கிசன் மகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிசன் மகராஜ்
பிறப்பு3 செப்டம்பர் 1923
வாரணாசி, ஒன்றிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு4 மே 2008(2008-05-04) (அகவை 84)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
இசைக்கருவி(கள்)கைம்முரசு இணை
இசைத்துறையில்1934–2008

பண்டிட் கிசன் மகாராஜ் (Pandit Kishan Maharaj) (3 செப்டம்பர் 1923 - 4 மே 2008) இவர் ஓர் இந்திய கைம்முரசுக் கலைஞராவார். மேலும், இந்துஸ்தானி இசையின் பனாரசு கரானாவைச் சேர்ந்தவர். [1] [2]

ஆரம்பகால வாழ்க்கையும், பின்னணியும்[தொகு]

இவர், வாரணாசியின் கபீர் சௌராவில் தொழில்முறை இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். [1] ஆரம்பத்தில் இவரது தந்தை ஹரி மகாராஜாவால் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். இவரது தந்தை இறந்த பிறகு, இவரது மாமா காந்தே மகாராஜாவால் இவருக்கு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இசை வாழ்க்கை[தொகு]

இவர் தனது பதினொரு வயதில், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். சில ஆண்டுகளில், பயாசு கான், ஓம்கார்நாத் தாக்கூர், படே குலாம் அலி கான், பீம்சென் ஜோஷி, ரவிசங்கர், அலி அக்பர் கான், வசந்த் ராய், விலாயத் கான், கிரிஜா தேவி, சித்தாரா தேவி போன்ற பலருடன் மேடையை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இவருக்கு குறுக்கு தாளங்களை வாசிக்கும் மற்றும் சிக்கலான கணக்கீடுகளை உருவாக்கும் திறன் இருந்தது. குறிப்பாக 'திஹாய்' வடிவங்களில். இவர், எந்த இசைக்கலைஞருடனும் இணைந்து நிகழ்ச்சியினை நிகழ்த்தும் ஒரு பல்துறைதக் கலைஞராவார். அது சித்தார், சரோத், துருபத், தமர் அல்லது நடனத்துடன் கூட இருக்கலாம்.

இவர், தனது தொழில் வாழ்க்கையில் பல தனி இசை நிகழ்ச்சிகளை வழங்கினார், மேலும் சம்பு மகாராஜ், சித்தாரா தேவி, நட்ராஜ் கோபி கிருட்டிணா, பிர்ஜு மகராஜ் போன்ற சில சிறந்த நடனக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவரது அனைத்து இசையமைப்பிலும், மிருதங்கம் வித்வானான பாலக்காடு ஆர். ரகு அவர்களின் தாள வாத்தியக் க்ச்சேரி தனித்து நின்றது. 1965 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த எடின்பர்க் திருவிழா மற்றும் காமன்வெல்த் கலை விழா உட்பட உலகம் முழுவதும் பல மதிப்புமிக்க நிகழ்வுகளில் இவர் விரிவாக சுற்றுப்பயணம் செய்து பங்கேற்றார்.

இவருக்கு 1973இல் பத்மசிறீ விருதும், 2002இல் பத்ம விபூசண் விருதும் வழங்கப்பட்டது. [3] வாரணாசியைச் சேர்ந்த கைம்முரசு இணைக் கலைஞர் பண்டிட் அனோகே லால் மிசுவின் மருமகள் பீனாதேவி என்பவரை மணந்தார்.

இறப்பு[தொகு]

இவர், 2008 மே 4 அன்று வாரணாசிக்கு அருகிலுள்ள கஜூரியில் தனது 84 வயதில் இறந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசன்_மகராஜ்&oldid=3054180" இருந்து மீள்விக்கப்பட்டது