உள்ளடக்கத்துக்குச் செல்

மான்டெக் சிங் அலுவாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்டெக் சிங் அலுவாலியா
திட்டக் குழு துணைத் தலைவர்
பதவியில்
சூலை 6, 2004 – 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்கே. சி. பந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 நவம்பர் 1943 (1943-11-24) (அகவை 81)
புது தில்லி
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்இஷர் ஜட்ஜ் அலுவாலியா
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம் இளங்கலை)
மாக்டெலன் கல்லூரி, ஆக்சுபோர்டு
(முதுகலை & முதுதத்துவமாணி)
வேலைபொருளியலாளர்
ஆட்சிப் பணியாளர்

மான்டெக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia, பிறப்பு: நவம்பர் 24, 1943) ஓர் இந்தியப் பொருளியலாளரும் ஆட்சிப் பணி அதிகாரியும் ஆவார். இவர் முன்னாள் இந்தியத் திட்டக்குழுவின் துணைத் தலைவர். முன்னதாக அனைத்துலக நாணய நிதியத்தில் தன்னாட்சியான மதிப்பீடு அலுவலகத்தின் முதல் இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

மான்டெக் சிங் அலுவாலியா பாக்கித்தானின் ராவல்பிண்டியில் வங்காள மற்றும் பஞ்சாபி கலப்புக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் செகந்தராபாத்திலுள்ள புனித பாட்றிக் உயர்நிலைப் பள்ளியிலும் தில்லி மதுரா சாலையிலுள்ள தில்லி பப்ளிக் ஸ்கூலிலும் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும் கல்வி கற்றார். கலையில் இளங்கலைப் பட்டத்தை தில்லியின் புனித இசுடீபன் கல்லூரியிலும் (தில்லி பல்கலைக்கழகம்) முதுகலைப் பட்டத்தையும் முதுதத்துவமாணி பட்டத்தையும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டெலன் கல்லூரியிலும் பெற்றார். ஆக்சுபோர்டில் இருந்தபோது மதிப்புமிக்க ஆக்சுபோர்டு சங்கத்தின் தலைவராக இருந்தார். The 164-ஆண்டு-தொன்மையான இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி பெருமைப் படுத்தி உள்ளது.[1]

பணிவாழ்வு

[தொகு]

அலுவாலியா, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றபிறகு, உலக வங்கியில் சேர்ந்தார். 28ஆம் அகவையிலேயே உலக வங்கியின் அலுவலக முறைமையில் மிக இளமையான "கோட்டத் தலைவராக" விளங்கினார்.

அனைத்துலக நாணய நிதியத்தில் சேர்வதற்கு முன்னதாக இந்தியத் திட்டக்குழுவில் உறுப்பினராக அலுவாலியா இருந்து வந்தார். இந்தியப் பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

இந்தியக் குடியியல் பணிகளில் இல்லாத அலுவாலியா நடுவண் அரசில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்:

  • செயலாளர், நிதி அமைச்சகம்
  • செயலாளர், பொருளியல் விவகாரத் துறை
  • செயலாளர், வணிக அமைச்சகம்
  • பிரதமருக்கானச் சிறப்புச் செயலாளர், திரு. இராசீவ் காந்தி
  • நிதி அமைச்சகத்தின் பொருளாதார அறிவுரையாளர்.

வாசிங்டனில் உள்ள செல்வாக்கு மிக்க நிதி அறிவுரை அமைப்பான முப்பதின்மர் குழுவில் (Group of Thirty) உறுப்பினராவார்.

தனி வாழ்வு

[தொகு]

அலுவாலியா சக பொருளாதார அறிஞர் இஷேர் ஜட்ஜ் அலுவாலியாவை திருமணம் புரிந்து இரண்டு மக்களுக்கு தந்தையாக உள்ளார்.[2] [3][4][5]

விருதுகளும் பெருமைகளும்

[தொகு]
விருது வழங்கப்பட்ட ஆண்டு விருதின் பெயர் வழங்கியவர்
2011 அறிவியல் முனைவர் கௌரவப் பட்டம் இ.தொ.க ரூர்க்கி.[1]
2011 பத்ம விபூசண் இந்தியக் குடியரசுத் தலைவர்.
2008 குடியியல் சட்ட முனைவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்.

விமரிசனம்

[தொகு]

நகர்புறப் பகுதிகளில் மாதத்திற்கு ரூ. 859.6 செலவு செய்பவர்களும் ஊரகப் பகுதிகளில் ரூ. 672.8 செலவு செய்பவர்களும் ஏழைகள் அல்ல என வரையறுத்த அதே வேளையில் தமது அலுவலகத்தில் இரு கழிவறைகளின் மேம்பாட்டிற்காக 35 இலட்சம் ருபாய்களை செலவு செய்ததற்காக அலுவாலியா இந்திய ஊடகங்களாலும் செயற்பாட்டாளர்களாலும் பொதுமக்களாலும் விமரிசனம் செய்யப்பட்டார். ஊடகங்கள் திட்டக்குழுவின் வறுமைக்கோட்டிற்கான வரையறை முற்றிலும் நடைமுறைக்கு ஒவ்வாததது என குறை கூறியுள்ளனர். ஏழைகளுக்கு ஒரு சீர்தரத்தையும் செல்வமிக்கவர்களுக்கு வேறொரு சீர்தரத்தையும் வரையறுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.[6][7][8][9]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Doctorate, Ahluwalia (12 November 2011). "Ahluwalia awarded Honorary Doctorate". Zee news. http://zeenews.india.com/news/uttarakhand/ahluwalia-awarded-honorary-doctorate_741509.html. பார்த்த நாள்: 12 November 2011. 
  2. . http://www.indianexpress.com/oldStory/48765/. 
  3. . http://www.thehindu.com/opinion/columns/sainath/article3439624.ece. 
  4. . http://www.thehindu.com/opinion/op-ed/article3449609.ece. 
  5. . http://www.thehindu.com/opinion/op-ed/article3449607.ece. 
  6. "Planning Commission further lowers poverty line to Rs. 28 per day". என்டிடிவி. 2012 இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320052743/http://www.ndtv.com/article/india/planning-commission-further-lowers-poverty-line-to-rs-28-per-day-187729. பார்த்த நாள்: 2012-03-19. 
  7. "India's poverty line now lowered to Rs 28 per day". சிஎன்என்-ஐபிஎன். 2012 இம் மூலத்தில் இருந்து 2012-03-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120322031851/http://ibnlive.in.com/news/indias-poverty-line-now-lowered-to-rs-28-per-day/240737-3.html. பார்த்த நாள்: 2012-03-19. 
  8. "Rs. 35 lakh spending: 50-yr-old toilets needed repair, says Montek Singh Ahluwalia". என்டிடிவி. 2012 இம் மூலத்தில் இருந்து 2012-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120606093959/http://www.ndtv.com/article/india/planning-commission-spends-rs-35-lakh-to-renovate-two-toilets-in-delhi-227824. பார்த்த நாள்: 2012-06-07. 
  9. "Rs 35 lakh toilet renovation routine maintenance: Plan Panel". Indiatimes. 2012. http://economictimes.indiatimes.com/news/politics/nation/rs-35-lakh-toilet-renovation-routine-maintenance-plan-panel/articleshow/13866364.cms. பார்த்த நாள்: 2012-06-07. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்டெக்_சிங்_அலுவாலியா&oldid=3635555" இலிருந்து மீள்விக்கப்பட்டது