சூபின் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூபின் மேத்தா
Zubin Mehta
2007 இல் சூபின் மேத்தா
பிறப்பு29 ஏப்ரல் 1936 (1936-04-29) (அகவை 87)
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(இன்றைய மும்பை, மகாராட்டிரம்)
பணிஇசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1958–இன்று
வலைத்தளம்
zubinmehta.net

சூபின் மேத்தா ( Zubin Mehta 29 ஏப்பிரல் 1936 ) என்பவர் மேற்கத்திய மற்றும் கீழை செவ்வியல் இசை அமைப்பாளர் ஆவார். பல இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகள் உதவியோடு பெரிய இசைக்கச்சேரிகளை உலகம் பூராவும் நடத்தி வருபவர் ஆவார். தமது 21 ஆம் அகவையில் ராயல் லிவர்பூல் பிலார்மோனிக் என்னும் இசை நிகழ்ச்சியை நடத்தி பன்னாட்டு அளவில் பெயர் பெற்றார்.[1]

இளமைக் காலம்[தொகு]

மும்பையில் ஒரு குசராத்துக் குடும்பத்தில் மேத்தா பிறந்தார்.பார்சி இனத்தைச் சேர்ந்த குடும்பம்.இவருடைய தந்தையார் வயலின் இசைக்கலைஞர். இவருடைய தந்தை இலாசு ஏஞ்சல்சிலும் நியுயார்க்கிலும் வாழ்ந்து வயலின் இசைக்கும் கலையைப் பயின்றார். வயலின் இசையில் வல்லவரான தம் தந்தையிடமிருந்து சூபின் மேத்தா இசையைக் கற்றார். மும்பையில் சில காலம் மருத்துவத் தொடக்கக் கல்வி பயின்றார். 1954 இல் சூபின் வியன்னாவுக்குப் பயணமானார். அங்கு இசைக்கச்சேரி எப்படி நடத்துவது எனக் கற்றறிந்தார் 1958 இல் லிவர்பூல் பன்னாட்டு இசைப் போட்டியில் வெற்றி பெற்றார். 1961இல் வியன்னா, பெர்லின், இசுரேல் ஆகிய நாடுகளில் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா நிகழ்ச்சியை நடத்தினார்.

இசைப்பயணம்[தொகு]

சூபின் மேத்தா 1978 இல் நியூயார்க்கு பிலார்மோனிக் இசை இயக்குநர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டு 13 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.[2] 1985 முதல் 2017 வரை பிளாரன்சில் உள்ள ஆர்ச்செஸ்டரா அமைப்பில் முதன்மை நடத்துநராக இருந்தார்.[3] 1977 இல் இசுரேல் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா இசை இயக்குனராக ஆனார். பவரியன் ஸ்டேட் ஆர்ச்செஸ்டராவின் இசை இயக்குநராக பல ஆண்டுகள் இருந்தார். 1984 மற்றும் 1994 ஆண்டுகளில் இந்தியாவில் பயணம் செய்து தம் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவை நினைவு கூரும் வகையில் சென்னை மியூசிக் அரங்கில் இவரது இசைக்கச்சேரி 2005 திசம்பரில் நடந்தது.

விருதுகள்[தொகு]

சர் ஜியார்ஜ் வில்லியம்ஸ் பல்கலைக்கழகத்தில் சூபின் மேத்தாவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் பின்னர் கான்கார்டியா பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4]

சூபின் மேத்தாவின் இஸ்ரேல் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா கருதியும் மற்றும் இசுரேல் மீது அவர் கொண்டிருந்த பற்றின் காரணமாகவும் இசுரேல் சிறப்புப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய நடுவணரசு 1966 இல் பத்ம பூசண் விருதும் 2001இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கியது.[5]

கென்னடி சென்டர் ஆனர்ஸ் 2006 திசம்பரில் இவருக்கு வழங்கப்பட்டது.

சூபின் மேத்தாவுக்கு பிளாரெனஸிலும் டெல் அவீவிலும் மதிப்புறு குடிமகன் என்ற கவுரவம் அளித்தார்கள். 2001 இல் வியன்னா பிலார்மோனிக் மற்றும் 2004 இல் முனிச் பிலார்மோனிக் ஆகியவற்றில் மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் அளித்தனர். பவேரியன் ஸ்டேட் ஓபரா நிறையுறும் போது மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2008 அக்டோபரில் ஜப்பான் பிரிமியம் இம்பிரியல் என்ற விருதைப் பெற்றார்.

2011 மார்ச்சில் ஆலிவுட் வாக் ஆப் பேம் என்ற கவுரவத்தில் 2434 ஆம் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றார்.[6]

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இவருக்கு 2013 ஆம் ஆண்டுக்குரிய தாகூர் விருதை 2013 செப்டம்பரில் வழங்கினார் [7]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூபின்_மேத்தா&oldid=3555288" இருந்து மீள்விக்கப்பட்டது