தர்லோக் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்லோக் சிங் (Tarlok Singh)(இறப்பு 10 டிசம்பர் 2005[1]) என்பவர் இந்தியத் திட்டக் குழு உறுப்பினராகவும், அரசு அதிகாரியாகவும் இருந்தவர் ஆவார்.

கல்வி & பணி[தொகு]

சிங் இலண்டன் பொருளியல் பள்ளியில் படித்தார். இந்தியத் திட்டக் குழு தொடங்கப்பட்டதிலிருந்து 1967-ல் ஓய்வு பெறும் வரை இவர் இதில் பணியாற்றினார். 1937 முதல் 1962 வரை இந்தியக் குடிமைப் பணி உறுப்பினராக இருந்தார். இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியதில் பங்கு வகித்தார்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் முதல் தனிச் செயலாளராகவும் சிங் இருந்தார். இவர் புணர்வாழ்வு பணி பொது இயக்குநராக இருந்தது பஞ்சாப் அகதிகள் மீள்குடியேற்ற பொறுப்பு[2] மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தில் 1970-ல் துணை நிர்வாக இயக்குநர் (திட்டமிடல்) 1974 வரைப் பணியாற்றினார்.[3]

விருதுகள்[தொகு]

இவர் இந்தியச் சமூக அறிவியல் நிறுவனங்களின் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார்.[1] இவரது பெயரில் ஆண்டு நினைவு விரிவுரைக்கு அறக்கட்டளை நிதியளித்துள்ளார். மேலும் பத்ம விபூசண்(2000),[4] பத்ம பூசண் (1962)[5] மற்றும் 1954 பத்மசிறீ பெற்றவராவார்.[6]

1970-ல் ஸ்டாக்ஹோமில் உள்ள சுவீடன் அரச அறிவியல் கழகத்தின் பொருளாதாரத்திற்கான சோடர்ஸ்ட்ராம் பதக்கத்தைப் பெற்றார்.

புத்தகங்கள்[தொகு]

இவரது புத்தகங்கள், வறுமை மற்றும் சமூக மாற்றம், இடம்பெயர்ந்தவர்களுக்கான நில மீள்குடியேற்ற கையேடு, திட்டமிடல் செயல்முறை, ஒருங்கிணைந்த சமூகத்தை நோக்கி, மற்றும் இந்தியாவின் வளர்ச்சி அனுபவம் ஆகியவை அடங்கும் .

மேற்கோள்கள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்லோக்_சிங்&oldid=3313210" இருந்து மீள்விக்கப்பட்டது