Movement in India. Publications Division, Ministry of Information and Broadcasting.
- Chand, Tara (1979). Society and State in the Mughal Period. Book Traders.
அங்கீகாரம்
[தொகு]அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தாரா சந்தின் நினைவாக விடுதி ஒன்று நிறுவப்பட்டது.[5] பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் இவரது பெயரில் கலவி உதவித்தொகை வழங்குகிறது.[6] இவரது பெயரில் வரலாற்றுக்கான தாரா சந்து தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. 1973இல் நடைபெற்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அகில இந்திய மேல்நிலைத் தேர்வில் வரலாற்றில் அதிக மதிப்பெண்களைப் பெற்றதற்காக தாரச் சந்து தங்கப் பதக்கம் சந்திரரேக மந்திரிக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ex-Vice Chancellors". Allahabad University. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
- ↑ "History of the Department of Political Science". Allahabad University. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
- ↑ "Ambassador Chand Will Talk Here at Summer Conference". http://www.thecrimson.com/article/1952/4/28/ambassador-chand-will-talk-here-at/.
- ↑ CHAND, DR. TARA: M.A., Ph.D.; Nominated; s. of Shri K. Kripa Narain; b. at Sialkot (W. Pakistan), 17 June 1888; ed. at St. Stephen's College, Delhi, Meerut College, Meerut, Muir Central College, Allahabad and Queen's College, Oxford, Oxford University; m. Shrimati Maha Devi, b. 1905; 1 s. and 1 d.; Professor of History, Kayastha Pathshala Allahabad University, 1947-48; Secretary and Educational Adviser to the Government of India, 1948 — 51; President, Secondary Education Conference; Secretary, Hindustani Academy, U.P.; President, Indian History Congress; Ambassador of India in Iran, 1951 — 56; Chairman, Chand served as head of the Political Science department of Allahabad University from 1945 to 1947, when he was appointed Vice-Chancellor of the university. Who's who, Volume 9, Rajya Sabha (Indian Parliament) 1966, p. 49, TARA CHAND; Historian (b. Sialkot, Pakistan, 17 June 1888; d. 14 Oct. 1973): Chairman, History of Freedom Movement Unit, GOI, and V.C. of Allahabad University. Son of Munshi Kripa Narain. Had one son and one daughter.
- ↑ "List of hostels". University of Allahabad. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
- ↑ "Allahabad Alumni Association". பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.