வியன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வியன்னா
Wien
Skyline of வியன்னாWien
வியன்னாWien-இன் கொடி
கொடி
வியன்னாWien-இன் அதிகாரபூர்வ முத்திரை
முத்திரை
ஆஸ்திரியாவில் வியன்னாவின் அமைவு
ஆஸ்திரியாவில் வியன்னாவின் அமைவு
ஆள்கூறுகள்: 48°12′N 16°21′E / 48.200°N 16.350°E / 48.200; 16.350
நாடு ஆஸ்திரியா
ஆட்சி
 • நகரத் தந்தை மைக்கல் ஹோப்பில்
பரப்பு
 • City 414.90
 • நிலம் 395.51
 • நீர் 19.39
மக்கள்தொகை (2007)
 • நகர் 1.
 • அடர்த்தி 4,011
 • பெருநகர் பகுதி 2.02
நேர வலயம் CET (ஒசநே+1)
 • கோடை (ப.சே.நே.) CEST (ஒசநே+2)
இணையத்தளம் www.wien.at

வியன்னா (Vienna) நகரம் ஆஸ்திரியாவின் தலைநகரம் ஆகும். இங்கு 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழிநுட்பம், பொருள்முதல் மையமாகவும் விளங்குகிறது. செக் குடியரசுக்கும் சிலொவேக்கியா, ஹங்கேரி நாடுகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. 2001ல் யுனெஸ்கோவால் யுனெஸ்க்கோவின் உலகப் பண்பாட்டு சிறப்பிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 18ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற மேற்கத்திய இசைமேதைகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் மோட்சார்ட், லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜோசப் ஹேடன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு புகழ்பெற்ற ஓப்பரா அரங்குகள் உள்ளன.

பெயர்க்காரணம்[தொகு]

வியன்னா, இத்தாலி மற்றும் ஜெர்மனிய சொல்லான இபபெயர், செல்திக் மொழியின் வேதுனியா என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. மேலும் இப்பெயர், வேனியா, வேனியே, வியன் அவ்வாறு திரிந்து வந்ததாகவும் கருதப்படுகின்றது. வியன்னா என்ற சொல்லிற்கு, அடர்ந்த காடுகள் என்று அர்த்தம். வேறு சில மக்களின் கூற்றுப்படி, ரோமாபுரியிலிருந்து இங்கு குடிபெயர்ந்த செல்திக் இன மக்களின் வழக்குச் சொல்லான விந்தோபோனா என்பதிலிருந்து திரிந்து, விந்தோவினா, விதன், வியன் என திரிந்து வியன்னா என்ற பெயர் வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். விந்தோபோனா என்பதற்கு, வெண்நிலம் என்று பொருள்[1].

புவி அமைவிடம்[தொகு]

பனிக்காலத்தில் வியன்னா'வின் கவின்மிகு காட்சி

ஆல்ப்ஸ் மலைச்சிகரத்தின் கிழக்குத் திசை விரிவாக்கப்பகுதியான ஆஸ்திரியாவின் தென்மேற்கில் வியன்னா அமைந்துள்ளது. முற்காலத்தில், இங்கிருக்கும் தனுபே எனும் ஆற்றின் கரையில் ஒருசில இன மக்கள் குடிபெயர்ந்து வந்தனர். பிற்காலத்தில், இந்த ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம் விரிவடைந்தது. இந்நகர், கடல் மட்டத்திலிருந்து 151 to 524 m (495 to 1,719 ft) தொலைவில் உள்ளது.

காலநிலை[தொகு]

வியன்னா'வானது, கடல்சார் காலநிலை மற்றும் ஈரப்பத தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பநிலையானது அதிகபட்சமாக 22 to 26 °C (72 to 79 °F)மாகவும், குறைந்தபட்சமாக15 °C (59 °F)வும் உள்ளது. சித்திரை முதல் கார்த்திகை வரையிலான மாதங்களில், பனிப்பொழிவு ஏற்படும். வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்களில், மிதமான தட்பவெப்பநிலை நிலவும்.

தட்பவெப்ப நிலை தகவல், வியன்னா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16.7
(62.1)
19.1
(66.4)
25.5
(77.9)
27.8
(82)
30.7
(87.3)
35.9
(96.6)
36.0
(96.8)
37.0
(98.6)
31.1
(88)
26.4
(79.5)
20.8
(69.4)
16.1
(61)
37.0
(98.6)
உயர் சராசரி °C (°F) 2.9
(37.2)
5.1
(41.2)
10.3
(50.5)
15.2
(59.4)
20.5
(68.9)
23.4
(74.1)
25.6
(78.1)
25.4
(77.7)
20.3
(68.5)
14.2
(57.6)
7.5
(45.5)
4.0
(39.2)
14.5
(58.1)
தினசரி சராசரி °C (°F) 0.1
(32.2)
1.6
(34.9)
5.7
(42.3)
10.0
(50)
15.2
(59.4)
18.2
(64.8)
20.2
(68.4)
19.8
(67.6)
15.3
(59.5)
9.9
(49.8)
4.6
(40.3)
1.5
(34.7)
10.2
(50.4)
தாழ் சராசரி °C (°F) -2.0
(28.4)
-0.9
(30.4)
2.4
(36.3)
5.8
(42.4)
10.5
(50.9)
13.5
(56.3)
15.4
(59.7)
15.3
(59.5)
11.7
(53.1)
7.0
(44.6)
2.4
(36.3)
-0.5
(31.1)
6.7
(44.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) -19.6
(-3.3)
-17.2
(1)
-15.3
(4.5)
-2.7
(27.1)
1.0
(33.8)
4.8
(40.6)
8.4
(47.1)
7.0
(44.6)
3.1
(37.6)
-4.5
(23.9)
-9.6
(14.7)
-18.1
(-0.6)
-19.6
(-3.3)
பொழிவு mm (inches) 37.2
(1.465)
39.4
(1.551)
46.1
(1.815)
51.7
(2.035)
61.8
(2.433)
70.2
(2.764)
68.2
(2.685)
57.8
(2.276)
53.5
(2.106)
40.0
(1.575)
50.0
(1.969)
44.4
(1.748)
620.3
(24.421)
பனிப்பொழிவு cm (inches) 18.6
(7.32)
15.6
(6.14)
8.3
(3.27)
1.5
(0.59)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
7.9
(3.11)
16.4
(6.46)
68.3
(26.89)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 7.3 7.6 8.3 7.5 8.5 9.1 9.0 8.0 7.0 6.0 8.3 8.2 94.8
சராசரி பனிபொழி நாட்கள்(≥ 1.0 cm) 13.9 10.0 4.0 0.4 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 2.7 8.3 39.3
சூரியஒளி நேரம் 60.9 90.1 131.5 173.8 228.0 222.8 241.8 239.2 167.6 131.2 65.5 52.0 1,804.4
ஆதாரம்: மத்திய வானிலை மற்றும் புவி ஆராய்ச்சி மையம் [2]

