சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முனைவர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத்

கலாநிதி (முனைவர்) சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (பிறப்பு: பெப்ரவரி 22, 1951[1]) இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் ஆவார். இவர் கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்[2][3][4]. மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததாகவும், அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர்[5].

இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார்[6] என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை[7][8]. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் வெலிகந்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன[9]. அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவரது உறவினர்கள் அஞ்சுகின்றனர்[10].

உசாத்துணைகள்[தொகு]

  1. Raveendranath, Sivasubramaniam. "Curriculum Vitae". கிழக்குப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 2007-08-09.
  2. காணமற்போன உபவேந்தர் இலங்கை சண்டேரைம்ஸ் கட்டுரை அணுகப்பட்டது 3 மார்ச் 2007(ஆங்கிலத்தில்)
  3. "Sri Lankan police drag out their inquiries into the murder of SEP supporter". 2007-08-10. http://www.wsws.org/articles/2007/jan2007/sril-j19.shtml. பார்த்த நாள்: 2007-08-10. 
  4. Zuhair, Ayesha (2007-05-02). "The family members of Prof. S. Raveendranath anxiously await a miracle". Daily Mirror. மூல முகவரியிலிருந்து 2007-07-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-07-19.
  5. Fuad, Asif (2006-12-24). "Disappearance of VC: CID in the dark". The Sunday Times. பார்த்த நாள் 2007-07-19.
  6. ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு யாழ்.காம் இணையத்தளத்தில் இருந்து அணுகப்பட்டது 3 மார்ச் 2007(தமிழில்)
  7. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை தினக்குரல் அணுகப்பட்டது 3 மார்ச், 2007 (தமிழில்)
  8. Gardner, Simon (2007-03-07). "Abductions, disappearances haunt Lankan civil war". Gulf Times. பார்த்த நாள் 2007-07-23.
  9. துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.? அணுகப்பட்டது ஜூன் 3, 2007
  10. "Missing top Sri Lankan academic may be dead, says family". Canada Standard (2007-07-04). பார்த்த நாள் 2007-07-23.