ஹரிபிரசாத் சௌரசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா (Pandit Hariprasad Chaurasia, பிறப்பு 1, சூலை 1938) என்பவர் இந்திய பாரம்பரிய புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் பன்சூரி என்ற ஒரு இந்திய புல்லாங்குழல்[1] வாசிக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் ஹரிபிரசாத் பிறந்தார்.[2] அவருடைய ஆறு வயதில் அவரது தாயார் இறந்தார்.  தந்தையின் உதவி இல்லாமல் இசையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது, ஏனெனில் அவரது தந்தை ஹரிபிரசாத்தை மல்யுத்த வீரராக்க விரும்பினார். அவர் தனது தந்தையாருடன் அகதாவுக்கு சில சமயம் மூலும் அழைத்துச் சென்றார், எனினும் அவர் அவரது நண்பரின் வீட்டிலேயே அவர் இசைப் பயிற்சி பெற்றார். [3]

தொழில்[தொகு]

ஹரிபிரசாத் தனது அண்டை வீட்டாரான பண்டிட் ராஜராமுவிடம் 15 வயதில் குரல் இசை கற்றுக் கொண்டார். பிறகு, வாரணாசியில் பண்டிட் போலன்நாத் பிரசன்னாவிடம்  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புல்லாங்குழலில் இசை வாசிக்க கற்றுக்கொண்டார். அவர் 1957 இல் ஒடிசா மாநிலத்தில் உள்ள, கட்டாக் வானொலி  நிலையத்தில் பணியில் சேர்ந்தார் மற்றும் ஒரு இசையமைப்பாளராகவும் கலைஞராகவும் பணியாற்றினார்.[2][4]  பின்னர், அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த போது, பாபா அலாவுதீன் கானின் மகள் அன்னபூர்ணா தேவிக்கு வழிகாட்டினார். 

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கமலா[5] மற்றும் அனுராதாவை[3] திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்கள் வினய், அஜய், ராஜீவ், ஐந்து பேத்தி மற்றும் ஒரு பேரன். [6]

பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

2013 ஆம் ஆண்டு ஆவணப்படமான பன்சூர் குருவில், சௌராசியாவின் வாழ்க்கை மற்றும் மரபு ஆகியவற்றைக் கொண்டதாக எடுக்கப்பட்டது இந்த ஆவணப்படமானது ராஜீவ் சௌராசியாவால் இயக்கப்பட்டு, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிலிம்ஸ் பிரிவால் தயாரிக்கப்பட்டது. [7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hariprasad Chaurasia performs in Hyderabad". The Times of India. 26 September 2009 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104024738/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-26/hyderabad/28086818_1_maestro-music-auditorium. 
  2. 2.0 2.1 Datta, Madhumita (2008). Let's Know Music and Musical Instruments of India. Star Publications. பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1905863297. https://books.google.com/books?id=qxsy28eStmAC&pg=PT53. 
  3. 3.0 3.1 Kalidas, S (6 July 1998). "Flamboyant Flautist". India Today. http://www.india-today.com/itoday/06071998/arts2.html. பார்த்த நாள்: 7 ஜூலை 2017. 
  4. Kumar, Raj (2003). Essays on Indian Music. Discovery Publishing House. பக். 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8171417193. https://books.google.com/books?id=wwwX6DWfn3gC&pg=PA206. 
  5. "Pandit Hariprasad Chaurasia's first wife, sons left out of biopic". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
  6. "A step forward in promotion of classical music". The Hindu. 22 March 2010 இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100331031622/http://www.hindu.com/2010/03/22/stories/2010032258300200.htm. 
  7. Pau, Debjani (14 January 2013). "Real story of flute maestro now captured in reel". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/news/real-story-of-flute-maestro-now-captured-in-reel/1058928/0. பார்த்த நாள்: 20 January 2013. 
  8. "Weaving melody with the divine flute". The New Indian Express. 15 January 2013. http://www.newindianexpress.com/cities/bengaluru/article1421262.ece. பார்த்த நாள்: 20 January 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிபிரசாத்_சௌரசியா&oldid=3321055" இலிருந்து மீள்விக்கப்பட்டது