மதங்கள்[தொகு]

வியன்னாவில் ரோமானிய கத்தோலிக்கர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர். 2001 உலக மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 49.2 விழுக்காடு மக்கள் ரோமானிய கத்தோலிக்கர்களாகவும், 25.7 விழுக்காடு மககள் எம்மதத்தையும் சாராதவர்களாகவும், 7.8 விழுக்காடு மக்கள் இசுலாமிய இனத்தவராகவும், 0.5 விழுக்காடு மக்கள் யூத இனத்தவராகவும் எஞ்சியுள்ளோர் பிற இனத்தைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர்[3]. ரோமானிய கத்தோலிக்கை பின்பற்றுவோரின் சராசரி எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் குறைந்து வருகின்றது. 1961ம் ஆண்டில் 90 விழுக்காடு இருந்த மக்கள், 2010 ஆண்டில் 90 விழுக்காடு மக்களே உள்ளனர்[4].

நுண்கலை பயிற்சியகம்

கல்வி நிலையங்கள்[தொகு]

ஆஸ்திரிய நாட்டின் பிராதான கல்வியின் தலைநகரமாக விளங்குகின்றது.

உயர் பல்கலைக்கழகங்கள்[தொகு]

 • நுண்கலைப் பயிற்சியகம்
 • பட்டயப் பயிற்சியகம், வியன்னா
 • வியன்னா மருத்துவப் பல்கலைக்கழுகம்
 • பி.இ.எப். தனியார் நிர்வாகப் பல்கலைக்கழகம்
 • வியன்னா செயற்கலை பல்கலைக்கழகம்
 • வியன்னா செயற் அறிவியல் பல்கலைக்கழகம்
 • வியன் செயற் அறிவியல் பல்கலைக்கழகம்
 • இசை மற்றும் கலை பல்கலைக்கழகம், வியன்னா
 • கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வியன்னா
 • வியன்னா பல்கலைக்கழகம்
 • வியன்னா வணிகம் மற்றும் வர்த்தக பல்கலைக்கழகம்
 • இயற்கை வளங்கள் மற்றும் பயன்பாட்டு வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழகம், வியன்னா
 • வியன்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
 • வலைதளப் பல்கலைக்கழகம், வியன்னா
 • சிக்முன்டு ப்ரியுது பல்கலைக்கழகம், வியன்னா
 • பன்னாட்டு ஊழல் தடுப்புப் பயிற்சியகம்

பன்னாட்டுக் கல்வி நிலையங்கள்[தொகு]

 • AMADEUS பன்னாட்டுப் பள்ளி, வியன்னா
 • அமெரிக்க பன்னாட்டுப் பள்ளி, வியன்னா
 • தானோபி பன்னாட்டுப் பள்ளி
 • பன்னாட்டுப் பல்கலைக்கழகம், வியன்னா
 • ஒலி பொறியியல் பள்ளி, வியன்னா
 • லாதர் வர்த்தகப் பள்ளி
 • லைசி பிரான்கா பள்ளி, வியன்னா
 • வியன்னா கிருத்துவப் பள்ளி
 • வியன்னா பல்கலைப் பள்ளி
 • விழி காட்டுப் பல்கலைக்கழகம்
 • பெரும்போக்கு பன்னாட்டுப் பல்கலைக்கழகம்

காட்சியகம்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "Wien International website: History". Wieninternational.at (15 May 2008). பார்த்த நாள் 13 June 2010.
 2. "Klimadaten von Österreich 1971 - 2000 - Wien-Hohe Warte" (German). மத்திய வானிலை மற்றும் புவி ஆராய்ச்சி மையம். பார்த்த நாள் 2012-09-06.
 3. (in German) (PDF) Volkszählung. Hauptergebnisse I – Wien. Statistik Austria. 2003. ftp://www.statistik.at/pub/neuerscheinungen/vz01wien_web.pdf. பார்த்த நாள்: 2011-09-23. 
 4. "Bis 2031 nur noch jeder Zweite katholisch". Diepresse.com. பார்த்த நாள் 3 June 2011.
வியன்னா
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியன்னா&oldid=1830301" இருந்து மீள்விக்கப்பட்டது